Published:Updated:

மிஸ்டர் மியாவ்

பிரபாஸ் - அனுஷ்கா
பிரீமியம் ஸ்டோரி
பிரபாஸ் - அனுஷ்கா

‘பிகில்’ படத்தின் படப்பிடிப்பையும் டப்பிங்கையும் விஜய் விரைந்து முடித்து வருகிறார்

மிஸ்டர் மியாவ்

‘பிகில்’ படத்தின் படப்பிடிப்பையும் டப்பிங்கையும் விஜய் விரைந்து முடித்து வருகிறார்

Published:Updated:
பிரபாஸ் - அனுஷ்கா
பிரீமியம் ஸ்டோரி
பிரபாஸ் - அனுஷ்கா
  • எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி தயாரித்து நடிக்கும் ‘லாபம்’ படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் சாய் தன்ஷிகா. ஜனநாதன் இயக்கும் படங்களில் வீரமான பெண் கதாபாத்திரங்கள் இடம்பெறுவது வழக்கம். தன்ஷிகாவும் பல தற்காப்புக் கலைகளைக் கற்றவர் என்பதால், படத்தில் நிச்சயமாக ஒரு ஆக்‌ஷன் பெண்மணியாக வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மிஸ்டர் மியாவ்
  • லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகவிருக்கும் விஜய்யின் 64-வது படத்துக்காக, ‘பிகில்’ படத்தின் படப்பிடிப்பையும் டப்பிங்கையும் விஜய் விரைந்து முடித்து வருகிறார். `விஜய் இல்லாத காட்சிகளையெல்லாம் அவர் படப்பிடிப்பில் இணைவதற்கு முன்பே படமாக்கிவிடலாம் என படக்குழு முடிவெடுத்துள்ளதால், படப்பிடிப்பு இன்னும் சில நாள்களில் தொடங்கிவிடும்’ என்கின்றனர். ‘பிகில்’ பணிகளுக்குப் பிறகு, சிறிய பிரேக் எடுத்துக்கொள்ளும் விஜய், 30 நாள்கள் நடக்கவிருக்கும் முதல்கட்டப் படப்படிப்பின் கடைசி சில நாள்களில் பங்கேற்பார் என்றும் சொல்லப்படுகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
  • தொடர் படத்தோல்விகளால் `சர்க்கார்’ படத்துக்குப் பிறகு தமிழ்ப் பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்த நடிகை கீர்த்தி சுரேஷ், ‘மகாநடி’க்கான தேசிய விருது பெற்ற தெம்போடு, மீண்டும் தமிழுக்கு வருகிறார். இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் தயாரிக்கும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் கீர்த்தி.

சாய் தன்ஷிகா
சாய் தன்ஷிகா
  • ``வைஜெயந்தி ஐ.பி.எஸ்’ பட ஸ்டைலில் `ஜான்சி ஐ.பி.எஸ்’ என்ற கன்னடப் படத்தில் நடித்துள்ளார் ராய் லட்சுமி. படத்தின் முன்னோட்டம் வெளியான பத்து மணி நேரத்துக்குள்ளேயே, அதன் இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு டப்பிங் உரிமைகளைக் கோரி பல நிறுவனங்கள் வரிசைக்கட்டி நிற்கின்றனவாம். இதனால், படத்தின் ரேட் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே போகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பிரபாஸ் - அனுஷ்கா
பிரபாஸ் - அனுஷ்கா
  • பத்து ஆண்டுகளுக்கும் மேலாக நண்பர்களாக இருந்து, பிறகு காதலர்கள் ஆன ‘பாகுபலி’ பிரபாஸ் மற்றும் அனுஷ்கா, தற்போது லாஸ் ஏஞ்சலஸ் நகரில் தங்களுக்கென பண்ணை வீடு ஒன்றை வாங்கவிருக்கின்றனர். தன் நடிப்பில் விரைவில் வெளியாகவிருக்கும் ‘சாஹோ’ படத்தை அனுஷ்காவுக்காக ஸ்பெஷலாகப் போட்டுக்காட்டியுள்ளார் பிரபாஸ்.

கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷ்
ராய் லட்சுமி
ராய் லட்சுமி

ம்யூட்

  • தளபதி நடிகர் ஹீரோவோக நடிக்கும் படத்தை சொன்ன தேதியில் முடித்துக் கொடுக்காததோடு, சொன்னதைவிடவும் செலவை எக்கச்சக்கமாக இழுத்துவிட்டுள்ளதால். மெர்சலான இயக்குநர்மீது கோபத்தில் இருக்கிறதாம் தயாரிப்பு நிறுவனம். அதனால், படத்தை விரைவாக முடித்துக்கொடுக்கச் சொல்லி இயக்குநருக்கு அழுத்தம் கொடுத்துவருகிறதாம்.

  • அண்மையில் வெளியான அல்டிமேட் நடிகரின் படத்தை பெண்கள் கொண்டாடினாலும், பி அண்ட் சி ஆடியன்ஸிடம் படத்தின் கருத்து சரியாகப் போய்ச் சேரவில்லை என்பதால், சென்னை, திருச்சி, கோவை போன்ற நகரங்களைத் தாண்டி மற்ற ஊர்களில் பெரிய லாபம் ஈட்டவில்லையாம். அதனால், அதே கூட்டணியில் உருவாகவிருக்கும் அடுத்த படத்தை எல்லா வகையான ரசிகர்களும் ரசிக்கும்படி எடுக்கவேண்டும் என இயக்குநரிடம் கண்டிப்பாகச் சொல்லிவிட்டாராம் தயாரிப்பாளர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism