Published:Updated:

மிஸ்டர் மியாவ்

விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர்

பிரீமியம் ஸ்டோரி
  • இயக்குநர் கண்ணனின் புதிய படத்தில் அதர்வா, அனுபமா பரமேஸ்வரன் இருவரும் ஜோடியாக நடித்துக்கொண்டிருக்கிறார்கள். பெயரிடப்படாத இந்தப் படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு சென்னையில் முடிவடைந்திருக்கும் நிலையில், அடுத்தகட்டப் படப்பிடிப்புக்காக ரஷ்யா செல்கிறது படக்குழு.

அனுபமா பரமேஸ்வரன்
அனுபமா பரமேஸ்வரன்
  • சினிமாவிலிருந்து ஒதுங்கி இருந்த நடிகர் வடிவேலு, நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்குநர் சுராஜின் புதிய படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். ஆனால், ஏற்கெனவே ‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ படத்தின் பிரச்னைகள் தொடர்கதையாக நீண்டுகொண்டிருப்பதால், `அவர் இந்தப் படத்தில் நடிக்க தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் ஒத்துழைக்குமா?’ என்று கேள்வி கோலிவுட்டில் எழுந்துள்ளது.

  • சைக்கிளிங் பிரியரான ஆர்யா, தற்போது பிரான்ஸ் நாட்டில் நடக்கவிருக்கும் ‘பாரிஸ் பிரெஸ்ட் பாரிஸ்’ என்ற மாபெரும் சைக்கிள் போட்டியில் கலந்துகொள்கிறார். சுமார் 6,000 பேர் கலந்துகொள்ளவிருக்கும் மாபெரும் சைக்கிளிங் போட்டி இது.

  • ‘தாதா 87’ இயக்குநர் விஜய்ஸ்ரீ அடுத்ததாக ‘பப்ஜி’ என்ற திரைப்படத்தை எடுக்கிறார். ஹீரோயினை மையப்படுத்திய இந்தக் கதையில், ஐஸ்வர்யா தத்தா முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஆண்ட்ராய்டு மொபைல் கேமான ‘பப்ஜி’யை மையப்படுத்தி உருவாகும் இந்தப் படத்தில் ஜூலியும் நடிக்கிறார்.

  • ‘வாமனன்’, ‘என்றென்றும் புன்னகை’, ‘மனிதன்’ ஆகிய படங்களை இயக்கிய அஹமத், அடுத்ததாக ஜெயம் ரவியை வைத்து ‘ஜன கண மன’ என்ற படத்தை இயக்குகிறார். ஜெயம் ரவிக்கு ஜோடி டாப்ஸியாம்.

ஜான்வி கபூர்
ஜான்வி கபூர்
  • பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் தெலுங்குப் படத்தில் நடிக்கவிருக்கிறார். தென்னிந்தியா சினிமாவில் ஜான்வி கபூர் நடிக்கும் முதல் படம் இது என்பதால், படத்துக்கான எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ம்யூட்

  • ஆன்மிக குருவைக் கிண்டல் செய்யும்விதமாக வெளியான காமெடி நடிகரின் போஸ்டருக்கு சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றன. ஹீரோவாக நடித்த படமும் இப்படி சில அரசியல் அமைப்புகளால் விமர்சிக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டி, ‘அரசியல்வாதிங்ககிட்ட சூதானமா இருந்துக்கோங்க’ என்று நடிகரின் நட்புவட்டம் அட்வைஸ் மழை பொழிந்திருக்கிறது.

  • உச்ச நடிகரின் பெண்ணியப் படத்துக்குக் கிடைத்திருக்கும் வரவேற்பால் உற்சாகத்தில் இருக்கிறார் நடிகர். ‘இனி சமூகக் கருத்துள்ள படங்களில் மட்டுமே நடிப்பேன்’ என முடிவு எடுத்திருக்கும் அவரிடம், அரசியல் கதையைச் சொல்லியிருக்கிறார், கங்கை மைந்தன். ‘நோ பாலிடிக்ஸ்’ என்று மறுத்துவிட்டாராம் நடிகர்.

  • ஒல்லி நடிகருடனான உறவிலிருந்து மீண்டு வந்திருக்கிறார், பாடகி ஹீரோயின். நடிகரால் மிகுந்த மனஉளைச்சலில் இருப்பதாக சக நண்பர்களுடன் புலம்பிக்கொண்டிருந்த அவரை, மீண்டும் புத்துணர்ச்சி யுடன் நடிக்கச் சொல்லி உற்சாகப்படுத்தியிருக்கிறார்கள் நண்பர்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு