உடல் எடையை அதிரடியாகக் குறைத்து, பக்கா ஃபிட்னஸுடன் போட்டோஷூட் கொடுத்திருக்கிறார் ஹன்சிகா. தமிழில் மீண்டும் டாப் ஹீரோக்களுடன் ஜோடி போட வேண்டும் என்பது ஹன்சிகாவின் விருப்பமாம்.

‘இந்தியன் 2’, ‘மாஃபியா’, ‘குருதி ஆட்டம்’, ‘கசட தபற’ என வரிசையாக படங்களில் கமிட்டாகி இருக்கும் பிரியா பவானி சங்கர், அடுத்து செல்வா இயக்கும் படத்திலும் நடிக்கிறார். ஹீரோ, விஷ்ணு விஷால்.

‘அருவி’ படத்துக்குப் பிறகு காணாமல்போயிருந்த அதிதி பாலன், மல்லுவுட்டில் தடம் பதிக்கிறார். நிவின் பாலி ஹீரோவாக நடிக்கும் ‘படவெட்டு’ படத்தின் நாயகி அதிதிதான்.

விஜய் சேதுபதியுடன் ‘மாமனிதன்’ படத்தை எடுத்து முடித்துவிட்ட இயக்குநர் சீனு ராமசாமி, அடுத்ததாக மலையாள நடிகர் ஷேன் நிகமை ஹீரோவாக தமிழில் அறிமுகப்படுத்துகிறார். ஷேன், மலையாளத்தில் ஹிட் அடித்த ‘கும்பளாங்கி நைட்ஸ்’ படத்தில் நடித்தவர். இவர்கள் இருவரும் இணையும் படத்தின் ஷூட்டிங் டிசம்பரில் தொடங்குகிறது.

பிரபல ஸ்டன்ட் மாஸ்டரான பீட்டர் ஹெய்ன், இயக்குநராகிறார். தமிழில் அல்ல... தெலுங்கில். பிரபல நடிகர்களுடன் பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கிறதாம்.

‘இது வேதாளம் சொல்லும் கதை’ படத்தை இயக்கிய ரதீந்தரன் ஆர்.பிரசாத் படத்தில் நடிக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். தயாரிப்பு, கார்த்திக் சுப்பராஜ். ஊட்டியில் படப்பிடிப்பு தொடங்கியிருக்கிறது.

ம்யூட்

தான் இயக்கிய படங்கள் அடுத்தடுத்து பணப்பிரச்னை காரணமாக ரிலீஸாகாமல் தள்ளிப்போவதால், இனி படங்களில் நடிப்பது என்ற முடிவுக்கு வந்துவிட்டாராம் ஸ்டைலிஷ் இயக்குநர்!

பாலிவுட்டைக் கலக்கிய நம்ம ஊரு நடிகையின் மகளும் தற்போது அங்கே களத்தில் இருக்கிறார். அவரை தமிழில் அறிமுகப்படுத்த பல இயக்குநர்கள் வரிசைகட்டுகிறார்களாம். ஆனால், மகள் நடிக்க அப்பா சொல்லும் சம்பளம்தான் மயங்கி விழவைக்கிறதாம்.