Published:Updated:

மிஸ்டர் மியாவ்

கங்கனா
பிரீமியம் ஸ்டோரி
கங்கனா

ஜெயலலிதாவின் பயோபிக் படமான, ‘தலைவி’யில் கங்கனா ஹீரோயினாக நடிக்கிறார்

மிஸ்டர் மியாவ்

ஜெயலலிதாவின் பயோபிக் படமான, ‘தலைவி’யில் கங்கனா ஹீரோயினாக நடிக்கிறார்

Published:Updated:
கங்கனா
பிரீமியம் ஸ்டோரி
கங்கனா

* ‘8 தோட்டாக்கள்’ படத்தில் நடித்த வெற்றி, தற்போது அறிமுக இயக்குநர் கோபிநாத் இயக்கத்தில் நடித்த ‘ஜீவி’ படமும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தப் படம் இந்தி மற்றும் தெலுங்கிலும் ரீமேக் ஆகவிருக்கிறது.

* மணிரத்னம் தயாரிப்பில், இயக்குநர் தனசேகர் இயக்கிக்கொண்டிருக்கும் ‘வானம் கொட்டட்டும்’ படத்தில் விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ், மடோனா செபாஸ்டியன் ஆகியோர் நடித்துக்கொண்டிருக்கிறார்கள். இந்தப் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார், பாடகர் சித்ஸ்ரீராம். இந்தப் படத்தில், ஏற்கெனவே கோவிந்த் வசந்தா இசையமைப்பாளராக கமிட்டாகி, சில காரணங்களால் விலகியது குறிப்பிடத்தக்கது.

மிஸ்டர் மியாவ்

* இயக்குநர் விஜய் இயக்கவிருக்கும் ஜெயலலிதாவின் பயோபிக் படமான, ‘தலைவி’யில் கங்கனா ஹீரோயினாக நடிக்கிறார். இந்தப் படத்துக்காக மும்பையில் ஆக்டிங் வொர்க்‌ஷாப் ஒன்றில் பங்கேற்று பயிற்சி எடுத்துக்கொண்டிருக்கிறார், கங்கனா. அக்டோபர் முதல் வாரத்தில் ‘தலைவி’ ஷூட்டிங் தொடங்குகிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

* ராகவா லாரன்ஸின் தம்பி எல்வின் ஹீரோவாக அறிமுகம் ஆகவிருக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கும் இந்தப் படத்தை, அறிமுக இயக்குநர் பாபு இயக்குகிறார்.

அமலா பால்
அமலா பால்

* அமலா பால் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் ‘ஆடை’ படத்துக்காக அமலா பாலும், தொகுப்பாளினி ரம்யாவும் லிப்-லாக் செய்துகொள்ளும் போஸ்டர், தற்போது வைரலாகிக்கொண்டிருக்கிறது.

ம்யூட்

* சாதியை முன்னிலைப்படுத்தி படங்களை இயக்கிய நான்கெழுத்து இயக்குநர், தன் இயக்கத்தில் ‘பையா’ நடிகர் நடித்து ஹிட்டான படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் முயற்சியில் இருக்கிறார். முதல் பாகத்தைத் தயாரித்த நிறுவனம் இந்த முயற்சிக்கு செவிசாய்க்காத நிலையில், வேறொரு தயாரிப்பாளரைத் தேடிக்கொண்டிருக்கிறார்.

* இம்சையில் சிக்கியிருக்கும் காமெடி நடிகர், அடுத்து பிரமாண்ட இயக்குநர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம் என்ற முடிவில் இருக்கிறாராம். ஏற்கெனவே பல்வேறு சிக்கலில் இருக்கும் அந்தப் படம், இவரது இந்த முடிவால் ‘என்ன நிலை ஆகப்போகிறதோ’ என்ற கவலையில் இருக்கிறார்கள், காமெடி நடிகரின் ரசிகர்கள்.

* பெயரில் கருவைச் சுமக்கும் இயக்குநர், இயக்குநர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்குப் போட்டியிடலாம் என்ற முடிவில் இருக்கிறாராம். சமீபத்தில் நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில் காரசாரமாகப் பேசி, கவனத்தைத் தன் பக்கம் திருப்பியிருக்கிறார் என்கிறார்கள், விபரம் அறிந்தவர்கள்.