Published:Updated:

மிஸ்டர் மியாவ்

காஜல் அகர்வால்
பிரீமியம் ஸ்டோரி
காஜல் அகர்வால்

ஜெய் நடிக்கவிருக்கும் படத்தில், அதுல்யா ஹீரோயினாக கமிட் ஆகியிருக்கிறார்.

மிஸ்டர் மியாவ்

ஜெய் நடிக்கவிருக்கும் படத்தில், அதுல்யா ஹீரோயினாக கமிட் ஆகியிருக்கிறார்.

Published:Updated:
காஜல் அகர்வால்
பிரீமியம் ஸ்டோரி
காஜல் அகர்வால்

* ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் ‘இந்தியன் 2’ திரைப்படத்தை 2021-ம் ஆண்டு பொங்கல் தினத்தில் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டிருக்கிறார்கள். இந்தப் படத்தில் காஜல் அகர்வால் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகியிருந்த நிலையில், முக்கிய கேரக்டர் களில் நடிக்க ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் பிரியா பவானி சங்கர் ஆகியோர் கமிட் ஆகியிருக்கிறார்கள்.

அதுல்யா ரவி, பிரியா பவானி சங்கர்
அதுல்யா ரவி, பிரியா பவானி சங்கர்

* பிஸி ஹீரோயினாக வலம் வருகிறார், அதுல்யா ரவி. ‘நாடோடிகள் 2’, ‘அடுத்த சாட்டை’ படங்களுக்குப் பிறகு, தற்போது ஜெய்யுடன் ‘கேப்மாரி’ படத்தில் நடித்துவருகிறார் அதுல்யா. அடுத்ததாக, அறிமுக இயக்குநர் வெற்றிச்செல்வன் இயக்கத்தில் ஜெய் நடிக்கவிருக்கும் படத்திலும், அதுல்யா ஹீரோயினாக கமிட் ஆகியிருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

* நானி நடிப்பில் வெளியான தெலுங்குப் படம், ‘ஜெர்ஸி’. இதில் நானிக்கு ஜோடியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்தார். இந்தப் படம் தற்போது தமிழில் ரீமேக் ஆகவிருக்கிறது. நானி கேரக்டரில் விஷ்ணு விஷால் நடிக்கவிருக்கும் இந்தப் படத்தை, ‘ஒருநாள் கூத்து’, ‘மான்ஸ்டர்’ படங்களின் இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மிஸ்டர் மியாவ்

* நந்தினி ரெட்டி இயக்கத்தில் சமந்தா நடித்த ‘ஓ பேபி’ தெலுங்குப் படம் தற்போது, இந்தியில் ரீமேக் ஆகவிருக்கிறது. சமந்தா நடித்த கேரக்டரில் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜான்வி கபூர்,  தமன்னா,  ஐஸ்வர்யா ராஜேஷ்
ஜான்வி கபூர், தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ்

* நடிகை தமன்னா, தற்போது இந்தியில் நவாசுதீன் சித்திக்குடன் ‘போலே சுடியான்’ என்ற படத்தில் நடித்துவருகிறார். ‘நவாசுதீனின் தீவிர ரசிகை நான். அவருடன் ஒரே ஃப்ரேமில் தோன்றுவதே மகிழ்ச்சியாக உள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளார் தமன்னா.

* தெலுங்கில் ‘சை ரா நரசிம்ம ரெட்டி’ படத்தில் நடித்துவரும் சிரஞ்சீவி, அடுத்தாக கொரட்டல சிவா இயக்கவிருக்கும் படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்துக்கு ஐஸ்வர்யா ராய் ஹீரோயினாக கமிட் ஆகியிருப்பதால், படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஐஸ்வர்யா ராய் ஹீரோயினாக நடிக்கும் முதல் தெலுங்குப் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

ம்யூட்

* ஒரே ஒரு பாடல் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர், அக்கட பூமி நாயகி. தெலுங்கிலும் இவர் நடித்த படங் களின் எண்ணிக்கை குறைவுதான். தமிழில் இதுவரை எந்தப் படமும் வெளியாகவில்லை. ஆனாலும், நடிகையின் சம்பளம் கோடியைத் தொட்டிருக்கிறது. இதனால், சக நடிகைகள் இவர்மீது பொறாமை யில் இருக்கிறார்கள்.

* பிற மொழிப் படங்களைத் தமிழில் டப்பிங் செய்யும்போது, டப்பிங் கலைஞர்களைப் பயன்படுத் தாமல், பிரபல நடிகர்களைப் பயன்படுத்தும் நிலைகுறித்து, டப்பிங் கலைஞர்கள் வருந்து கிறார்கள். கோடியில் சம்பளம் வாங்கும் நடிகர்களே இப்படிச் செய்தால், டப்பிங் கலைஞர்களை யார் மதிப்பார்கள் என்பது அவர்களது ஆதங்கம்.