பிரீமியம் ஸ்டோரி
  • தன் 37-வது பிறந்தநாளை சில தினங்களுக்கு முன் விமர்சையாகக் கொண்டாடி முடித்துள்ளார், பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா. இந்த நிலையில், கணவர் நிக் ஜோனஸ், தாய் மதுசோப்ராவுடன் இணைந்து பிரியங்கா புகைபிடித்துக்கொண்டிருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி, வைரலாகியிருக்கிறது. ‘ஆஸ்துமா நோயாளியான நீங்களே இப்படிச் செய்யலாமா, பொறுப்புடன் நடந்துகொள்ளுங்கள்’ என்று கொதித்திருக்கிறார்கள் நெட்டிசன்கள்.

பிரியங்கா சோப்ரா
பிரியங்கா சோப்ரா
  • ‘தேவி 2’ படத்தைத் தொடர்ந்து நடிகை தமன்னா மீண்டும் ஒரு காமெடி ஹாரர் படத்தில் நடிக்க இருக்கிறார். ‘அதே கண்கள்’ ரோஹின் வெங்கடேசன் இந்தப் படத்தை இயக்குகிறார். ஜிப்ரான் இசையமைக்கவிருக்கும் இதில், முக்கிய கேரக்டரில் யோகி பாபு நடிக்கிறார்.

  • பல படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கும் விஜய் சேதுபதி, அடுத்ததாக பிரபல கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் ஹீரோவாக நடிக்கவிருக்கிறார்.

தமன்னா
தமன்னா
  • அரசியலில் பிஸியாக இருந்தாலும் சினிமாவிலும் நடிப்பு, இயக்கம் எனப் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கிறார் கமல். ‘இந்தியன் 2’ படத்தின் வேலைகள் தொடங்கியுள்ள நிலையில், ‘தலைவன் இருக்கின்றான்’ படப் பணிகளிலும் தீவிர கவனம் செலுத்திக்கொண்டிருக்கிறார். கமல் இரட்டை வேடத்தில் நடிக்கும் இந்தப் படத்தில் ‘அமைதிப்படை’ சத்யராஜ் பாணியில் ஒரு கேரக்டர் இருக்கும் என்கிறார்கள்.

ம்யூட்

  • வம்பு நடிகரை நடிக்கவைத்தால் என்ன ஆகும் என்று பார்ட்டி இயக்குநருக்கு இப்போது புரிந்திருக்கும் என்று கிசுகிசுக்கிறார்கள், சக இயக்குநர்கள். அவரை வைத்துத் தொடங்கிய அரசியல் படம் ஒன்று பாதியிலேயே நிற்பதுதான் காரணம். படம் தொடருமா, இல்லையா என்பது பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது.

  • போஸ்டரிலேயே பரபரப்பை ஏற்படுத்திய மில்க் நடிகை, படத்தின் ரிலீஸில் சில சிக்கல்கள் இருந்த காரணத்தால் தனது சம்பளத்தின் ஒரு பகுதியை விட்டுக்கொடுத்தாராம். நடிகையின் டெடிகேஷனைப் பார்த்து நெகிழ்ந்திருக்கிறார் இயக்குநர்.

  • பிரகாச நடிகரின் பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய பிரமாண்ட இயக்குநர், விவாதப் பொருளாகியிருக்கும் புதிய கல்விக்கொள்கை குறித்து எதுவும் பேசவில்லை. ‘படங்களில் அரசியல் பேசுபவர், நிஜத்திலும் பேசியிருக்க வேண்டாமா?’ என்று சீறுகிறார்கள் சக இயக்குநர்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு