Published:Updated:

மிஸ்டர் மியாவ்

காயத்ரி ஷங்கர்
பிரீமியம் ஸ்டோரி
காயத்ரி ஷங்கர்

தன் கதைகளுக்கான ஹீரோக்களை மட்டுமே அணுகுபவர் இயக்குநர் சீனு ராமசாமி.

மிஸ்டர் மியாவ்

தன் கதைகளுக்கான ஹீரோக்களை மட்டுமே அணுகுபவர் இயக்குநர் சீனு ராமசாமி.

Published:Updated:
காயத்ரி ஷங்கர்
பிரீமியம் ஸ்டோரி
காயத்ரி ஷங்கர்

‘வலிமை’ படத்தில் மீதமிருக்கும் சண்டைக் காட்சியை ஷூட் செய்ய, ரஷ்யாவைத் தேர்ந்தெடுத்திருக்கிறார் இயக்குநர் ஹெச்.வினோத். கொரோனா நெருக்கடிகள் மறுபடி அதிகமாகியிருக்கும் நேரத்தில், ரஷ்யப் பயணம் தேவையா என அஜித் தொடங்கி தயாரிப்பாளர் போனி கபூர் வரை யோசிக்க, ‘ரஷ்யாவில்தான் ஷூட்’ என்பதில் உறுதியாக நிற்கிறாராம் ஹெச்.வினோத். அதனால் மிகக் குறைவான யூனிட்டுடன் விரைவில் ரஷ்யா கிளம்புகிறது ‘வலிமை’ டீம்!

மிஸ்டர் மியாவ்

வெற்றிப்படம் கொடுத்தவுடனேயே முன்னணி ஹீரோக்களைத் தேடிப்போகும் இயக்குநர்களுக்கு மத்தியில், தன் கதைகளுக்கான ஹீரோக்களை மட்டுமே அணுகுபவர் இயக்குநர் சீனு ராமசாமி. கிராமப்புறம் என்றாலே பாசம், சென்டிமென்ட், அழுகாச்சி என்றிருக்கும் ஃபார்முலாவை மாற்றி, பக்கா ஆக்‌ஷன் த்ரில்லர் கதையை ரெடி செய்து, ஜி.வி.பிரகாஷை ஹீரோவாக்கியிருக்கிறார். வெற்றிக்காகப் பல காலமாகப் போராடும் காயத்ரி ஷங்கர்தான் ஜி.வி-க்கு இந்தப் படத்தில் ஜோடி.

மிஸ்டர் மியாவ்

பலவிதமான பிரச்னைகளுக்குப் பிறகு, அடுத்த படத்தில் இறங்கியிருக்கிறார் இயக்குநர் பாலா. கதாநாயகன் அதர்வா. கடந்த வாரம் கன்னியாகுமரி, முட்டம் உள்ளிட்ட பகுதிகளுக்குப் போய் லொகேஷன் பார்த்திருக்கிறார் பாலா. கதையைக் கேட்டு வியந்துபோன நடிகர் சூர்யா, தனது 2 டி நிறுவனத்திலேயே படத்தைத் தயாரிக்கிறார். அடுத்த மாதம் ஷூட்டிங் ஆரம்பம்!

தனுஷின் 44-வது படத்தை மித்ரன் ஜவஹர் இயக்குகிறார். படத்தில் தனுஷுக்கு மூன்று ஜோடிகள். ராஷி கண்ணா, நித்யா மேனன், பிரியா பவானி சங்கர் என மூன்று பேரையும் படக்குழு அறிவிக்க, தனுஷ் ரசிகர்கள் குஷியாகிவிட்டார்கள். படத்தின் கதைப்படி இரண்டு கதாநாயகிகள்தானாம். தனுஷ் சிபாரிசின் பேரில் கடைசிக்கட்டத்தில் படத்தில் இடம்பிடித்திருக்கிறார் பிரியா பவானி சங்கர். இதில் ராஷி கண்ணாவுக்கு சங்கடமாக, இயக்குநர் தரப்பில் சமாதானப்படுத்திவருகிறார்கள்.

உஷ்…

வெளிச்சமான நடிகர் தலைகாட்டினாலே படத்துக்கு நல்ல பிசினஸ் பேசப்படுகிறது. அதனால் அவர் கேட்கிற சம்பளத்தைக் கொடுக்க யாருக்கும் மறுப்பு இல்லை. ஆனால், அவர் கூடவே வருகிற ஆட்களுக்கு ஆகும் செலவுதான் அநியாயத்துக்கு அதிகமாம். விமான கட்டணம் தொடங்கி ரூம் வாடகை வரை அவருடன் சேர்த்து ஏழு பேருக்கு அழவேண்டியிருக்கிறதாம்! #நியாயமா செல்லம்?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism