ப்ரித்விராஜ் இயக்கத்தில் மலையாளத்தில் ஹிட் அடித்த திரைப்படம் ‘லூசிஃபர்’. தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் ‘எம்புரான்’ உருவாகியுள்ளது. இதற்கிடையே இந்தப் படத்தின் மூன்றாம் பாகமும் உருவாகும் என்று ப்ரித்விராஜ் கூறியுள்ளார். இரண்டு பாகங்களைவிட மூன்றாம் பாகம் விறுவிறுப்பாக இருக்கும் என்கிறார்கள்.
‘இறுதிச்சுற்று’ இயக்குநர் சுதா கொங்கராவுடன் ‘சூரரைப் போற்று’ படத்தின் ஷூட்டிங்கை முடித்துவிட்டார் நடிகர் சூர்யா. அடுத்தாக ‘சிறுத்தை’ சிவா படத்தில் நடிக்கவிருக்கிறார். அதற்குப் பிறகு பாலாவின் படத்தில் நடிக்கவும் ஓகே சொல்லியிருக்கிறாராம். அதில் சூர்யாவுடன் ஆர்யாவும் அதர்வாவும் நடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் ‘இந்தியன் 2’ படத்தில் காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், விவேக் என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் ஜொலிக்கவிருக்கிறார்களாம்.
‘நம்பி நாராயணன்’ படத்தை இயக்கி நடித்துக்கொண்டிருக்கும் நடிகர் மாதவன், தற்போது உற்சாகத்தில் இருக்கிறார். காரணம், அவரின் மகன் வேதாந்த். பெங்களூரில் நடந்து முடிந்திருக்கும் 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான ‘ஏஷியன் ஏஜ் குரூப் நீச்சல் சாம்பியன்ஷிப்’ போட்டியில் இந்தியா சார்பில் வேதாந்த் கலந்துகொண்டு வெள்ளிப்பதக்கத்தை வென்றுள்ளார்.
சினிமா வாழ்க்கையில் நடிகை அனுஷ்காவுக்கு திருப்புமுனையைத் தந்தது ‘அருந்ததி’ படம். ‘பாகுபலி’, அவரை அடுத்தடுத்த உயரங்களுக்குக் கொண்டுசென்றது. தற்போது ‘அருந்ததி’ இந்தியில் ரீமேக் ஆகிறதாம். அனுஷ்கா கதாபாத்திரத்தில் கரீனா கபூர் நடிப்பார் என்கிறார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSம்யூட்
பிரமாண்டமான நாவல் படத்தின் படப்பிடிப்பு தள்ளிப்போய்க்கொண்டே இருக்கிறது. இதனால் பலரும் படத்திலிருந்து விலக ஆரம்பித்திருக்கின்றனர். குறிப்பாக, அக்கட பூமி லேடி ஸ்டார் சம்பளம் பிரச்னை காரணமாக படத்திலிருந்து விலகுவதாகக் கூறியிருக்கிறாராம். அதிர்ச்சியிலிருக்கிறது படக்குழு!
தமிழ் சினிமாவுக்கு வந்து 20 வருடங்கள் ஆன ஸ்லிம் நடிகை நடித்த படங்கள் ரிலீஸாவதில், தற்போது பல சிக்கல்கள். இதனால், அப்செட்டில் இருக்கும் நடிகை, பரிகாரம் செய்ய தன் அம்மாவுடன் சேர்ந்து கோயில்களைத் தேடிக்கொண்டிருக்கிறாராம்.