Published:Updated:

மிஸ்டர் மியாவ் - ஷிவானி

ஷிவானி
பிரீமியம் ஸ்டோரி
ஷிவானி

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அப்துல் ரசாக்குடன் காதல் எனக் கிசுகிசுக்கப்பட்டார் நடிகை தமன்னா

மிஸ்டர் மியாவ் - ஷிவானி

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அப்துல் ரசாக்குடன் காதல் எனக் கிசுகிசுக்கப்பட்டார் நடிகை தமன்னா

Published:Updated:
ஷிவானி
பிரீமியம் ஸ்டோரி
ஷிவானி

விவகாரத்து சர்ச்சைகள் ஒருபுறமிருக்க, தீவிரமான கதை ஒன்றைக் கையில் எடுத்திருக்கிறாராம் ரஜினி மகள் ஐஸ்வர்யா. சமாதானப் பேச்சுவார்த்தைகளை தனுஷ் தரப்பில் அவர் தந்தை கஸ்தூரி ராஜா செய்துவரும் நிலையில், பல காலமாகத் தன் மனதிலிருக்கும் கதை எனச் சொல்லி, டைரக்‌ஷன் வேலைகளை ஸ்டார்ட் செய்கிற மூடில் இருக்கிறார் ஐஸ்வர்யா. மகளின் மனநிலை டைவர்ட் ஆனால் சரி எனச் சொல்லி ரஜினியும் இந்த முடிவுக்குச் சம்மதித்திருக்கிறார்!

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அப்துல் ரசாக்குடன் காதல் எனக் கிசுகிசுக்கப்பட்டார் நடிகை தமன்னா. அது உண்மையா பொய்யா என இருவருமே விளக்கம் சொல்லாத நிலையில், ‘தொழிலதிபருடன் திருமணம்’ என தமன்னா குறித்து அடுத்த பரபரப்பு கிளம்பிவிட்டது. “காதலையோ, திருமணத்தையோ நான் மறைக்கவேண்டிய அவசியமில்லை. என் முழு கவனமும் சினிமாவில் இருக்கும்போது, இப்படிப்பட்ட வதந்திகள் ஏன் கிளம்புகின்றன என்றே தெரியவில்லை” என நெருக்கமான ஊடக நண்பர்களிடம் பேசி வருத்தப்படும் தமன்னா, தன் தனித்துவத்தை நிரூபிக்கும்விதமாக அட்டகாசமான கதையொன்றில் நடிக்க வேண்டும் எனவும், அதன் பிறகுதான் திருமணம் எனவும் சொல்லியிருக்கிறாராம்!

மிஸ்டர் மியாவ் - ஷிவானி
மிஸ்டர் மியாவ் - ஷிவானி
மிஸ்டர் மியாவ் - ஷிவானி

ஆரம்பகாலத்தில், ராசியில்லாதவராகச் சித்திரிக்கப்பட்ட அருண் விஜய், படிப்படியாகத் தன் திறமையை நிரூபித்து கவனம்பெற்றார். தற்போது, ஹரி இயக்கத்தில் ‘யானை’ படத்தை முடித்திருக்கும் அருண் விஜய், இந்தப் படத்தை மலைபோல் நம்புகிறார். சூர்யாவை மனதில்வைத்து எழுதப்பட்ட இந்தக் கதையில், தன் மைத்துனர் அருண் விஜய்யை நம்பிக்கையோடு நடிக்கவைத்திருக்கிறார் ஹரி. ‘சினம்’, ‘ஓ மை டாக்’, ‘அக்னிச் சிறகுகள்’ என இன்னும் பல படங்கள் அருண் விஜய்யின் நம்பிக்கைப் பட்டியலில் இருக்கின்றன!

உதயநிதி
வெளியிட்ட அருள்நிதியின் ‘தேஜாவு’ படத்தின் முன்னோட்டம், பரவலான கவனத்தைப் பெற்றிருக்கிறது. ‘எனக்கு மிகவும் பிடித்த அட்டகாசமான போலீஸ் கதை’ எனச் சிலாகிக்கும் அருள்நிதி, அடுத்து பக்கா வில்லேஜ் கதையைச் செய்ய ஆசைப்படுகிறாராம். பி & சி சென்டரில் ரீச்சானால்தான் வெற்றிகரமான ஹீரோவாக நிலைக்க முடியும் என நம்புகிறாராம். தீவிரமான கதை வேட்டை நடக்கிறது!

உஷ்...

நடிப்போடு, நல்ல டைரக்‌ஷன் நாலெட்ஜும் கொண்டவர் ‘பொல்லாத’ நாயகன். சமீபத்தில் கமிட்டான மல்டி லாங்குவேஜ் படத்தில், தன் அறிவைக் காட்டி நாயகன் செய்யும் அட்ராசிட்டிக்கு அளவே இல்லையாம். டெக்னீஷியன்களை மாற்றுகிற அளவுக்கு நாளுக்கு நாள் டெரர் அதிகமாகிவருகிறதாம். #போடு... ரகிட ரகிட ரகிட!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism