அரசியல்
அலசல்
Published:Updated:

மிஸ்டர் மியாவ்

கேட்டிகா ஷர்மா
பிரீமியம் ஸ்டோரி
News
கேட்டிகா ஷர்மா

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் அடுத்த படத்தின் கதை, எது சம்பந்தப்பட்டது என்பது யாராலும் யூகிக்க முடியாததாக இருக்கிறது

‘பூமி’, ‘வெள்ளை யானை’, ‘உடன்பிறப்பே’ போன்ற படங்கள் விவசாயத்தைப் பற்றிப் பெரிதாகப் பேச, ‘சினிமாக்காரர்களிடமிருந்து விவசாயத்தைக் காப்பாத்துங்கப்பா...’ எனக் கதறத் தொடங்கிவிட்டார்கள் ரசிகர்கள். ஆனாலும், ‘காக்கா முட்டை’ மணிகண்டன் இயக்கத்தில் வெளியாகும் ‘கடைசி விவசாயி’ படத்துக்கு நல்ல எதிர்பார்ப்பு இருக்கிறது. உசிலம்பட்டியைச் சேர்ந்த நல்லாண்டி என்கிற 86 வயது விவசாயியை இந்தப் படத்தில் ஹீரோவாக்கியிருக்கிறார்கள். இந்தப் பாத்திரத்தில் நடிக்க ரஜினி, விஜய் சேதுபதி உள்ளிட்டோர் ஆசைப்பட்டதாக மணிகண்டன் சொல்ல, படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது!

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் அடுத்த படத்தின் கதை, எது சம்பந்தப்பட்டது என்பது யாராலும் யூகிக்க முடியாததாக இருக்கிறது. ‘லைட் வெயிட் பொலிட்டிக்கல் ஸ்டோரி’ எனக் காதைக் கடிக்கிறார்கள் படக்குழுவில் பணியாற்றும் சிலர். ஆனால், “வினோத் ஓர் அரசியல் கதை சொன்னது உண்மைதான். ஆனால், அஜித் அதைத் தவிர்த்துவிட்டார். தன் படத்தில் அரசியல் விஷயங்கள் வரவே கூடாது என்பதில் அஜித் உறுதியாக இருக்கிறார்” என்கிறார்கள் இன்னும் சிலர். அடுத்த மாதம் ஷூட்டிங் ஆரம்பமாம்!

கேட்டிகா ஷர்மா
கேட்டிகா ஷர்மா
மிஸ்டர் மியாவ்

எக்ஸ்க்ளூசிவ்: வடிவேலுவை அடுத்தடுத்து இரண்டு படங்களுக்கு கமிட்டாக்கி வைத்திருக்கிறதாம் லைகா நிறுவனம். சுராஜ் இயக்கும் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்தை முடித்துவிட்டு, சிவகார்த்திகேயன் - வடிவேலு காம்பினேஷனில் அடுத்த படத்தைத் தொடங்கவிருக்கிறார்களாம். இருவருக்கும் சம முக்கியத்துவம் கொடுக்கும்விதத்தில் கதை உருவாக்கப்பட்டு வருகிறதாம். லண்டனிலிருக்கும் ‘லைகா’ சுபாஷ்கரன், வடிவேலுவுக்கு ரொம்பவே நெருக்கமாகிவிட்டாராம். அந்த அன்பில்தான் அடுத்த படத்துக்கும் வடிவேலுக்கு அட்வான்ஸ் கொடுக்கப்பட்டிருக்கிறதாம்!

‘அசுரன்’ படத்தில் தனுஷின் இளைய மகனாக நடித்தவர் கென். கருணாஸின் மகனான கென், தனுஷ் மீதுகொண்ட அளவுகடந்த பாசத்தில் அவருடனேயே சேர்ந்து பயணிக்க நினைத்திருக்கிறார். நடிக்க வந்த வாய்ப்புகளைத் தவிர்த்துவிட்டு, தற்போது தனுஷ் நடிக்கும் ‘வாத்தி’ படத்தில் உதவி இயக்குநராகச் சேர்ந்துவிட்டார் கென். விஷயமறிந்து ‘வாத்தி’ படத்தில் முக்கிய பாத்திரம் ஒன்றில் கென்னை நடிக்கவைத்து அழகு பார்த்தாராம் தனுஷ்!

உஷ்...

சங்க நடிகரின் கடன், எகிறிக்கொண்டே போகிறதாம். சமீபத்தில் ரிலீஸான படத்துக்கும் பெரிய அளவில் வசூல் இல்லாததால், அநியாயத்துக்குச் சோர்ந்துபோய்விட்டாராம் நடிகர். மொத்தமாக கோடிகளில் மூன்று இலக்கத்தைத் தொட்டுவிட்டதாம் கடன்!