Published:Updated:

மிஸ்டர் மியாவ்

டிம்ப்லே ஹயாதி
பிரீமியம் ஸ்டோரி
டிம்ப்லே ஹயாதி

புளு சட்டை மாறனை வைத்து ‘ஆன்டி இண்டியன்’ படத்தைத் தயாரித்ததாலோ என்னவோ, சர்ச்சைகளின் மூலமாகவே பெயர் வாங்க நினைக்கிறார் தயாரிப்பாளர் ஆதம் பாவா

மிஸ்டர் மியாவ்

புளு சட்டை மாறனை வைத்து ‘ஆன்டி இண்டியன்’ படத்தைத் தயாரித்ததாலோ என்னவோ, சர்ச்சைகளின் மூலமாகவே பெயர் வாங்க நினைக்கிறார் தயாரிப்பாளர் ஆதம் பாவா

Published:Updated:
டிம்ப்லே ஹயாதி
பிரீமியம் ஸ்டோரி
டிம்ப்லே ஹயாதி

‘ஜெய் பீம்’ படத்தில் கொடூரமான போலீஸ் அதிகாரியாக நடித்த தமிழ், விக்ரம் பிரபுவை வைத்து ‘டாணாக்காரன்’ படத்தை இயக்கி முடித்திருக்கிறார். ரிலீஸுக்கு முன்னரே அடுத்த படத்துக்கான அட்வான்ஸை தமிழுக்குக் கொடுத்திருக்கிறது டிரீம் வாரியர்ஸ் நிறுவனம். படத்தைச் சிறப்பாகவும் சிக்கனமாகவும் எடுத்துக் கொடுத்ததற்குத்தான் இந்தப் பரிசாம்!

புளு சட்டை மாறனை வைத்து ‘ஆன்டி இண்டியன்’ படத்தைத் தயாரித்ததாலோ என்னவோ, சர்ச்சைகளின் மூலமாகவே பெயர் வாங்க நினைக்கிறார் தயாரிப்பாளர் ஆதம் பாவா. ‘வலிமை’ முன்னோட்டம் வெளியானபோது, அஜித் பைக் வீலிங் செய்யும் காட்சியைச் சுட்டிக்காட்டி, “ஹெல்மெட் போட்டால் மட்டும் போதாது, இப்படி சாகசக் காட்சிகளையும் நிறுத்திக்கொள்வதுதானே நியாயம்” எனச் சீண்டினார் ஆதம் பாவா. இதற்கு பதிலடியாக அஜித் ரசிகர்கள் சகட்டுமேனிக்கு வசைபாடினாலும், புளு சட்டை மாறன் பாணியில் அதை வரவேற்பாகவே எண்ணிக்கொண்டார். இந்நிலையில், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை நடிகர் விஜய் சந்தித்த புகைப்படங்கள் வைரலாக, தானும் ரங்கசாமியும் ஒன்றாக நிற்கும் படத்தைப் பதிவேற்றி ‘இது எப்படி இருக்கு’ எனச் சீண்டினார் ஆதம் பாவா. வழக்கம்போல் விஜய் ரசிகர்கள் வறுத்தெடுக்க, ஆனந்தத்தில் மிதக்கிறார்!

மிஸ்டர் மியாவ்
மிஸ்டர் மியாவ்
மிஸ்டர் மியாவ்

சமீபத்திய படங்களில், நடிகர் விஜய்யுடன் கீர்த்தி சுரேஷ் சேர்ந்து நடிக்கவில்லை. ஆனாலும், தான் நடிக்கும் படங்கள் குறித்தும் தேர்ந்தெடுக்கும் கதைகள் குறித்தும் விஜய்யுடன் பகிர்ந்துகொள்கிறார் கீர்த்தி சுரேஷ். அதேபோல், தன்னுடைய படங்கள் குறித்த அப்டேட்டுகளையும் கீர்த்தியிடம் ஷேர் செய்துகொள்கிறார் விஜய். நடிப்பு தாண்டிய நட்பு இருவரையும் அந்த அளவுக்கு இணைத்துவைத்திருக்கிறதாம்!

பல வருடங்களாக சினிமா வேலைகளைச் செய்யாமல், பொது விஷயங்களிலேயே தீவிரமாக இருந்த இயக்குநர் அமீர், ‘இனி முழு நேரமும் சினிமாதான்’ என இறங்கிவிட்டார். ஆர்யாவை வைத்து ‘சந்தனத் தேவன்’ படத்தை மறுபடியும் இயக்கப்போகும் அமீர், அடுத்தடுத்து மூன்று படங்களில் நடிக்கவும் போகிறார். சூரியை வைத்து ஒரு படம், புதுமுக ஹீரோவை வைத்து இன்னொரு படம் என அமீரின் டைரக்‌ஷன் லைன்-அப் வெயிட்டாக இருக்கிறது. இதற்கிடையில் வெப் சீரீஸ் ஒன்றை இயக்கவும் பேச்சுவார்த்தை நடக்கிறதாம்!

உஷ்...

எலும்புக்கடி புகழ் நடிகருக்கு இப்போதும் ஏறுமுகம்தான். ஒரே நேரத்தில் மூன்று படங்களில் நடிக்கும் அவர், ஷூட்டிங்கில் கொடுக்கும் அலப்பறை பயங்கரமாம். மதிய சாப்பாடு முடித்து, இரண்டு மணி நேரம் கேரவேனில் தூக்கம் போடுகிறாராம். இயக்குநர்களே வந்து கதவைத் தட்டினாலும் திறப்பதே இல்லையாம். “படத்துக்கு மூன்று கோடி சம்பளம் வாங்குறார். ஆனால், ஒரு நாளைக்கு மூன்று மணி நேரம்கூட நடிக்க மாட்டேங்குறார்” எனப் புலம்புகிறார்கள் படக்குழுவினர்!