Published:Updated:

மிஸ்டர் மியாவ்

யாஷிகா ஆனந்த்
பிரீமியம் ஸ்டோரி
யாஷிகா ஆனந்த்

நடிகை ரேவதி இயக்கத்தில் ‘சலாம் வெங்கி’ என்கிற படத்தில் நடிக்கிறார் கஜோல்.

மிஸ்டர் மியாவ்

நடிகை ரேவதி இயக்கத்தில் ‘சலாம் வெங்கி’ என்கிற படத்தில் நடிக்கிறார் கஜோல்.

Published:Updated:
யாஷிகா ஆனந்த்
பிரீமியம் ஸ்டோரி
யாஷிகா ஆனந்த்

மூன்று வருட இடைவெளிக்குப் பிறகு விமல் நடிப்பில் ‘விலங்கு’ வெப் சீரீஸ் ரிலீஸாகியிருக்கிறது. ‘இனி இந்த அளவுக்கு நடிப்பில் கேப் விட மாட்டேன்’ எனச் சபதம் போட்டிருக்கும் விமல், இதுகாலம்வரை மேனேஜர்கள் மூலமாகத்தான் கதை கேட்டுவந்தார். இனி அவரே கதை கேட்பதாகச் சொல்லியிருக்கிறார். விமலுக்காக வந்த பல நல்ல கதைகள், அவரை அணுக முடியாததால் வேறு நடிகர்களுக்குப் போய் வெற்றிபெறவும் செய்தன. அதனால்தான் இந்த முடிவை எடுத்திருக்கிறாராம் விமல். இந்த வருடம் மூன்று படங்களில் நடிக்க, கதை கேட்டு ஓகே செய்துவைத்திருக்கிறார்!

நடிகை ரேவதி இயக்கத்தில் ‘சலாம் வெங்கி’ என்கிற படத்தில் நடிக்கிறார் கஜோல். பிசினஸ், குடும்பம் என செம பிஸியாக இருக்கும் கஜோல், ரேவதியின் கதையைக் கேட்டதும் ‘எப்போது வேண்டுமானாலும் ஷூட்டிங் கிளம்பலாம்’ எனச் சொல்லிவிட்டாராம். “சில கதைகளைக் கேட்கிறபோதே இது நமக்கான அடுத்தகட்ட உயரத்தைக் கொடுக்கும் என்கிற நம்பிக்கை வரும். ரேவதியின் கதையைக் கேட்டபோது அப்படியிருந்தது” என நெருங்கியவர்களிடம் சிலிர்க்கிறார் கஜோல்!

மிஸ்டர் மியாவ்
மிஸ்டர் மியாவ்

‘டெடி’ படம் ஆர்யாவின் ஓடிடி வணிகத்தை ரொம்பவே உயர்த்திக்கொடுத்தது. அதனால், அந்தப் படத்தின் இயக்குநரான சக்தி சௌந்தர்ராஜனை அழைத்து உடனே அடுத்த படத்தைக் கொடுத்துவிட்டார் ஆர்யா. ‘கேப்டன்’ என்கிற தலைப்பில் உருவாகும் இந்தப் படத்தின் ஷூட்டிங், குலுமனாலியில் நடக்கிறது. இதற்கிடையில் அடுத்த படத்தையும் தனக்கே செய்யும்படி இயக்குநரிடம் கோரிக்கை வைத்திருக்கிறார் ஆர்யா. அந்த அளவுக்கு இந்தப் படமும் நம்பிக்கை கொடுத்திருக்கிறதாம்!

எக்ஸ்க்ளூசிவ்: கமல் அடுத்து கதை கேட்டு ஓகே செய்திருக்கும் இயக்குநர் யார் தெரியுமா? கிராமியக் கதைகளில் களமாடும் முத்தையா. ‘விருமாண்டி’ படத்துக்குப் பிறகு நல்லதொரு வில்லேஜ் கதையில் நடிக்க ஆசைப்பட்ட கமல், அது குறித்து தனக்கு நெருக்கமானவர்களிடம் பேசியிருக்கிறார். தகவல் முத்தையாவுக்குப் போக, ‘என்னிடம் ஒரு கதை இருக்கிறது. கமல் சார் கேட்பாரா?’ என்றாராம். அடுத்த சில நாள்களிலேயே கமலிடமிருந்து அழைப்பு வர, இரண்டு மணி நேரம் ஆளையே கட்டிப்போடும்படி கதை சொல்லி அசத்தியிருக்கிறார் முத்தையா. விரைவில் கமல் - முத்தையா காம்பினேஷன் குறித்த அறிவிப்பு வெளியாகவிருக்கிறது!

உஷ்...

பெரிய அளவுக்குப் பேசப்படும் என எதிர்பார்க்கப்பட்ட போலீஸ் தகவல் அறிக்கை குறித்த படம், சற்று இறங்குமுகமானதில் ஹீரோவுக்கு ரொம்பவே வருத்தமாம். ‘இந்த வெற்றி மூலம் பலருக்கும் பதிலடி கொடுக்கலாம் என நினைத்திருந்தேன்’ எனச் சொல்லிச் சொல்லிச் சோகம் பாடுகிறாராம் ஹீரோ. ‘இதுவே வெற்றிதான். அடுத்தகட்டத்தை நோக்கிப் போங்க…’ என ஆறுதல் சொல்லித் தேற்றுகிறார்கள் அவருடைய நண்பர்கள்!