Published:Updated:

மிஸ்டர் மியாவ்

ஜான்வி கபூர்
பிரீமியம் ஸ்டோரி
ஜான்வி கபூர்

ரிலீஸுக்கு முன்னரே 22 கோடி ரூபாய்க்கு விற்பனையாகியிருந்த விஷ்ணு விஷாலின் ‘எஃப்.ஐ.ஆர்’ படம், தமிழக அளவில் 11 கோடி வசூல் செய்திருக்கிறது.

மிஸ்டர் மியாவ்

ரிலீஸுக்கு முன்னரே 22 கோடி ரூபாய்க்கு விற்பனையாகியிருந்த விஷ்ணு விஷாலின் ‘எஃப்.ஐ.ஆர்’ படம், தமிழக அளவில் 11 கோடி வசூல் செய்திருக்கிறது.

Published:Updated:
ஜான்வி கபூர்
பிரீமியம் ஸ்டோரி
ஜான்வி கபூர்

‘வலிமை’ கலவையான விமர்சனங்களைப் பெற்றிருப்பதால், அஜித் - ஹெச்.வினோத் கூட்டணி அடுத்த படம் செய்வதில் சிக்கல் நிலவுவதாகப் பரபரக்கிறது சினிமா உலகம். உண்மையில், அஜித்துக்கு வினோத் மீது எவ்வித வருத்தமும் இல்லையாம். படம் எப்படி வர வேண்டும் என அஜித் எதிர்பார்த்தாரோ, அதேவிதமாக வந்ததில் அவருக்கு மிகுந்த மனநிறைவாம். அதனால், அடுத்து வினோத் படம்தான் என்பதில் தெளிவாக இருக்கிறாராம். தயாரிப்பாளர் போனி கபூருக்கும் வினோத்தைத் தவிர்த்து வேறு இயக்குநர்களின் பெயர்களைப் பரிசீலிக்கிற எண்ணமே இல்லையாம். 60 நாள்களில் அஜித்தின் அடுத்த படத்தை முடித்துக்கொடுப்பதாக வினோத் கொடுத்திருக்கும் உறுதிதான் எல்லோரையும் மிரளவைத்திருக்கிறது!

‘விலங்கு’ வெப் சீரீஸ் ஹிட் அடித்திருப்பதால், நீண்ட இடைவெளிக்குப் பிறகு நிம்மதிப் பெருமூச்சுவிட்டிருக்கிறார் தயாரிப்பாளர் ‘எஸ்கேப் ஆர்டிஸ்ட்’ மதன். ஜீ5 மட்டுமல்லாது ஹாட் ஸ்டார், அமேசான், ஆஹா உள்ளிட்ட ஓடிடி தளங்களும் முதல் பிரதி அடிப்படையில் வெப் சீரீஸ் செய்துகொடுக்கச் சொல்லி மதனிடம் ஒப்பந்தம் போட முன்வந்திருக்கின்றன. ஆனாலும், மீண்டும் படம் செய்வதில்தான் மதனுக்கு ஆர்வமாம். சிவகார்த்திகேயனை வைத்துப் படம் தயாரித்த நிறுவனம் என்பதால், அவரைவைத்தே மீண்டும் படம் தயாரிக்க நினைக்கிறாராம் மதன். சிவகார்த்திகேயனுக்கு வரிசையாகப் படங்கள் கமிட்டாகியிருப்பதால், காத்திருப்பில் இருக்கிறார் மதன்!

மிஸ்டர் மியாவ்
மிஸ்டர் மியாவ்

‘அண்ணாத்த’ படத்தை முடித்துவிட்டு இயக்குநர் சிவாவும், ‘எதற்கும் துணிந்தவன்’ சூர்யாவும் இணைந்து அடுத்த படத்தைத் தொடங்கும் திட்டத்தில் இருந்தார்கள். ஆனால் திடீர் மாற்றமாக, அடுத்து இயக்குநர் பாலாவின் படத்தில் கமிட்டாகி ஷூட்டிங் கிளம்பவிருக்கிறார் சூர்யா. அடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வாடிவாசல்’ படத்தை முடித்துவிட்டு, சிவா இயக்கத்தில் நடிக்க முடிவெடுத்திருக்கிறார். இதனால் இந்த இடைப்பட்ட காலத்தில், அடுத்த படத்தை இயக்க நினைக்கும் சிவா, வேறு ஹீரோவைத் தேடத் தொடங்கியிருக்கிறார். தெலுங்கு பக்கம் தாவுகிற திட்டமும் இருப்பதாகச் சொல்கிறார்கள்!

ரிலீஸுக்கு முன்னரே 22 கோடி ரூபாய்க்கு விற்பனையாகியிருந்த விஷ்ணு விஷாலின் ‘எஃப்.ஐ.ஆர்’ படம், தமிழக அளவில் 11 கோடி வசூல் செய்திருக்கிறது. படத்தின் டிஜிட்டல் ரைட்ஸை அமேசான் கைப்பற்ற, சாட்டிலைட் உரிமையை விஜய் டி.வி வாங்கியிருக்கிறது. இந்நிலையில் ‘எஃப்.ஐ.ஆர்’ படத்தின் இயக்குநரான மனு ஆனந்த், மீண்டும் விஷ்ணு விஷாலுடன் இணைகிறார். பல முன்னணி நிறுவனங்கள் நல்ல சம்பளத்துக்கு அவரை அழைத்தபோதும், விஷ்ணு விஷால் கைகளைவிட்டு விலகிவர அவருக்கு விருப்பம் இல்லையாம். பிரமாண்ட பட்ஜெட்டில் மீண்டும் போலீஸ் கதையையே பிடித்திருக்கிறார்களாம்!

உஷ்...

சமீபத்தில் பிரமாண்டமாகத் திருமணவிழாவை நடத்திய மதுரைக்கார ஃபைனான்ஸியரை வாழ்த்த, மொத்தத் திரையுலகமும் திரண்டு போயிருந்தது. ஃபைனான்ஸியரைப் பார்த்த அத்தனை சினிமா நட்சத்திரங்களும் ஆச்சர்யப்பட்டுப்போனார்களாம். வெளிநாட்டுச் சிகிச்சை மூலமாகச் சிவப்பு நிறத்துக்கு மாறி, ஆளே ஹீரோபோல இருந்தாராம். ‘எங்கே சிகிச்சை எடுத்தீர்கள்?’ என நட்சத்திரங்கள் பலரிடமிருந்தும் சாருக்கு என்கொயரியாம். #இப்ப நான் செக்கச் செவப்பே..!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism