Published:Updated:

மிஸ்டர் மியாவ்

கைரா அத்வானி
பிரீமியம் ஸ்டோரி
கைரா அத்வானி

‘மறுபடியும் முதல்லருந்தா’ என்று பெருமூச்சு விட்டுக்கொண்டிருக்கிறார் கைரா.

மிஸ்டர் மியாவ்

‘மறுபடியும் முதல்லருந்தா’ என்று பெருமூச்சு விட்டுக்கொண்டிருக்கிறார் கைரா.

Published:Updated:
கைரா அத்வானி
பிரீமியம் ஸ்டோரி
கைரா அத்வானி

எம்.எஸ்.தோனி திரைப்படத்தில் சுஷாந்தின் ஜோடியாக, தோனியின் மனைவி சாக்‌ஷி கதாபாத்திரத்தில் நடித்தும் கிடைக்காத புகழ் வெளிச்சம், ‘லஸ்ட் ஸ்டோரிஸி’ல் நடித்த போது கைரா அத்வானிக்குக் கிடைத்தது. அதன்மூலம் வெப் சீரிஸில் மளமளவென்று வாய்ப்புகள் வர, இன்னொரு பக்கம் தெலுங்கிலும் பட வாய்ப்புகள் வந்தன. கொரோனா எல்லாவற்றுக்கும் ஸ்பீட் ப்ரேக்கர் போட, ‘மறுபடியும் முதல்லருந்தா’ என்று பெருமூச்சு விட்டுக்கொண்டிருக்கிறார் கைரா.

மிஸ்டர் மியாவ்
மிஸ்டர் மியாவ்
மிஸ்டர் மியாவ்
மிஸ்டர் மியாவ்
மிஸ்டர் மியாவ்

‘சூர்யா - கார்த்தி இருவரும் இணைந்து நடித்தால் எப்படி இருக்கும்?’ என சமூக வலைதளத்தில் சினிமா விமர்சகர் பிரஷாந்த் கேள்வி எழுப்ப, “பாண்டிராஜ் கதை சொன்னால் நாங்க தயாரிக்க ரெடி” எனப் பதில் சொன்னார் 2 டி நிறுவனத்தின் இணைத் தயாரிப்பாளர் ராஜசேகர் பாண்டியன். இயக்குநர் பாண்டிராஜும் பச்சைக்கொடி காட்ட, ‘இருவரும் இணைந்தால் ஹாலிவுட் ரேஞ்சில் கதை செய்தால்தான் சிறப்பாக இருக்கும்’ எனக் கருத்து சொன்னார் ட்ரீம் வாரியர்ஸ் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு. அண்ணன் - தம்பி கூட்டணியில் அசத்தல் கதை ரெடியாகிவருகிறது.

நகைச்சுவை நடிகர் விவேக் மரணத்தை வைத்து, தடுப்பு ஊசிக்கு எதிரான வாதத்தைச் சிலர் பரப்பினார்கள். இந்நிலையில், அரசு மருத்துவமனையில் தன் மனைவியுடன் போய் தடுப்பு ஊசி போட்டுக்கொண்ட நகைச்சுவை நடிகர் சூரி, “தயவுசெய்து பயமின்றி ஊசி போட்டுக்கங்க… லேசான வலியைத் தவிர வேறெந்த உபாதையும் இல்லை” எனச் சொல்லி நம்பிக்கையூட்டி இருக்கிறார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிக்கும் ‘விக்ரம்’ படத்தில், கதாநாயகியாக நயன்தாரா பேசப்பட்டார். முழுக்கதையையும் கேட்ட நயன்தாரா என்ன நினைத்தாரோ, படத்தில் நடிக்கத் தனக்கு விருப்பம் இல்லை எனச் சொல்லிவிட்டாராம். லோகேஷ் படத்தில் வாய்ப்பு கிடைக்குமா எனக் கதாநாயகிகள் பலரும் காத்திருக்க, தனக்கு வந்த வாய்ப்பை அசால்ட்டாகத் தூக்கிப் போட்டிருக்கிறார் நயன்தாரா.

வித்தியாசமான கதையில் ஸ்ரீகாந்த், ஷாம் இருவரையும் இணைத்து ஷூட்டிங்கைத் தொடங்கியிருக்கிறார் புதுமுக இயக்குநர் தியாகராஜன். ‘மோப்ப சக்தியை மையமாக வைத்து துப்பறியும் கதை தமிழுக்கு ரொம்பவே புதுசு’ என்கிறார்கள் இன்டஸ்ட்ரியில். நல்ல வாய்ப்புக்காகப் போராடிவரும் ஸ்ரீகாந்த், ஷாம் இருவருக்குமே இந்தப் படம் திருப்புமுனையாக இருக்குமாம்!

கொரோனா நெருக்கடிக் காலத்தில், அருமையான அண்ணன் - தங்கை கதை ஒன்றை எழுதி முடித்திருக்கிறார் இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா. “தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் இந்தக் கதை பக்காவாக ஒர்க் அவுட்டாகும்” எனச் சொல்லும் எஸ்.ஜே.சூர்யா, நட்சத்திரத் தேடுதலில் தற்போது தீவிரமாக இருக்கிறார். முக்கியக் கதாபாத்திரத்தில் அவரே நடிக்கிறாராம்.

உஷ்…

மலர் நிறுவனத் தயாரிப்பாளர் ஒருவர், கடந்த வருடம் கொரோனா தொற்றால் இறந்துபோனார். இறக்கும் தறுவாயிலும் தனக்குக் கடன் கொடுக்க வேண்டியவர்களின் பட்டியலை எழுதி வைத்துவிட்டு இறந்திருக்கிறார். ஆனாலும், முன்னாள் சங்க நடிகர் உள்ளிட்ட பலரும் கடன்தொகையை செட்டில் செய்யாமல் இன்னமும் இழுத்தடிக்கிறார்களாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism