Published:Updated:

மிஸ்டர் மியாவ்

மாளவிகா மோகனன்
பிரீமியம் ஸ்டோரி
மாளவிகா மோகனன்

படங்கள்: கிரண் சா

மிஸ்டர் மியாவ்

படங்கள்: கிரண் சா

Published:Updated:
மாளவிகா மோகனன்
பிரீமியம் ஸ்டோரி
மாளவிகா மோகனன்

கவர்ச்சியான புகைப்படங்களைச் சமூக வலைதளங்களில் அனுதினமும் பதிவேற்றி, ரசிகர்களைக் கிறங்கடிப்பதில் மாளவிகா மோகனன் கில்லாடி. ‘என்னுடைய படங்கள் ரிலீஸாகும் வரை என் ரசிகர்களுக்கு நான் தீனி கொடுக்க வேண்டுமல்லவா?’ என இந்த ‘அறப்பணி’க்கு விளக்கமும் சொல்லும் மாளவிகா மோகனன், கவர்ச்சியான பாத்திரத்தில் நடிக்கவே தான் விரும்புவதாகவும் சொல்கிறார். அதற்கேற்ற கதைகளுக்காகவே அம்மணி காத்திருக்கிறாராம்!

பொள்ளாச்சி விவாகரத்தைப்போல் வீடியோ, புகைப்படம் என எது சம்பந்தமான மிரட்டலுக்கும் பெண்கள் பயப்படக் கூடாது; தைரியமாக அதை எதிர்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தில் நடித்தார் சூர்யா. ஒரு பக்கா கமர்ஷியல் படத்தில் ஸ்ட்ராங்கான மெசேஜ் சொன்னதற்குப் பெரிய வரவேற்பு கிடைக்கும் என நினைத்தார் சூர்யா. ஆனால், வரிசையாக எதிர்மறை விமர்சனங்கள் கிளம்ப, படக்குழுவுக்கு மிகுந்த வருத்தமாகிவிட்டது. சூர்யா நடிக்கும் படங்களுக்குத் திட்டமிட்டு சிலர் இப்படி அவதூறு பரப்புகிறார்களோ என்கிற சந்தேகம் கிளம்பியிருக்கிறது. ஆன்லைன் ஆட்களிடம் இது குறித்து விசாரிக்கச் சொல்லியிருக்கிறார்களாம்!

மிஸ்டர் மியாவ்
மிஸ்டர் மியாவ்
மிஸ்டர் மியாவ்

எக்ஸ்க்ளூசிவ்: இயக்குநர் விக்னேஷ் சிவன், இரண்டு வருடங்களுக்கு முன் சிவகார்த்திகேயனை வைத்து இயக்க, லைகா நிறுவனத்துக்கு ஒரு கதை சொல்லியிருந்தார். கதையை ஓகே செய்த லைகா நிறுவனம், உடனே அவருக்கு அட்வான்ஸ் கொடுத்தது. ஆனால், சிவகார்த்திகேயனுக்கு அந்தக் கதை பிடிக்கவில்லை. இருந்தாலும், விக்னேஷ் சிவனுக்குக் கொடுத்த அட்வான்ஸை லைகா திரும்பப் பெறவில்லை. இந்நிலையில், அஜித்துக்குக் கதை சொல்லி ஓகே வாங்கிய விக்னேஷ் சிவன், லைகா நிறுவனத்தை சிபாரிசு செய்ய, அஜித்தும் சம்மதம் சொல்லிவிட்டார். அஜித்தை வைத்துப் படம் தயாரிக்க மிகுந்த ஆவலில் இருந்த லைகா நிறுவனத்தின் நிர்வாகி தமிழ்க் குமரனுக்கு, இதில் தாங்க முடியாத மகிழ்ச்சி. கூடுதல் தகவல்: அஜித், இதுகாலம் வரை வாங்கியிராத சம்பளத்தைப் பேசி அவரைத் திகைக்கவைத்திருக்கிறது லைகா நிறுவனம்!

எக்ஸ்க்ளூசிவ்: வெற்றிமாறனின் ‘அசுரன்’ படத்தில் ஹீரோவாக நடித்திருக்கவேண்டியவர் கருணாஸ். கதை சொல்லி, அட்வான்ஸ் கொடுத்து, அத்தனையும் ஓகே-யான நிலையில் அந்தக் கதை குறித்துக் கேட்டிருக்கிறார் தனுஷ். கதை மிகவும் பிடித்துப்போக, ‘நான் செய்கிறேன்’ எனச் சொல்லி வெற்றிமாறனை வற்புறுத்தத் தொடங்கிவிட்டார். வெற்றிமாறன் ரொம்பவே தயங்க, ‘என்னைவிட தனுஷ்தான் அந்தப் பாத்திரத்துக்குச் சரியாக இருப்பார்’ எனச் சொல்லிப் பெருந்தன்மையோடு விட்டுக்கொடுத்தார் கருணாஸ். அதற்கான நன்றிக் கடனாகத்தான் கருணாஸ் மகனை தனுஷ் மகனாகப் படத்தில் நடிக்கவைத்தார் வெற்றி. சரி, செய்திக்கு வருவோம்… அரசியல், பொது விவகாரங்களை முழுவதுமாகத் தவிர்க்க முடிவெடுத்திருக்கும் கருணாஸ், வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராகச் சேர்ந்திருக்கிறார். ‘சினிமாவில் நிறைய கற்றுக்கொள்ள நினைக்கிறேன்’ என அதற்கு விளக்கம் சொல்கிறார் கருணாஸ்!

உஷ்...

புயல் காமெடியாரின் ரீ என்ட்ரி படத்தின் பட்ஜெட் இழுத்துக்கொண்டே போகிறதாம். திட்டமிட்ட தொகை அப்படியே டபுளாகிற அளவுக்கு நீள, ‘இனி இவ்வளவுதான்’ எனக் குறிப்பிட்ட தொகையைச் சொல்லிவிட்டார்களாம். புயல் காமெடியாரின் அலப்பறைகளுக்கு ஆனதுதான் அதிக செலவாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism