Published:Updated:

மிஸ்டர் மியாவ்

பார்வதி நாயர்
பிரீமியம் ஸ்டோரி
பார்வதி நாயர்

தயாரிப்புத் தரப்பு 60 நாள்களில் படத்தை முடித்துக்கொடுக்கச் சொன்ன நிலையில், 35 நாள்களிலேயே பூசணி உடைத்திருக்கிறார் இயக்குநர் வேல் மாணிக்கம்.

மிஸ்டர் மியாவ்

தயாரிப்புத் தரப்பு 60 நாள்களில் படத்தை முடித்துக்கொடுக்கச் சொன்ன நிலையில், 35 நாள்களிலேயே பூசணி உடைத்திருக்கிறார் இயக்குநர் வேல் மாணிக்கம்.

Published:Updated:
பார்வதி நாயர்
பிரீமியம் ஸ்டோரி
பார்வதி நாயர்

சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ படம் தியேட்டர்களில் சக்சஸாக ஓடிக்கொண்டிருக்கும்போதே, விஜய்யின் ‘பீஸ்ட்’ பட புரொமோஷனைத் தொடங்கிவிட்டது சன் பிக்சர்ஸ் நிறுவனம். சூர்யா ரசிகர்கள் இதில் ரொம்பவே சூடானார்கள். அந்தச் சூட்டை அப்படியே மடைமாற்றும்விதமாக, வெற்றிமாறனின் ‘வாடிவாசல்’ டெஸ்ட் ஷூட்டை ஒரு நாள் நடத்திப் பார்க்கலாம் எனச் சொன்னாராம் சூர்யா. வெற்றிமாறனும் தலையாட்ட, வாடிவாசல் ஷூட்டிங் குறித்த தகவல்கள் ஆன்லைனில் அலப்பறையாகின. இத்தனைக்கும் இயக்குநர்கள் பாலா, சிவா ஆகியோரின் படத்தை முடித்துவிட்டுத்தான் ‘வாடிவாசல்’ ஷூட்டிங்கை ஆரம்பிக்கும் ஐடியாவில் இருக்கிறார் சூர்யா.

‘அம்பாசமுத்திரம் அம்பானி’, ‘திருநாள்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ராம்நாத், இப்போது கருணாஸ் நடிப்பில் ‘ஆதார்’ என்ற படத்தை முடித்திருக்கிறார். ‘நெஞ்சை நொறுக்கும் வகையில் அதிர்வலைகளைக் கிளப்பக்கூடிய இந்தக் கதைக்காக நான்கு வருடங்கள் அலைந்து திரிந்தேன்’ எனச் சொல்லும் ராம்நாத், சமீபத்தில் படத்தை மிக முக்கிய நண்பர்களுக்குத் திரையிட்டுக் காட்டினாராம். படத்தில் நடித்திருக்கும் அருண் பாண்டியன், ‘என் வாழ்வில் இது மிக முக்கியமான படம்’ எனப் பாராட்ட, மற்றவர்களும் கட்டிப்பிடித்துக்கொண்டார்களாம். அவ்வளவு சிறப்பாக வந்திருக்கிறதாம் ‘ஆதார்’ படம்.

புதுமுக இயக்குநர் வேல் மாணிக்கம் இயக்கத்தில் ஸ்ரீகாந்த் - ஷாம் இருவரும் இணைந்து நடிக்கும் ‘தி ட்ரெய்னர்’ படத்தின் ஷூட்டிங், ஜெட் வேகத்தில் முடிந்திருக்கிறது. தயாரிப்புத் தரப்பு 60 நாள்களில் படத்தை முடித்துக்கொடுக்கச் சொன்ன நிலையில், 35 நாள்களிலேயே பூசணி உடைத்திருக்கிறார் இயக்குநர் வேல் மாணிக்கம். நல்ல கவனத்துக்காக ஸ்ரீகாந்த், ஷாம் இருவருமே போராடிவரும் நிலையில், ‘தி ட்ரெய்னர்’ படம் அவர்களுக்கான அங்கீகாரத்தை நிச்சயம் பெற்றுத்தரும் என்கிறார்கள்.

மிஸ்டர் மியாவ்
மிஸ்டர் மியாவ்
மிஸ்டர் மியாவ்
மிஸ்டர் மியாவ்
மிஸ்டர் மியாவ்

அடிக்கடி மாலத்தீவு பக்கம் விசிட் அடித்து பிகினி தரிசனம் கொடுப்பவர் ரகுல் பிரீத் சிங். இம்முறை அம்மணி மாலத்தீவு பக்கம் போயிருந்த நிலையில், அவருடைய பாய் ஃப்ரெண்ட் என வர்ணிக்கப்படும் ஜாக்கியும் மாலத்தீவில் இருந்திருக்கிறார். அதனால், இருவருக்கும் இடையேயான நெருக்கத்தை மீடியாக்கள் எழுதித்தள்ளின. விரைவில் ரகுல் பிரீத் சிங், ஜாக்கியைக் கரம் பிடிப்பார் எனவும் கிசுகிசு கிளம்ப, ‘இப்போதைக்குத் திருமணம் என்கிற பேச்சுக்கே இடமில்லை’ என விளக்கம் சொல்லியிருக்கிறார் ரகுல். அம்மணியின் கவர்ச்சிப் புகைப்படங்களுக்கு ஆன்லைனில் அமோக வரவேற்பு குவிய, அனுதினமும் பதிவேற்றி அசத்துகிறார்.

உஷ்...

மிருகப் படத்தின் ஆடியோ வெளியீட்டுவிழாவில், மெர்சலான நடிகர் அரசியல் பேச வாய்ப்பிருப்பதாக வந்த தகவலை அடுத்துத்தான், நிகழ்வையே ரத்துசெய்ய வைத்தார்களாம். ‘நாளைக்கே நான் தனியா ஒரு பிரஸ் மீட் வெச்சா அவங்களால என்ன பண்ண முடியும்?’ என்று கேட்டுச் சிரித்தாராம் நடிகர். #வெறித்தனம்!