Published:Updated:

மிஸ்டர் மியாவ்

திவ்யபாரதி
பிரீமியம் ஸ்டோரி
திவ்யபாரதி

விமல் நடிக்கும் ‘குலசாமி’ படத்தில் குறிப்பிடத்தக்க பாத்திரத்தில் நடிக்கிறார் முன்னாள் காவல்துறை அதிகாரி ஜாங்கிட்.

மிஸ்டர் மியாவ்

விமல் நடிக்கும் ‘குலசாமி’ படத்தில் குறிப்பிடத்தக்க பாத்திரத்தில் நடிக்கிறார் முன்னாள் காவல்துறை அதிகாரி ஜாங்கிட்.

Published:Updated:
திவ்யபாரதி
பிரீமியம் ஸ்டோரி
திவ்யபாரதி

இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன், இனி சிறிய பட்ஜெட்டில் புதுமுகங்களை வைத்து நிறைய படங்கள் செய்கிற முடிவில் இருக்கிறார். அவருடைய தயாரிப்பு நிறுவனத்தின் மூலமாகப் பல படங்களைத் தயாரிக்கவும் கதை கேட்டுவருகிறார். ஓடிடி நிறுவனங்களுடன் நல்ல இணக்கத்திலிருக்கும் கௌதம் மேனன் ‘நல்ல கதைகள்தான் இனி சினிமாவைத் தீர்மானிக்கும்’ என்கிறார் உறுதியாக!

பத்திரிகையாளர் மை.பா.நாராயணன் பல படங்களில் தலைகாட்டிவருகிறார். ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் அஜித்குமாரையே கலாய்க்கும் பாத்திரத்திரல் நடித்து கவனம்பெற்றவர், இப்போது தீவிர நடிப்பில் இறங்கிவிட்டார். ஹெச்.வினோத் இயக்கும் அஜித்தின் 61-வது படத்திலும் மை.பா-வுக்கு அட்டகாசமான பாத்திரமாம். ‘நாச்சியார்’ படத்தில் மை.பா-வைச் செதுக்கிய இயக்குநர் பாலா, தற்போது சூர்யாவை வைத்து இயக்கும் புதிய படத்திலும் இவருக்கு வாய்ப்பு வழங்கியிருக்கிறார்!

ரஜினியின் ‘அண்ணாத்த’ படம் கடுமையான விமர்சனங்களுக்கு ஆளான நிலையிலும், இயக்குநர் சிவாவுக்கு போன் பண்ணி, ‘எதற்கும் கவலைப்படாதீங்க… எந்த நேரத்திலும் உங்களுடன் இணைந்து பணியாற்ற நான் ரெடி’ எனச் சொன்னார் அஜித். சொன்னதோடு மட்டுமல்ல, விக்னேஷ் சிவன் படத்துக்கு அடுத்தபடியாக சிவா படத்தில்தான் நடிக்கப்போவதாகவும் தயாரிப்பாளர்களிடம் தெளிவாகச் சொல்லிவிட்டாராம். அஜித்தின் நல்ல மனதைச் சொல்லிச் சொல்லிச் சிலாகிக்கிறார்கள் விஷயம் தெரிந்தவர்கள்!

மிஸ்டர் மியாவ்

விமல் நடிக்கும் ‘குலசாமி’ படத்தில் குறிப்பிடத்தக்க பாத்திரத்தில் நடிக்கிறார் முன்னாள் காவல்துறை அதிகாரி ஜாங்கிட். கிடைக்கிற நேரத்தில் தன் வாழ்வில் நடந்த நிஜ சம்பவங்களை வைத்து சில கதைகளையும் எழுதியிருக்கிறார் ஜாங்கிட். நல்ல இயக்குநர்கள் மூலமாக அதைப் படமாக்கும் முயற்சிகளிலும் இறங்கியிருக்கிறார். சாதியக் கலவரங்கள் ஏற்பட்ட காலகட்டத்தில், அதை ஒடுக்க எப்படியெல்லாம் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்பதை வீடியோ பதிவாகவும் வைத்திருக்கிறாராம் ஜாங்கிட்!

எழுத்தாளர் சந்திராவின் ‘கள்ளன்’ படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும், படத்தைப் பல பகுதிகளில் திரையிடவிடாமல் செய்துவிட்டன சாதிய அமைப்புகள். சமூக வலைதளங்கள் மூலமாக முதல்வரின் கவனத்துக்கு இது குறித்த ஆதங்கத்தைப் பதிவுசெய்தார் சந்திரா. ஆனாலும், உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. தணிக்கைக் குழுவைத் தாண்டி சாதிய வன்மத்தோடு செயல்படும் அமைப்புகளுக்கு எதிராக, விரைவில் திரைக்கலைஞர்களை ஒருங்கிணைக்கிற முடிவில் இருக்கிறாராம் சந்திரா!

உஷ்…

உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ளாமல், இஷ்டத்துக்கு இயங்கியதில் ரொம்பவே வெயிட் போட்டுவிட்டாராம் சிவலிங்கத்தைத் தூக்கிய ஜெய்வீர நடிகர். “கன்டினியூட்டி மிஸ் ஆகுது சார்…” எனக் கவலைப்படும் இயக்குநர்களிடம், “சி.ஜி-யிலேயே ஸ்லிம் ஆக்கிடலாமே..?” என்கிறாராம். சமீபத்தில் ரிலீஸான இவருடைய படத்தில் கிராபிக்ஸ் செலவுகளுக்கே பல கோடிகள் பணால் ஆனதாம். #யாரு இவன்... யாரு இவன்..?!