அரசியல்
அலசல்
Published:Updated:

மிஸ்டர் மியாவ்

ரைசா வில்சன்
பிரீமியம் ஸ்டோரி
News
ரைசா வில்சன்

நடிகர் சிவகார்த்திகேயன், நான்கு கோடி சம்பள பாக்கிக்காக, தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா மீது வழக்கு போட்டிருப்பது திரைத்துறையில் பரபரப்பாகியிருக்கிறது.

எக்ஸ்க்ளூசிவ்: விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்துக்கு, இசை வெளியீட்டுவிழா இல்லை என்றதும், ரசிகர்கள் பெரிதும் ஏமாந்துபோனார்கள். விழாவில் விஜய் அரசியல் பேசக்கூடும் என்பதால், ஆளும் தரப்பு சன் பிக்சர்ஸுக்குக் கொடுத்த அழுத்தத்தால்தான் விழா ரத்தானது என்றார்கள். இந்நிலையில், பரபரப்பான விஜய்யின் பேட்டி சன் டி.வி-யில் விரைவில் ஒளிபரப்பாக இருக்கிறதாம். ‘பீஸ்ட்’ படம் குறித்து மட்டுமல்லாமல், தற்போதைய அரசியல் நிலவரங்கள் குறித்தும் மனம் திறந்து பேசியிருக்கிறாராம் விஜய். தமிழகத்தின் அரசியல் தட்பவெப்பத்தையே விஜய்யின் பேட்டி மாற்றும் என்கிறார்கள்!

நடிகர் சிவகார்த்திகேயன், நான்கு கோடி சம்பள பாக்கிக்காக, தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா மீது வழக்கு போட்டிருப்பது திரைத்துறையில் பரபரப்பாகியிருக்கிறது. எப்போதுமே சம்பளம் உள்ளிட்ட பண விஷயங்களை கோர்ட் வரை கொண்டுசெல்கிற ஆள் இல்லை சிவா. ஆனாலும், இந்த விஷயத்தில் ஞானவேல் ராஜா மீது வழக்கு போடுகிற அளவுக்கு வந்ததற்குக் காரணம், ‘வேலைக்காரன்’ படத்தின்போது அவர் ஏற்படுத்திய பிரச்னைதானாம். “என்னிடம் வாங்கிய 10 லட்சம் அட்வான்ஸுக்குப் படம் செய்த பிறகுதான் ‘வேலைக்காரன்’ படத்தை எடுக்கவிடுவேன்” என ஞானவேல் ராஜா, தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் செய்தார். ‘மிஸ்டர் லோக்கல்’ படத்தில் சிவா நடித்துக்கொடுத்த பிறகுதான் ஞானவேல் ராஜா அமைதியானார். அந்தப் படத்துக்கான சம்பளத்தை ஞானவேல் ராஜா இழுத்தடிக்கவும்தான், பதிலுக்கு நீதிமன்றம் மூலமாகப் பாய்ந்திருக்கிறாராம் சிவா!

மிஸ்டர் மியாவ்

கமலின் இளைய மகள் அக்‌ஷரா ஹாசன் நடிப்பில், அமேஸான் தளத்தில் வெளியாகியிருக்கிறது ‘அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு’ படம். பல விருதுகளை வென்றதாகச் சொல்லப்பட்டாலும், தமிழில் படம் எவ்விதத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. பாய் ஃப்ரெண்டுடன் தனியறையில் ஆணுறை கிடைக்காமல் அல்லாடும் காட்சியில், அது கிடைத்ததும் ‘கடவுளுக்கு நன்றி’ என அக்‌ஷரா கத்தும் இடம் மட்டும் சர்ச்சையாகியிருக்கிறது. ‘கடவுள் நம்பிக்கையை அக்‌ஷரா களங்கப்படுத்திவிட்டார்’ எனக் கிளம்புகிற குரல்கள்தான் படம் குறித்த லேசான சலசலப்பை உருவாக்கியிருக்கிறது!

எக்ஸ்க்ளூசிவ்: விஜய்யுடன் கூட்டணி போட முயன்ற இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், அது சாத்தியப்படாததால் இந்திப் பக்கம் போனார். ஹாலிவுட் பாணியில் விலங்குகளை வைத்துப் படம் செய்யத் திட்டமிட்டார். ஆனால், அவர் சொன்ன பட்ஜெட்டுக்குப் பலரும் கைவிரிக்க, மீண்டும் தமிழ்ப் பக்கமே வந்திருக்கிறார். விக்ரம் - முருகதாஸ் இருவரும் இணைந்து விரைவில் படம் செய்யப்போகிறார்கள். ‘எனக்கு மிகப்பெரிய திருப்பத்தைக் கொடுக்கப் போகிற கதை’ என விக்ரம் சிலாகிக்க, அதன் பிறகுதான் விஷயம் வெளியே வந்திருக்கிறது!

உஷ்...

அன்பான மதுரைக்கார ஃபைனான்ஸியர், ஒரே நேரத்தில் நான்கு படங்கள் தயாரிக்கவிருக்கிறாராம். அதற்காக, தன்னிடம் கடன் வாங்கியிருக்கும் முன்னணி ஹீரோக்களிடம் தேதி வாங்கி வைத்திருக்கிறாராம். கதை வேட்டை நடக்கிறது!