Published:Updated:

மிஸ்டர் மியாவ்

நேஹா ஷர்மா
பிரீமியம் ஸ்டோரி
நேஹா ஷர்மா

திரைக்கு வந்து கவனம் பெற்ற படங்களை மட்டுமே இதுகாலம் வரை வாங்கி வெளியிட்ட ஹாட் ஸ்டார் நிறுவனம், இப்போது தனியாகப் படம் தயாரிக்கக் களமிறங்கிவிட்டது.

மிஸ்டர் மியாவ்

திரைக்கு வந்து கவனம் பெற்ற படங்களை மட்டுமே இதுகாலம் வரை வாங்கி வெளியிட்ட ஹாட் ஸ்டார் நிறுவனம், இப்போது தனியாகப் படம் தயாரிக்கக் களமிறங்கிவிட்டது.

Published:Updated:
நேஹா ஷர்மா
பிரீமியம் ஸ்டோரி
நேஹா ஷர்மா

ஆர்யாவின் ‘கேப்டன்’ படம் அட்டகாசமாக வந்திருக்கிறதாம். ஆர்யாவின் ‘டெடி’, ‘சார்பட்டா பரம்பரை’ படங்களுக்கு ஓடிடி தளத்தில் செம ரெஸ்பான்ஸ் அமைந்ததால், ‘கேப்டன்’ படத்தை வாங்க, போட்டி நடக்கிறது. இதற்கிடையில் படத்தின் இயக்குநர் சக்தி சுந்தர் ராஜனை வளைக்க, பல ஹீரோக்கள் போட்டிபோட, சரியான ரூட் பிடித்து ஆளை வளைத்திருக்கிறார் தனுஷ்!

‘பீஸ்ட்’ விமர்சனங்களையெல்லாம் கடந்து, தில் ராஜு தயாரிப்பில் உருவாகும் படத்துக்கு, மே மாதம் தேதி கொடுத்திருக்கிறார் விஜய். ஃபேமிலி சென்டிமென்ட் கதைகளை க்ரிஞ்ச் என இன்றைய தலைமுறை வறுத்தெடுத்துக்கொண்டிருக்கும் சூழலில், உறவுகளை மையப்படுத்திய கதையை விஜய் தைரியமாகக் கையிலெடுத்திருக்கிறார். ஒரு வீட்டுக்குள் நடக்கும் உறவுமுறைச் சிக்கலும், அதை நகைச்சுவையாகக் கையாளும் விதமும்தான் கதையாம். தமிழ், தெலுங்கு இரண்டிலும் இந்தக் கதைக்குப் பெரிய வரவேற்பு கிடைக்கும் என நம்புகிறாராம் விஜய்!

மிஸ்டர் மியாவ்
மிஸ்டர் மியாவ்

‘அறம்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, நயன்தாராவை வைத்து மீண்டும் படம் இயக்க விரும்பினார் இயக்குநர் கோபி நயினார். வருடங்கள் ஓடியும் நயன்தாரா தேதி தருவதாக இல்லை. காத்திருந்து வெறுத்துப்போன கோபி நயினார், ஆண்ட்ரியாவை அணுகிக் கதை சொல்லியிருக்கிறார். ஒன்லைன் கேட்டவுடனேயே சம்மதம் சொன்ன ஆண்ட்ரியா, “நயன்தாரா தரப்பில் ஒப்புதல் கொடுத்தால், நான் நடிக்க ரெடி” எனச் சொன்னாராம். இந்தக் கதை நயன்தாராவுக்கும் ரொம்பவே பிடித்த கதைதானாம். படமாக அடுத்தகட்டத்தை அடைவதில் சிக்கல் நீடித்ததால்தான் அவர் தள்ளிப்போட்டாராம். இரு அம்மணிகளில் யார் நடிக்கப்போகிறார்கள் என்பது இந்த வாரம் முடிவாகிவிடும்!

திரைக்கு வந்து கவனம் பெற்ற படங்களை மட்டுமே இதுகாலம் வரை வாங்கி வெளியிட்ட ஹாட் ஸ்டார் நிறுவனம், இப்போது தனியாகப் படம் தயாரிக்கக் களமிறங்கிவிட்டது. நிறுவனத்தின் சார்பில் நிறைய இயக்குநர்களிடம் கதை கேட்டுவருகிறார்கள். சசிகுமார் இயக்கத்தில் ‘குற்றப் பரம்பரை’ கதையை வெப் சீரீஸாக எடுக்கவிருக்கும் ஹாட் ஸ்டார் நிறுவனம், அடுத்த வருடத்தில் மூன்று படங்களைத் தயாரிக்கிற முடிவில் இருக்கிறதாம். மீடியம் பட்ஜெட்டில் தீவிர கதைகளைத் தேடிவருகிறார்கள்!

உஷ்...

ஜல்லிக்கட்டை மையமாகவைத்து வெற்றிகரமான இயக்குநர் எடுக்கும் படத்துக்கு, டெஸ்ட் ஷூட் செய்த வகையில் ஒன்றரைக் கோடி பில் வந்திருக்கிறதாம். ‘டெஸ்ட் ஷூட்டுக்கே இவ்வளவுன்னா, மொத்த ஷூட்டிங்குக்கு எவ்வளவு ஆகுமோ?’ என மலைத்துப்போனாராம் பிரமாண்டத் தயாரிப்பாளர்!