Published:Updated:

மிஸ்டர் மியாவ்

பெரும்பாலான நடிகைகள், தங்கள் கேரக்டருக்கு முக்கியத்துவம் இருக்கும் படங்களில் மட்டுமே நடிப்பது என்று முடிவுசெய்துவிட்டார்கள்

பிரீமியம் ஸ்டோரி

மிஷ்கின் - விஷால் பஞ்சாயத்தால் பாதியில் நின்ற ‘துப்பறிவாளன் 2’ படத்தை, எடுத்தவரை போட்டுப் பார்த்ததில் விஷால் தரப்பு ஹேப்பி. ‘ஆனால் படத்தைத் தொடர வேண்டுமென்றால், மிஷ்கினின் ஸ்டைலிலேயே வர வேண்டுமே... அதற்கு அவர்தான் வேண்டும்’ என்று தயாரிப்பு நிர்வாகிகளில் சிலர் சொல்லவும் `சண்டை மறந்து சமாதானமாகப் போய்விடலாமா...’ என்று விஷால் யோசித்துக்கொண்டிருக்கிறாராம்.

பெரும்பாலான நடிகைகள், தங்கள் கேரக்டருக்கு முக்கியத்துவம் இருக்கும் படங்களில் மட்டுமே நடிப்பது என்ற நயன்தாரா பாணியைப் பின்பற்றுவது என்று முடிவுசெய்துவிட்டார்கள் என்பதுதான் கோலிவுட்டின் தற்போதைய ஹாட் டாக். “சும்மா வந்துபோற கேரக்டர்ல ஹீரோயின் வேணும்னா யாரைத்தான் புக் பண்றது?” என்று கதை எழுதிக்கொண்டிருக்கும் இயக்குநர்கள் மண்டையைப் பிய்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

மிஸ்டர் மியாவ்
மிஸ்டர் மியாவ்

`மூக்குத்தி அம்மனி’ல் தங்கை கேரக்டரில் நடித்த ஸ்மிருதி வெங்கட், இப்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷுக்குத் தங்கையாக நடித்துவருகிறார். விக்ரம் பிரபுவின் ‘பகையே காத்திரு’ படத்தில், நாயகியாக கமிட்டாகியிருக்கும் ஸ்மிருதி, “அப்பாடா... இனி தங்கை கேரக்டர் மட்டும் குடுக்காம ஹீரோயினா புக் பண்ணுவாங்க” என்று நண்பர்களிடம் மகிழ்ச்சியாகச் சொல்லிவருகிறார்.

`அனேகனு’க்குப் பிறகு ஜாக்கி சானுடன் நடிக்கப்போன அமைரா தஸ்தூர், தமிழ்ப் பக்கமே வரவில்லை. தற்போது, பிரபுதேவாவுடன் ‘பஹிரா’ ரிலீஸுக்குக்காகக் காத்திருக்கிறார். இந்தப் படம் வந்த பிறகு, தமிழில் வாய்ப்புகள் வரும் என்று நம்புகிறார். சமீபத்தில் கோவாவுக்குச் சென்ற ரிலாக்ஸ் டூரின்போது, அமைரா வெளியிட்ட படங்கள்... இன்ஸ்டாவில் செம ரீச்.

உஷ்!

மூன்றெழுத்து தாடி இயக்குநரின் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என பல்வாள்தேவன் ஆசை தெரிவிக்க, இயக்குநரும் ஓகே சொல்லியிருக்கிறார். விஷயம் கேள்விப்பட்ட ஒரு தெலுங்குத் தயாரிப்பாளர் “ஐய்யயோ... அந்த இயக்குநரா... பட்ஜெட்டை இழுத்து விட்டுருவாரே... நம்ம கன்ட்ரோல்லயே இருக்க மாட்டாரே... வேணும்னா கதை, திரைக்கதை மட்டும் அவர்கிட்ட வாங்கிட்டு, இயக்குநரா வேற யாரையாவது போட்டுக்கோங்க” என்று பல்வாள்தேவனுக்கு அட்வைஸ் செய்திருக்கிறார். குழப்பத்திலிருக்கும் நடிகர், என்ன முடிவெடுப்பதென்று தெரியாமல் விழித்துக்கொண்டிருக்கிறாராம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு