அலசல்
Published:Updated:

மிஸ்டர் மியாவ்

ரம்யா பாண்டியன்
பிரீமியம் ஸ்டோரி
News
ரம்யா பாண்டியன்

பைக் நடிகர் பரபர வலம் வந்ததெல்லாம் பிரச்னை இல்லையாம். கூட நடித்தவரைக் கூட்டிக்கொண்டே பைக் வலம் வந்ததுதான் பஞ்சாயத்து ஆகிவிட்டதாம்

அடுத்து ரஜினியா, விஜயா எனப் பரபரத்துக் கொண்டிருந்த எதற்கும் துணிந்த இயக்குநர், இப்போது அநியாய அமைதி காக்கிறார். பிரகாச நடிகரைவைத்து அவர் இயக்கிய படம் பெரிய அளவில் போகாததால், வழக்கமான வில்லேஜ் பாதையிலேயே பயணிக்கலாமா, ட்ராக்கை மாற்றலாமா எனப் பலரிடமும் ஆலோசனை நடத்தி வருகிறார். இளம் தலைமுறை உதவி இயக்குநர்கள் பலரையும் வரவழைத்து, இன்றைய டிரெண்ட் எப்படிப்பட்டதாக இருக்கிறது என விவாதித்து வருகிறார். ‘அடுத்த படம் எவரும் எதிர்பாராத ஒன்றாக இருக்கும்’ என்று மட்டும் முதற்கட்டத் தகவலைக் கசியவிடுகிறார்கள் நெருக்கமானவர்கள்.

பைக் நடிகர் பரபர வலம் வந்ததெல்லாம் பிரச்னை இல்லையாம். கூட நடித்தவரைக் கூட்டிக்கொண்டே பைக் வலம் வந்ததுதான் பஞ்சாயத்து ஆகிவிட்டதாம். “நீங்க பைக் ஓட்டுவதில் வல்லவர். ஆனால், பைக் அனுபவம் இல்லாத அந்தம்மாவுக்கு யார் பாதுகாப்பு?” என வீட்டுக்கார அம்மணி ரொம்பவே வருத்தப்பட்டாராம். உடன் பயணித்த ஹீரோயின் போன் பண்ணி, மணிக்கணக்கில் மகிழ்ச்சியாகப் பேசிய பிறகுதான் அம்மணி நிம்மதியானாராம்.

ரம்யா பாண்டியன்
ரம்யா பாண்டியன்
ரம்யா பாண்டியன்
ரம்யா பாண்டியன்
ரம்யா பாண்டியன்
ரம்யா பாண்டியன்

தெலுங்கு பக்கம் போன பிரமாண்ட இயக்குநர் அந்தப் படத்தை முடிப்பதற்குள் படாதபாடுபட்டார். சங்கடங்கள் சரியாகி படம் வேகமெடுத்த நிலையில், திடீரென தமிழில் பாதியில் நின்ற `பார்ட் 2’ படத்தை முடிக்கக் கோரி கெடுபிடிகள் கிளம்பிவிட்டன. அக்ரிமென்ட்படி இந்நேரம் படத்தை முழுதாக முடித்துக் கொடுத்திருக்க வேண்டும். அதனால் சட்டரீதியாகவும் தப்ப முடியாது என வழக்கறிஞர்கள் சொல்ல, தெலுங்கு படத்தைத் தள்ளிவைத்துவிட்டு `பார்ட் 2’ படத்தில் தீவிரமாகிவிட்டார் பிரமாண்ட இயக்குநர். ‘இனி ஒரு படத்தை முடித்த பிறகே அடுத்த படத்துக்கு அட்வான்ஸ் வாங்குவது’ எனச் சபதம் எடுத்திருக்கிறாராம்.

புயல் காமெடி நடிகரை, அசுர நடிகரைவைத்து இயக்கிய படத்துக்காக அழைக்க நினைத்திருந்தார் ஒடுக்கப்பட்டவர்களுக்கான போர்க்குரலாக ஒலிக்கும் இயக்குநர். அப்போதைய சூழலில் அது நடைபெறவில்லை. தற்போது வாரிசைவைத்து இயக்கும் படத்தில், புயல் காமெடி நடிகரை இயக்கிய பிறகு இந்த விஷயத்தைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார் இயக்குநர். ‘அச்சச்சோ... தவற விட்டுட்டேண்ணே… ஆனா, மறக்காம இதுல கூப்பிட்டு நடிக்கவெச்சுட்டீங்களே... ரொம்ப சந்தோஷம்ணே...’ என நெகிழ்ந்துபோனாராம் புயல் காமெடி நடிகர்!ரம்யா பாண்டியன்ரம்யா பாண்டியன்