Published:Updated:

மிஸ்டர் மியாவ்

திஷா பதானி
பிரீமியம் ஸ்டோரி
திஷா பதானி

தமிழில் அடுத்தடுத்து ரவுண்ட் வர நல்ல கதைகளுக்குக் காத்திருக்கும் வர்ஷா, சமீபத்தில் தன் கண்களை தானம் செய்திருக்கிறார்.

மிஸ்டர் மியாவ்

தமிழில் அடுத்தடுத்து ரவுண்ட் வர நல்ல கதைகளுக்குக் காத்திருக்கும் வர்ஷா, சமீபத்தில் தன் கண்களை தானம் செய்திருக்கிறார்.

Published:Updated:
திஷா பதானி
பிரீமியம் ஸ்டோரி
திஷா பதானி

‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ கலவையான விமர்சனங்களைப் பெற்றிருப்பதால், அடுத்து அஜித்தை வைத்து இயக்கப்போகும் விக்னேஷ் சிவனுக்கு ஆன்லைனில் கண்டனங்கள் குவிகின்றன. ‘தல படத்தையாச்சும் பார்த்துப் பண்ணுங்க சார்…’, ‘அஜித் சார் தப்பிச்சுடுங்க…’ என்றெல்லாம் விக்னேஷ் சிவனை டேக் பண்ணி கமென்ட்டுகளைத் தெறிக்கவிடுகிறார்கள் அஜித் ரசிகர்கள். ‘வேறு இயக்குநரைத் தேர்ந்தெடுக்கலாமா?’ என அஜித் வீட்டிலும் ஆலோசனை நடந்ததாம். ‘அவர் சொன்ன கதை எனக்குப் பிடிச்சிருக்கு. அவர்தான் இயக்குநர்’ என உறுதியாக நின்றாராம் அஜித்!

தனக்கான படங்களைத் தேர்ந்தெடுப்பதைக் காட்டிலும், மகன் துருவ்வுக்கான எதிர்காலத்தை வலுவாக்குவதிலேயே குறியாக இருக்கிறார் விக்ரம். ‘ஆக்‌ஷனும் காதலும் கலந்த ஒரு கதைதான் துருவ்வுக்கு செட்டாகும்’ என்கிறாராம். தனக்குத் தெரிந்த நண்பர்கள் ரூட்டிலும், ‘புது ஆட்களாக இருந்தாலும் பரவாயில்லை… நல்ல கதைதான் முக்கியம்’ என விசாரிக்கிறாராம். இந்த வருடத்தில் அட்டகாசமான ஹீரோவாக துருவ் ஹிட் கொடுத்துவிட வேண்டும் என டார்கெட் வைத்துத் தீவிரமாக இயங்குகிறார் விக்ரம்!

திஷா பதானி
திஷா பதானி
திஷா பதானி
திஷா பதானி

எம்.ஜி.ஆருக்கும் எம்.ஆர்.ராதா-வுக்கும் இடையேயான துப்பாக்கி மோதல் குறித்து ‘தினமணி கதிர்’ இதழில் மறைந்த எழுத்தாளர் சுதாங்கன் எழுதிய தொடர் பிரபலமான ஒன்று. அதை வெப் சீரீஸாகத் தயாரிக்கிறார் ராதிகா. தொடரில் வந்தது மட்டுமல்லாமல் எம்.ஜி.ஆருக்கும் எம்.ஆர்.ராதா-வுக்கும் இடையிலான பல விஷயங்களை இந்த வெப் சீரீஸ் பந்தி வைக்கப்போகிறதாம். ஹாட் ஸ்டார், ஆஹா உள்ளிட்ட ஓடிடி தளங்கள் ராதிகாவுடன் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றன!

‘வெற்றிவேல்’, ‘96’ உள்ளிட்ட படங்களில் கவனம் பெற்ற வர்ஷா பொல்லம்மா, சமீபத்தில் ஜீ.வி.பிரகாஷுக்கு ஜோடியாக ‘செல்ஃபி’ படத்தில் நடித்தார். படத்துக்கு நல்ல கவனம் கிடைத்ததில் வர்ஷா ரொம்பவே ஹேப்பி. வர்ஷாவின் சிறப்பே அவருடைய கோழிமுட்டைக் கண்கள்தான். தமிழில் அடுத்தடுத்து ரவுண்ட் வர நல்ல கதைகளுக்குக் காத்திருக்கும் வர்ஷா, சமீபத்தில் தன் கண்களை தானம் செய்திருக்கிறார். “மக்களிடம் விழிப்புணர்வை உருவாக்கவே கண் தானம் செய்தேன்” என்கிறார் வர்ஷா.

உஷ்...

வெற்றிகரமான இயக்குநர், காமெடி நடிகரைக் கதாநாயகனாக்கி எடுக்கிற படம் வருடக்கணக்கில் நீண்டுகொண்டே போகிறது. 40 நாள்களில் படத்தை முடிப்பதாகச் சொன்ன இயக்குநர், 150 நாள்களைத் தாண்டி எடுத்துக்கொண்டே இருக்கிறாராம். காட்டுக்குள் ஷூட்டிங் என்பதால் கதறுகிறது படக்குழு. #பாவம் அவங்களுக்கு விடுதலை இல்லியா?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism