Published:Updated:

மிஸ்டர் மியாவ்

வேதிகா தத்
பிரீமியம் ஸ்டோரி
வேதிகா தத்

சிங்கிள் டேக்கில் எடுக்கப்பட்ட பார்த்திபனின் ‘இரவின் நிழல்’ படம், உலகளாவிய கவனத்தை நிச்சயம் பெறும் என்கிறார்கள் படத்தை சமீபத்தில் பார்த்தவர்கள்.

மிஸ்டர் மியாவ்

சிங்கிள் டேக்கில் எடுக்கப்பட்ட பார்த்திபனின் ‘இரவின் நிழல்’ படம், உலகளாவிய கவனத்தை நிச்சயம் பெறும் என்கிறார்கள் படத்தை சமீபத்தில் பார்த்தவர்கள்.

Published:Updated:
வேதிகா தத்
பிரீமியம் ஸ்டோரி
வேதிகா தத்

எக்ஸ்க்ளூசிவ்ஸ்

ஹெச்.வினோத் இயக்கும் அஜித்தின் 61-வது படத்தில் அவருக்கு ஹீரோ, வில்லன் என இரட்டை வேடங்கள் என ஆன்லைனில் முதற்கட்ட தகவல்கள் ஆர்ப்பரிக்கின்றன. ஆனால், உண்மையில் படத்தில் அஜித் ஒரே பாத்திரத்தில்தான் நடிக்கிறார். ‘இரட்டை வேடப் பாத்திரங்களின்மீது எனக்கு இப்போது உடன்பாடு இல்லை’ எனக் கதை ரெடியாகும்போதே ஹெச்.வினோத்திடம் வெளிப்படையாகச் சொல்லிவிட்டாராம் அஜித். அதனால், நல்லவர், கெட்டவர் என இரு குணங்களுக்கு ஒரு மனிதன் எப்படி மாறுகிறான், சமூகச் சூழல் அவனை எப்படியெல்லாம் மாற்றுகிறது என்பதையே கதையாக்கினார்களாம். அதனால், அஜித்துக்கு ஒரே பாத்திரம், இரு குணங்கள் என்பதே உண்மைத் தகவல்!

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘நானே வருவேன்’ படத்தில் ஹீரோ - வில்லன் என இரு விதங்களில் வெளுத்துக் கட்டியிருக்கிறாராம் தனுஷ். ஹீரோ கதாபாத்திரத்தைவிட வில்லன் பாத்திரத்தை எடுக்கத்தான் செல்வராகவனுக்கு அதிக நாள்கள் ஆனதாம். ஒரு கொலையைச் செய்துவிட்டுக் கதறி அழும் காட்சியில் தனுஷ் அபாரமாக நடிக்க, எழுந்துவந்து கைதட்டி, முத்தமிட்டுப் பாராட்டினாராம் செல்வா. இதுவரை தனுஷை இப்படியொரு டெரர் பாத்திரத்தில் பார்த்திருக்க முடியாது என்கிறார்கள்!

வேதிகா தத்
வேதிகா தத்

சிங்கிள் டேக்கில் எடுக்கப்பட்ட பார்த்திபனின் ‘இரவின் நிழல்’ படம், உலகளாவிய கவனத்தை நிச்சயம் பெறும் என்கிறார்கள் படத்தை சமீபத்தில் பார்த்தவர்கள். கடல், கோயில், ஹோட்டல் என அனைத்தையும் ஒரே இடத்தில் செட் போட வண்டலூர் அருகே 33 ஏக்கர் நிலத்தை வாடகைக்கு எடுத்தாராம் பார்த்திபன். நான் லீனியர் முறையில் சிங்கிள் ஷாட் படங்கள் இதுவரை உலகளாவிய அளவில் எடுக்கப்படவில்லை. இதுவரை வெளியே சொல்லப்படாத இந்த மாதிரியான மெனக்கெடல்களை விரைவில் பத்திரிகையாளர்கள் மத்தியில் விளக்கிச் சொல்லும் முடிவில் இருக்கிறாராம் பார்த்திபன்!

சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் 100-வது படத்தில், விஜய்யை நடிக்கவைக்க பெரு முயற்சி எடுத்தார் தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி. ‘சாத்தியப்படாது’ என விஜய்க்கு நெருக்கமானவர்களே சொன்ன நிலையிலும், ‘விஜய்யின் ஆரம்பகால வளர்ச்சிக்குத் துணைநின்ற நிறுவனம் என்பதால் மட்டுமல்ல… தனிப்பட்ட விதத்திலும் அவர் எங்களுக்கு நெருக்கமானவர்’ எனச் சொல்லி, தொடர்ந்து முயன்றுவந்தார் சௌத்ரி. நம்பிக்கைக்குக் கிடைத்த பரிசாக, கடந்த வாரம் சௌத்ரிக்கு சம்மதம் சொல்லி ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கிறார் விஜய். விரைவில் படம் குறித்த அறிவிப்பு வெளியாகவிருக்கிறது!

உஷ்...

“யாரை நம்பியும் படம் எடுக்க முடியலை. சம்பள விஷயத்தில் ஹீரோக்கள் எங்கேயோ போயிட்டாங்க. இந்த நேரத்துல போய் ஏன் தயாரிப்பில் இறங்குறீங்க?” என மதுரைக்கார ‘ஃபைனான்ஸ்’ தயாரிப்பாளருக்கு, பக்குவமான அறிவுரை சொன்னாராம் பிரமாண்டத் தயாரிப்பாளர். “வாங்குன கடனைத் திருப்பிக்கொடுத்தா நான் ஏன் படம் பண்ணப்போறேன்? கடனைச் சம்பளமா வசூலிக்கத்தானே படமே பண்ணப்போறேன்” என விளக்கம் கொடுத்தாராம் மதுரைக்காரர்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism