Published:Updated:

மிஸ்டர் மியாவ்

பூஜா ஹெக்டே
பிரீமியம் ஸ்டோரி
பூஜா ஹெக்டே

வரிசையான தோல்வி, கடன் உள்ளிட்ட பல விவகாரங்களைக் கடந்து ‘விலங்கு’ வெப் சீரீஸில் பெரிதாக கவனம் ஈர்த்தார் விமல்.

மிஸ்டர் மியாவ்

வரிசையான தோல்வி, கடன் உள்ளிட்ட பல விவகாரங்களைக் கடந்து ‘விலங்கு’ வெப் சீரீஸில் பெரிதாக கவனம் ஈர்த்தார் விமல்.

Published:Updated:
பூஜா ஹெக்டே
பிரீமியம் ஸ்டோரி
பூஜா ஹெக்டே

இயக்குநர் பாலாவுக்கும், நடிகர் சூர்யாவுக்கும் ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே வார்த்தைப் பிரயோகம் முற்றி, படக்குழு கன்னியாகுமரியிலிருந்து பாதியிலேயே கிளம்பி வந்துவிட்டதாகக் கடந்த வாரம் கடுமையான பரபரப்பு. உண்மையில் அப்படியொரு மோதல் நடக்கவில்லையாம். பாலா இயக்கும் படம் என்றாலே ஷாட் ஓகே ஆக பல மணி நேரம் ஆகும் என்பது எல்லோரும் அறிந்ததே! அதேபோல்தான் இந்தப் படத்திலும், ‘தெருவில் ஓடு… கடலில் ஆடு…’ எனப் படக்குழுவினரைப் படுத்தி எடுத்தாராம் பாலா. வெயில் மண்டையைப் பிளக்கும் சூழலில் பாலாவின் டெரர் தாங்காமல், நடிகர்கள் சோர்ந்து சுருண்டுவிட்டார்களாம். பாலாவும் வெயில் தாங்காமல் படாதபாடுபட்டிருக்கிறார். அதனால், ‘வெயில் தாழ்ந்த பிறகு ஷூட்டிங்கை நடத்தலாம்’ என முடிவெடுக்கப்பட்டதாம். ஜூன் மாதத்துக்குப் பிறகு ஷூட்டிங் தொடரவிருக்கிறது.

பூஜா ஹெக்டே
பூஜா ஹெக்டே

‘டான்’ படத்தின் ஷூட்டிங்குக்குக்கூட சிவகார்த்திகேயன் இந்த அளவுக்குத் தேதி கொடுத்திருக்க மாட்டார். ஆனால், படத்தின் புரொமோஷனுக்காக பல நாள்களை ஒதுக்கி, யாரையும் தவிர்க்காமல் பேசிவருகிறார் சிவகார்த்திகேயன். போனில் பேட்டி கேட்டாலும் ஓகே சொல்லி, படம் குறித்து விரிவாகப் பேசுகிறார். அந்த அளவுக்கு சிவகார்த்திகேயனுக்கு மிக நெருக்கமான படமாக அமைந்துவிட்டதாம் ‘டான்.’ தந்தை - மகனுக்கான பாசம் குறித்த படம் என்பதால், கடைக்கோடி வரை மக்கள் கொண்டாடுகிற படமாக ‘டான்’ இருக்கும் எனப் பெரிதாக நம்புகிறார் சிவா.

வரிசையான தோல்வி, கடன் உள்ளிட்ட பல விவகாரங்களைக் கடந்து ‘விலங்கு’ வெப் சீரீஸில் பெரிதாக கவனம் ஈர்த்தார் விமல். அடுத்து விமல் நடிக்கும் ‘தெய்வ மச்சான்’ படம் இப்போதே எதிர்பார்ப்பை எகிறவைத்திருக்கிறது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை விஜய் சேதுபதி வெளியிட, ‘பி & சி ஏரியாவுக்கான பக்கா ஆக்‌ஷன் சென்டிமென்ட் படம் ரெடி’ எனத் தயாராகிவிட்டது விநியோகஸ்தர்கள் தரப்பு. கதை கேட்பது தொடங்கி சம்பளம் உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும் விமலே இப்போது செய்யத் தொடங்கியிருப்பதால், இனி அவருக்கு ஏறுமுகம்தான் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.

பூஜா ஹெக்டே
பூஜா ஹெக்டே

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான ‘சாணிக் காயிதம்’ படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றிருக்கிறது. ஹீரோயினை மையப்படுத்திய கதைகளுக்கு, சமீபகாலமாக முக்கியத்துவம் கொடுத்துவந்த கீர்த்தி சுரேஷ், இத்தகைய படங்கள் பெரிதாக கவனம் ஈர்க்காததால், பழையபடி ஹீரோக்களுடன் ஜோடி போடவே விரும்புகிறாராம். அதற்காக, சமீபத்தில் அம்மணி யாருடன் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார் தெரியுமா... நடிகர் விஜய்யுடன்! “அப்படியொரு கதை அமைந்தால் நிச்சயம் சேர்ந்து நடிப்போம்” என உறுதி கொடுத்திருக்கிறாராம் விஜய்.

உஷ்...

‘என் அருமையை அவருக்கு நிச்சயம் புரிய வைப்பேன்…’ என ‘அசுர’ நடிகருக்கு எதிராகச் சபதம் போட்டு உடற்பயிற்சி தொடங்கி சினிமா தொழில்நுட்பப் பயிற்சி வரை மேற்கொள்கிறாராம் அவருடைய மாஜி மனைவி. அடுத்த வருடத்துக்குள் முக்கிய ஹீரோவை வைத்துப் படம் இயக்கி பதிலடி கொடுக்கவும் தயாராகிவிட்டாராம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism