Published:Updated:

மிஸ்டர் மியாவ்

தமன்னா
பிரீமியம் ஸ்டோரி
தமன்னா

டான்ஸிலும் எவரும் குறை சொல்ல முடியாத உச்சத்தை எட்டியிருக்கும் தற்போதைய சூழலில், திடீரென டான்ஸ் கிளாஸுக்குப் போக ஆரம்பித்திருக்கிறார் தனுஷ்

மிஸ்டர் மியாவ்

டான்ஸிலும் எவரும் குறை சொல்ல முடியாத உச்சத்தை எட்டியிருக்கும் தற்போதைய சூழலில், திடீரென டான்ஸ் கிளாஸுக்குப் போக ஆரம்பித்திருக்கிறார் தனுஷ்

Published:Updated:
தமன்னா
பிரீமியம் ஸ்டோரி
தமன்னா

சிவகார்த்திகேயனுக்கும் அருண் விஜய்க்கும் பல காலமாகவே மோதல். கடந்த வருடம் அருண் விஜய் பதிவிட்ட ஒரு ட்வீட் சிவகார்த்திகேயனை நேரடியாகத் தாக்க, இரு தரப்பு ரசிகர்கள் மத்தியில் மோதல் தூள் பறந்தது. இந்த மோதல் அடிக்கடி நடந்துவருகிறது. இந்நிலையில், அருண் விஜய்யின் மகன் அர்னவுக்கு வாழ்த்துச் சொல்லியும், அவர் நடிப்பில் ரிலீஸான ‘ஓ மை டாக்’ படத்தைப் பாராட்டியும் சிவகார்த்திகேயன் ட்வீட் பண்ண, செம வரவேற்பு. ‘பகை மறந்து அன்பு பாராட்டும் இந்த மனசு இருக்கே…’ என சிவகார்த்திகேயனைக் கொண்டாடித் தீர்த்துவிட்டார்கள் ரசிகர்கள். அருண் விஜய்யும் நன்றி தெரிவிக்க, இருவருக்குமிடையே இப்போது பேரன்பு பிறந்திருக்கிறது!

‘பிக் பாஸ்’ புகழ் ஸ்ருதி பெரியசாமி சீக்கிரமே சினிமாவுக்கு வருகிறார். நிறைய கதைகள் கேட்டுவந்த ஸ்ருதி, சமீபத்தில் அரசியல் கலந்த கிராமத்துக் கதை ஒன்றைக் கேட்டாராம். கதைக்களமும் கதாபாத்திரமும் ரொம்பவே பிடித்துப்போக உடனே ஓகே சொல்லிவிட்டாராம். “சினிமா என்பது மாஸ் மீடியா. அதில், நல்ல கதாபாத்திரமாக நடித்து, நல்ல விஷயங்களைச் சொல்லவே விரும்புகிறேன்” எனப் பொறுப்போடு சொல்கிறார் ஸ்ருதி பெரியசாமி.

லார்க் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் ‘மிர்ச்சி’ சிவா நடிக்கும் ‘சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை கடந்த வாரம் வெளியிட்டார் இயக்குநர் வெங்கட் பிரபு. ‘அகில உலக சூப்பர் ஸ்டார்’ என சிவாவுக்கு அடைமொழி போட்டு படக்குழு புரொமோஷன் பண்ண, ரஜினிகாந்த் ரசிகர்கள் பதிலுக்கு பாயத் தொடங்கியிருக்கிறார்கள். இந்தச் சர்ச்சையே படம் குறித்துப் பரவலான கவனத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சிவா - மேகா ஆகாஷ் சம்பந்தப்பட்ட கிராபிக்ஸ் காட்சிகள் சிறப்பாக வந்திருப்பதால், படத்தை வாங்க ஓடிடி தளங்கள் போட்டி போடுகின்றன!

மிஸ்டர் மியாவ்
மிஸ்டர் மியாவ்

தனுஷ் சினிமாவில் அறிமுகமான காலத்தில்கூட, டான்ஸ் கிளாஸ் பக்கம் போய் பயிற்சி எடுத்தவர் இல்லை. நடிப்பிலும் டான்ஸிலும் எவரும் குறை சொல்ல முடியாத உச்சத்தை எட்டியிருக்கும் தற்போதைய சூழலில், திடீரென டான்ஸ் கிளாஸுக்குப் போக ஆரம்பித்திருக்கிறார் தனுஷ். “இனிதான் என் முழுமையான திறமையை வெளிப்படுத்தப்போகிறேன். இதுகாலம் வரைக்குமான விஷயங்கள் எல்லாமே முன்னோட்டம்தான்…” என நண்பர்களிடம் ஆவேசமாகச் சொல்லும் தனுஷ், பொழுதுபோக்கு, சந்திப்பு என வெளிவட்டாரத் தொடர்புகளையும் துண்டித்து வருகிறாராம்!

உஷ்...

சமீபத்தில் ரோபோ சம்பந்தப்பட்ட படம் ஒன்றைத் தயாரித்து, அதில் நடிக்கவும் செய்தார் சீனியர் டைரக்டர். பட்ஜெட்டை டபுள் மடங்காக்கி விலை வைத்ததாம் ஓடிடி நிறுவனம் ஒன்று. யாரோ சொன்ன ஆலோசனையைக் கேட்டு ஓடிடி அழைப்பை நிராகரித்து, 75 ‘எல்’லில் விளம்பரம் செய்து, தியேட்டரில் ரிலீஸ் செய்தார் இயக்குநர். விளம்பரப் பணம்கூடத் திரும்பவில்லையாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism