அலசல்
அரசியல்
Published:Updated:

மிஸ்டர் மியாவ்

ராஷ்மிகா மந்தனா
பிரீமியம் ஸ்டோரி
News
ராஷ்மிகா மந்தனா

ஜோதிகாவின் 51-வது படத்தை இயக்கப்போகும் இயக்குநர் யார் என்பது இப்போதுவரை புதிராக இருக்கிறது.

கலவையான விமர்சனங்களைக் கடந்தும் கல்லாகட்டும் ஹீரோக்கள் தமிழில் இரண்டே இரண்டு பேர் மட்டும்தான். ஒருவர் ரஜினி, இன்னொருவர் விஜய்… அந்த வரிசையில் மூன்றாவது ஆளாக சிவகார்த்திகேயனைச் சேர்த்திருக்கிறது ‘டான்’ படம். கிரிஞ்ச், இழுவை, பழைய கதை எனப் படம் குறித்து நிறைய நெகடிவ் விமர்சனங்கள்… ஆனாலும், கலெக்‌ஷனில் தியேட்டர்காரர்களின் மனங்களைக் குளிரவைத்திருக்கிறது `டான்.’ ‘ஆல் சென்டர்களிலும் அடுத்த உயரத்தைத் தொட்டிருக்கிறார் சிவகார்த்திகேயன்’ எனக் கொண்டாடுகிறார்கள் விநியோகஸ்தர்கள் தரப்பில்!

ஜோதிகாவின் 50-வது படமான ‘உடன்பிறப்பே’ படத்தை இரா.சரவணன் இயக்கினார். ஜோதிகாவின் 51-வது படத்தை இயக்கப்போகும் இயக்குநர் யார் என்பது இப்போதுவரை புதிராக இருக்கிறது. இயக்குநர்கள் பொன்.பார்த்திபன், பிரியா, கௌதம் ராஜ், பிரெட்ரிக், ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் எனப் பலரிடமும் கதை கேட்ட ஜோதிகா, ஏழு மாதங்களாக அமைதியாகத்தான் இருக்கிறார். பிள்ளைகளின் படிப்பில் ஜோ அக்கறை காட்டுவதாகச் சொல்கிறார்கள்!

அஜித்தின் 62-வது படம், விவசாயம் மற்றும் ஹோட்டல் பிசினஸ் பற்றிய கதை என யார்தான் கிளப்பிவிட்டார்களோ… அதற்கு பதில் சொல்ல முடியாமல் இயக்குநர் விக்னேஷ் சிவன் படாதபாடு படுகிறார். “விவசாயத்தைப் பற்றியெல்லாம் இப்போ படம் எடுக்காதீங்க பாஸ்…” என ஆளாளுக்கு அறிவுரை சொல்லி, விக்னேஷ் சிவனுக்கு கிளாஸ் எடுக்கிறார்களாம். “விவசாயத்தைப் பற்றி எனக்கே சரிவரத் தெரியாது. கருத்து சொல்றது மாதிரியான விஷயங்கள் அஜித் சாருக்கும் பிடிக்காது. அப்படியிருக்க நாங்க எப்படி விவசாயப் படம் எடுக்க முடியும்?” என விளக்கம் சொல்கிறாராம் விக்னேஷ் சிவன்!

மிஸ்டர் மியாவ்
மிஸ்டர் மியாவ்

எக்ஸ்க்ளூசிவ்: இயக்குநர் மிஷ்கின், விரைவில் இசையமைப்பாளர் ஆகிறார். ‘சவரக்கத்தி’ படத்தை இயக்கிய மிஷ்கினின் தம்பி ஆதித்யா, இப்போது அடுத்த படத்துக்கான கதையை எழுதி முடித்திருக்கிறார். விரைவில் படப்பிடிப்பு தொடங்கவிருக்கும் நிலையில், கதையை வாசித்த மிஷ்கின் தானே இசை அமைப்பதாகச் சொல்லியிருக்கிறார். அதே வேகத்தில் இரண்டு பாடல்களுக்கு மெட்டுப் போட்டும் காட்ட, “ராஜா சார் பாட்டு மாதிரியே இருக்கு…” என நெகிழ்ந்திருக்கிறார்கள் ஆதித்யா குழுவினர். “நான் அவர் புள்ளதானே… அப்ப, பாட்டும் அவரோடது மாதிரிதானே இருக்கும்” என நெகிழ்ந்து சொன்னாராம் மிஷ்கின்!

உஷ்...

தெலுங்குத் திரையுலகை மிரட்டும் மாஸ் நடிகருக்கு, சமீபத்தில் தமிழகத்திலிருந்து கதை சொல்லப்போனாராம் ஜெட் வேக இயக்குநர். முழுக் கதையையும் கேட்ட வாரிசு நடிகர், ‘என் படத்தோட கதையை காப்பி அடிச்சு என்கிட்டேயே சொல்றீங்களே?’ எனச் சில வருடங்களுக்கு முன், தான் நடித்த படத்தின் தலைப்பைச் சொன்னாராம். ஜெட் வேக இயக்குநர் ஜெட் வேகத்தில் தமிழ்நாடு திரும்பியிருக்கிறார்!