Published:Updated:

மிஸ்டர் மியாவ்

அம்மு அபிராமி
பிரீமியம் ஸ்டோரி
அம்மு அபிராமி

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘எஸ்கேப் ஆர்டிஸ்ட்’ தொடங்கவிருக்கும் படத்தை ‘விலங்கு’ பிரசாத் இயக்கவிருக்கிறார்!

மிஸ்டர் மியாவ்

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘எஸ்கேப் ஆர்டிஸ்ட்’ தொடங்கவிருக்கும் படத்தை ‘விலங்கு’ பிரசாத் இயக்கவிருக்கிறார்!

Published:Updated:
அம்மு அபிராமி
பிரீமியம் ஸ்டோரி
அம்மு அபிராமி

ரஜினி - நெல்சன் இணையும் படத்தின் திரைக்கதை முழுக்கத் தயாராகிவிட்டது. மே மாத வெயில் முடிந்து, ஜூனில் ஷூட்டிங்கைத் தொடங்கத் திட்டமிட்டிருக்கிறது சன் பிக்சர்ஸ் நிறுவனம். காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகியிருக்கும் திரைக்கதை, ரஜினிக்கு மிகப் புதிதாக இருக்கிறதாம். ‘இந்த வயதில் காமெடி செய்தால் எடுபடுமா?’ என்கிற தயக்கம் ரஜினிக்கு இருந்ததாம். ஆனால், ‘ `அருணாச்சலம் படம்போல் முழுநீளக் காமெடி படமாக இருக்கும்… நீங்கள் இப்படிப்பட்ட கதைகளில் பட்டையைக் கிளப்புவீர்கள்…’ என்று கலாநிதி மாறன் கொடுத்த நம்பிக்கையில், காமெடி அதகளத்துக்குத் தயாராகிவிட்டாராம் ரஜினி!

விமல் நடிப்பில் உருவான ‘விலங்கு’ வெப் சீரீஸ் பெரிதாக ஹிட் அடித்தது. அதைக் கொண்டாடும் வகையில், சமீபத்தில் இயக்குநர் பிரசாத்துக்கு 20 லட்ச ரூபாய் மதிப்பில் கார் வாங்கிக்கொடுத்து அசத்தியிருக்கிறார் தயாரிப்பாளர் ‘எஸ்கேப் ஆர்டிஸ்ட்’ மதன். கூடவே, அடுத்த படைப்புக்கான அட்வான்ஸையும் கொடுத்திருக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘எஸ்கேப் ஆர்டிஸ்ட்’ தொடங்கவிருக்கும் படத்தை ‘விலங்கு’ பிரசாத் இயக்கவிருக்கிறார்!

அம்மு அபிராமி
அம்மு அபிராமி
அம்மு அபிராமி
அம்மு அபிராமி
அம்மு அபிராமி
அம்மு அபிராமி

தமிழில் வருடத்துக்கு இரண்டு படங்கள் நடித்தே தீருவது என முடிவெடுத்திருக்கிறாராம் சமந்தா. ஹீரோயின் ஓரியன்டட் படங்களைக் காட்டிலும், முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடிக்கவே அம்மணி ஆசைப்படுகிறாராம். விஜய்க்கு மேனேஜராகப் பணியாற்றும் ஜெகதீஸ்தான் சமந்தாவுக்கும் மேனேஜர். அதனால் மீண்டும் விஜய்யுடன் ஜோடி போடவும் தீவிரமான முயற்சிகளில் இருக்கிறார் சமந்தா. பல கோடிகள் சம்பளமாகப் பேசினாலும், ஒரு பாடலுக்கு நடனமாட இப்போது சமந்தா சம்மதிப்பது கிடையாதாம்!

150 நாள்களைக் கடந்து வெற்றிமாறனின் ‘விடுதலை’ ஷூட்டிங் நடந்துவருகிறது. சூரி கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில், விஜய் சேதுபதி மிக முக்கியமான பாத்திரத்தில் நடிக்கிறார். ஆரம்பத்தில் விஜய் சேதுபதியிடம் 15 நாள்கள் மட்டுமே கேட்கப்பட்டதாம். பிறகு 40 நாள்களாக உயர்த்திவிட்டார்களாம். இப்போது சூரிக்கு இணையான ஹீரோ பாத்திரமாகவே விஜய் சேதுபதி பாத்திரம் மாறிவிட்டதாம். சிறுமலைப் பகுதியில் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்துவருகிறது!

உஷ்...

வாரிசுப்புள்ளியின் நிறுவனம், அடுத்தடுத்து பல படங்களின் விநியோக உரிமைகளை வளைத்துப் போட்டு வருகிறது. ஆனால், பணப் பரிவர்த்தனை விஷயங்களில் வாரிசின் நிறுவனம் அநியாயக் குளறுபடிகளைச் செய்கிறதாம். ‘பேசுவது ஒன்று… கொடுப்பது ஒன்று’ என்கிற அளவில்தான் கம்பெனியின் கணக்கு வழக்கு இருக்கிறதாம்!