Published:Updated:

மிஸ்டர் மியாவ்

ப்ரியங்கா மோகன்
பிரீமியம் ஸ்டோரி
ப்ரியங்கா மோகன்

சசிகுமார் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்கும் ‘குற்றப் பரம்பரை’ வெப் சீரீஸ், ‘ஹாட் ஸ்டார்’ தயாரிப்பில் உருவாகிறது.

மிஸ்டர் மியாவ்

சசிகுமார் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்கும் ‘குற்றப் பரம்பரை’ வெப் சீரீஸ், ‘ஹாட் ஸ்டார்’ தயாரிப்பில் உருவாகிறது.

Published:Updated:
ப்ரியங்கா மோகன்
பிரீமியம் ஸ்டோரி
ப்ரியங்கா மோகன்

சிவகார்த்திகேயனின் ‘டான்’ படம் ஷூட்டிங் தொடங்கி டபுள் பாசிட்டிவ் பார்த்த வரை நெகட்டிவ் ரிசல்ட்தான். அந்த தைரியத்தில்தான் உதயநிதி நடிப்பில் உருவான ‘நெஞ்சுக்கு நீதி’ படத்தை ஒரு வார இடைவெளிக்குள் வெளியிட்டார்கள். ‘டான்’ ரிலீஸான தியேட்டர்களிலும் ‘நெஞ்சுக்கு நீதி’ படத்தைத் திரையிடத் திட்டமிட்டார்கள். ஆனால், பலருடைய கணிப்புகளையும் தாண்டி ‘டான்’ இரண்டாவது வாரத்திலும் வசூல் மழை கொட்ட, அதனோடு போட்டி போட முடியாமல் தடுமாறுகிறது ‘நெஞ்சுக்கு நீதி.’ இத்தனைக்கும் படம் குறித்த விமர்சனங்கள் செம பாசிட்டிவ்வாக இருக்கின்றன. சரியான நேரத்தில் ரிலீஸாகியிருந்தால் உதயநிதிக்குக் கூடுதல் கவனமும் வெற்றியும் கிடைத்திருக்கும் என்கிறார்கள்.

ப்ரியங்கா மோகன்
ப்ரியங்கா மோகன்
ப்ரியங்கா மோகன்
ப்ரியங்கா மோகன்
ப்ரியங்கா மோகன்
ப்ரியங்கா மோகன்
ப்ரியங்கா மோகன்
ப்ரியங்கா மோகன்
ப்ரியங்கா மோகன்
ப்ரியங்கா மோகன்

சூர்யா நடிப்பில் பாலா இயக்கும் படத்தின் முதல் ஷெட்யூல் முடிந்து சமீபத்தில் திரும்பியது படக்குழு. 30 நாள்கள் நடந்த ஷூட்டிங்கில் ஒரு மணி நேர ஃபுட்டேஜ் தேறியிருக்கிறதாம். எடிட் செய்து பார்த்த வகையில் பாலாவுக்குப் பரம திருப்தியாம். அடுத்த ஷெட்யூலை சீக்கிரமே தொடங்கும் ஐடியாவில் இருக்கிறாராம். கூடுதல் தகவல்: படத்தில் பணியாற்றும் பல டெக்னீஷியன்கள் பாலாவுக்காக, ‘சம்பளமே வேண்டாம்’ எனச் சொல்லியிருக்கிறார்கள்!

சசிகுமார் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்கும் ‘குற்றப் பரம்பரை’ வெப் சீரீஸ், ‘ஹாட் ஸ்டார்’ தயாரிப்பில் உருவாகிறது. விஜயகாந்த் மகன் சண்முகப் பாண்டியன் இதில் முக்கியப் பாத்திரத்தில் நடிப்பது உறுதியாகியிருக்கிறது. ‘குற்றப் பரம்பரை’ நாவலில் ‘வேயன்னா’ பாத்திரம்தான் முதன்மையானது. அந்தப் பாத்திரத்தில் நடிக்கப்போவது யார் என்பதுதான் புதிராக இருக்கிறது. சத்யராஜ், ராஜ்கிரண், சரத்குமார் எனப் பலருடைய பெயர்களும் அடிபடுகின்றன. “கட்டப்பா பாத்திரத்துக்குப் பிறகு வேயன்னா எனக்குப் பெயர் சொல்லும்விதமாக இருக்கும்” எனச் சொன்னாராம் சத்யராஜ். சம்பள விஷயங்கள் ஓகேயானால் அவர்தான் ‘வேயன்னா’ என்கிறார்கள்.

உஷ்...

“இப்போ வர்ற படமெல்லாம் ஏன் ஓடுது, ஏன் தோற்குதுன்னு பல்ஸ் பிடிக்கவே முடியலை” என நெருங்கியவர்களிடம் புலம்பினாராம் பெரிய நடிகர். தன் கணிப்பு தவறி, பெரிய ஹிட் அடித்த படங்களின் பட்டியலையும் சொன்னாராம். அதில் இரண்டு படங்கள், ‘வருத்தப்படாத’ நடிகர் நடித்ததாம்!