Published:Updated:

மிஸ்டர் மியாவ்: அஜித் சம்பளம் ரூ.105 கோடி - ‘அஜித் 62’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்ஸ்

அஜித்
பிரீமியம் ஸ்டோரி
அஜித்

‘சம்பள விஷயத்தில் காம்ப்ரமைஸ் கூடாது’ எனப் படம் கமிட்டானபோதே லைகா நிறுவனத்திடம் தெளிவாகச் சொல்லிவிட்டாராம் அஜித்.

போனி கபூர் தயாரிப்பில் மூன்று படங்களுக்கு ஒப்பந்தமான அஜித் குமார், மூன்றாவது படத்தில் தற்போது நடித்துவருகிறார். இதற்காக மே மாத வெயிலையும் பொருட்படுத்தாமல் ஹைதராபாத்தில் மாதக் கணக்கில் தங்கியிருக்கிறார். ஹெச்.வினோத் இயக்கும் இந்தப் படத்தை சீக்கிரமே முடித்துக் கொடுத்துவிட்டு, ஜூலை மாதத்தில் 62-வது படத்தைத் தொடங்கும் எண்ணத்தில் இருக்கிறார் அஜித்!

மிஸ்டர் மியாவ்: அஜித் சம்பளம் ரூ.105 கோடி - ‘அஜித் 62’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்ஸ்

அஜித்தின் 62-வது படத்தைத் தயாரிக்கும் லைகா நிறுவனம், அவருக்கான சம்பளத்தை உறுதிசெய்துவிட்டது. ‘வலிமை’ படம் கையைக் கடித்த நிலையிலும், அஜித்துக்குப் பேசப்பட்டிருக்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ரூ.105 கோடியாம். இதுவரை இந்த அளவு சம்பளத்தை அஜித் எட்டியது இல்லை. “போனி கபூரிடம் மூன்று படங்களுக்குச் சேர்த்து வாங்கிய சம்பளத்தை, லைகாவிடம் ஒரே படத்தில் வாங்குகிறார் அஜித்” என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள்!

‘சம்பள விஷயத்தில் காம்ப்ரமைஸ் கூடாது’ எனப் படம் கமிட்டானபோதே லைகா நிறுவனத்திடம் தெளிவாகச் சொல்லிவிட்டாராம் அஜித். ஆனாலும், ரூ.100 கோடி எனத் தீர்மானித்ததாம் லைகா. ஐந்து கோடிக்காக மறுபடியும் பேச்சுவார்த்தை, பஞ்சாயத்து என இழுக்க, “அஜித் கேட்கும் 105 கோடியையும் கொடுத்துவிடுங்கள்…” என்றாராம் சுபாஷ்கரன். “அஜித்தை வைத்துப் படம் தயாரிப்பது என் கனவு. லாபத்துக்காக நான் படம் தயாரிக்கவில்லை” என அஜித் வட்டாரத்திடமும் அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார்!

மிஸ்டர் மியாவ்: அஜித் சம்பளம் ரூ.105 கோடி - ‘அஜித் 62’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்ஸ்

‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாத நிலையிலும், இந்தப் படத்துக்கு இயக்குநர் விக்னேஷ் சிவன் கேட்ட சம்பளம் ரூ.10 கோடி. லைகாவும் இதற்கு ஓகே சொல்லிவிட்டதாம். ரூ.35 கோடியில் மற்ற டெக்னீஷியன்ஸ், ஆர்டிஸ்ட்ஸ் மற்றும் ஷூட்டிங் செலவுகளைப் பார்த்துக்கொண்டால், சுமார் ரூ.150 கோடியில் படத்தை முடிக்கலாம் எனத் திட்டமிட்டிருக்கிறது லைகா. விக்னேஷ் சிவன், குறித்துக் கொடுத்த பட்ஜெட் ரூ.170 கோடியாம். ‘அவ்வளவு முடியாது’ எனக் குறைக்கச் சொல்லியிருக்கிறது லைகா!

மிஸ்டர் மியாவ்: அஜித் சம்பளம் ரூ.105 கோடி - ‘அஜித் 62’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்ஸ்

விவசாயக் கதை, ஹோட்டல் சம்பந்தப்பட்ட கதை என அஜித்தின் 62-வது படம் குறித்துக் கிளம்பும் செய்திகள் யாவுமே கற்பனைதான் என்கிறது படக்குழு. சரவணபவன் அண்ணாச்சியின் உண்மைக்கதையை நகாசு வேலைகள் பார்த்து பரபரப்பான த்ரில்லர் கதையாக மாற்றியிருப்பதாகக் கிளம்பும் செய்தியிலும் உண்மை இல்லையாம். ‘இதுவரை அஜித் தொடாத ஒரு ஏரியா… இப்போதைக்கு இதைத்தான் சொல்ல முடியும்’ என்கிறது படக்குழு!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism