Published:Updated:

மிஸ்டர் மியாவ்

அதுல்யா ரவி
பிரீமியம் ஸ்டோரி
அதுல்யா ரவி

அறிமுக இயக்குநர் தமிழ் இயக்கத்தில், சோனி லிவ்வில் வெளியாகியிருக்கும் ‘சேத்துமான்’ படத்துக்குத் தனித்துவமான வரவேற்பு கிடைத்திருக்கிறது

மிஸ்டர் மியாவ்

அறிமுக இயக்குநர் தமிழ் இயக்கத்தில், சோனி லிவ்வில் வெளியாகியிருக்கும் ‘சேத்துமான்’ படத்துக்குத் தனித்துவமான வரவேற்பு கிடைத்திருக்கிறது

Published:Updated:
அதுல்யா ரவி
பிரீமியம் ஸ்டோரி
அதுல்யா ரவி

ஷாருக்கான் நடிப்பில் முதன்முறையாக இந்தித் திரையுலகில் கால்வைத்திருக்கும் இயக்குநர் அட்லி, 42 நாள்களுக்கான ஷூட்டிங்கை முடித்திருக்கிறார். அடுத்தகட்ட ஷூட்டிங்குக்கு ஷாருக் கான் தேதி கொடுக்காமல் இழுத்தடிப்பதால், படாதபாடு படுகிறார் அட்லி. இத்தனைக்கும் மும்பையில் ஷாருக் கான் வசிக்கும் வீட்டுக்கும், அட்லி வசிக்கும் அலுவலகத்துக்கும் இடையே அரை கிலோமீட்டர் தூரம்தானாம். ஆனாலும், ஷாருக் கானைச் சந்தித்துப் பேசவே அட்லியால் முடியவில்லை. சில வாரங்களுக்கு முன்பு, ‘இன்னும் எத்தனை நாள்கள் ஷூட்டிங் தேவை?’ என ஷாருக் தரப்பிலிருந்து கேட்கப்பட்டிருக்கிறது. ‘140 நாள்கள்’ என அட்லி பதில் சொல்ல, அதன் பிறகுதான் இந்த அநியாய அமைதியாம்!

பாசிட்டிவ்வான விமர்சனங்களையே விளம்பர வடிவில் புரொமோட் செய்தும், உதயநிதியின் ‘நெஞ்சுக்கு நீதி’ படத்தை லாபமான படமாக மாற்ற முடியவில்லையாம். ஆளுங்கட்சி நிர்வாகிகள் மூலமாகத் தியேட்டர்களை நிறைத்தும், ஷேர் மிகக் குறைந்த அளவிலேயே கிடைத்திருக்கிறது. இதனால், உதயநிதி ரொம்பவே அப்செட். படத்தின் இயக்குநர் அருண் ராஜா காமராஜ், விஜய்க்குக் கதை சொல்லத் தயாராகிவந்த நிலையில், அங்கேயும் கேட் விழுந்திருக்கிறது!

மிஸ்டர் மியாவ்
மிஸ்டர் மியாவ்
மிஸ்டர் மியாவ்

அறிமுக இயக்குநர் தமிழ் இயக்கத்தில், சோனி லிவ்வில் வெளியாகியிருக்கும் ‘சேத்துமான்’ படத்துக்குத் தனித்துவமான வரவேற்பு கிடைத்திருக்கிறது. படத்தின் பட்ஜெட் மொத்தமே 50 லட்சம்தான். அந்த வகையில் படத்தைத் தயாரித்த பா.ரஞ்சித்துக்கும் கையைக் கடிக்கவில்லை. இயக்குநர் தமிழ், ‘உறியடி’ விஜயகுமாரை வைத்து அடுத்த படத்தை இயக்கவிருக்கிறார் என்பது லேட்டஸ்ட் தகவல்!

அண்ணாச்சி சரவணன் நடிப்பில் ‘தி லெஜண்ட்’ படத்தின் டிரெய்லருக்குக் கலாய்ப்பு கலந்த வரவேற்பு கிடைத்திருக்கிறது. படத்தில் பங்கேற்ற அனைத்துத் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் அன்புப் பரிசு கொடுத்து அசத்தியிருக்கிறார் சரவணன். சிறிய அளவில் பங்களிப்பு செய்தவர்களுக்கும் சரவணா ஸ்டோர்ஸ் பரிசு கூப்பன்கள் வழங்கப்பட்டனவாம். படத்தில் நடித்தவர்களின் காஸ்ட்யூம் திரும்பப் பெறப்படுவது வழக்கம். ஆனால், அவற்றையும் பயன்படுத்தியவர்களுக்கே அன்புப் பரிசாகக் கொடுக்கச் சொல்லிவிட்டாராம் சரவணன்!

உஷ்...

குடும்ப வாரிசுகளில் ஒருவரான மௌன நாயகரின் படங்களுக்கு, பிரகாச நிறுவனத்தில் சாட்டிலைட் உரிமை நல்ல ரேட்டுக்குக் கொடுக்கப்படுவது வழக்கம். ஆனால், ‘இனி அவருடைய படங்களை வாங்கவே வேண்டாம்’ என முடிவெடுக்கப்பட்டிருக்கிறதாம். என்ன மோதலோ?!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism