அரசியல்
சமூகம்
அலசல்
Published:Updated:

மிஸ்டர் மியாவ்

சாரதா தாஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
சாரதா தாஸ்

சூரி - விஜய் சேதுபதி நடிப்பில் வெற்றிமாறன் இயக்கிவரும் ‘விடுதலை’ படம், சிறுமலைக் காடுகளில் நடந்துவருகிறது.

இயக்குநர் சிறுத்தை சிவா சூர்யாவுக்காக வெயிட்டிங்… ‘அண்ணாத்த’ படத்துக்குப் பிறகு நல்ல டைம் எடுத்து பக்காவான கதையை ரெடி செய்திருக்கும் சிவா, சூர்யாவைச் சந்தித்துச் சொல்ல, அவருக்கும் டபுள் ஓகே. தயாரிப்பாளர் ‘ஸ்டூடியோ கிரீன்’ ஞானவேல் ராஜாவும் ரெடி. ஆனாலும், சூர்யாவைவைத்து பாலா இயக்கும் படம் எப்போது முடியும் எனத் தெரியாததால், தேதியை முடிவுசெய்ய முடியவில்லை. விரைவில் இரண்டாவது ஷெட்யூலைத் தொடங்கவிருக்கும் பாலா, `தோராயமாக 50 நாள்கள்’ என்கிறாராம்.

நடிகர் ஜி.எம்.குமார் நேரம் கிடைக்கிறபோதெல்லாம் ட்விட்டர் தளத்தில் அட்டகாசமான சிந்தனைகளைப் பதிவிடுகிறார். கடந்த வாரம், “ஓநாயால் தன் உயிருக்கு ஆபத்து எனத் தன் வாழ்நாள் முழுக்க எண்ணுகிற ஆடு, வளர்ப்பவனின் குழம்பில் வேகும். அதேபோல் ஊருக்குப் பயந்து வாழும் நாம், குடும்ப பாரத்தால் அடித்து நொறுக்கப்படுகிறோம்” என அவர் ட்வீட்டியிருந்த சிந்தனைக்கு செம வரவேற்பு. பலரும் பேசத் தயங்கும் விஷயங்களை வெளிப்படையாகப் போட்டு உடைப்பதில்தான் ஜி.எம்.குமார் தனித்துவம் பெறுகிறார்.

ரஜினி - நெல்சன் இருவரும் அடிக்கடி சந்தித்துப் பேசிவருகிறார்கள். ரஜினி வேறு இயக்குநரைத் தேடுவதாகச் செய்திகள் கிளம்பியதை அடுத்து, ‘படம் செய்வது உறுதி’ என நெல்சனிடம் சொல்லியிருக்கிறார் ரஜினி. இதற்கிடையில் முழுக்கதையையும் புத்தகமாக்கி ரஜினியிடம் ஒப்படைத்து, அவர் சொன்ன சிறு சிறு திருத்தங்களையும் சரிசெய்திருக்கிறார் நெல்சன். ஜூலை மாதம் ஷூட்டிங் தொடங்க வாய்ப்பு என்கிறார்கள்.

சாரதா தாஸ்
சாரதா தாஸ்
மிஸ்டர் மியாவ்
மிஸ்டர் மியாவ்

சூரி - விஜய் சேதுபதி நடிப்பில் வெற்றிமாறன் இயக்கிவரும் ‘விடுதலை’ படம், சிறுமலைக் காடுகளில் நடந்துவருகிறது. விஷப்பூச்சிகளும், அட்டைகளும் படக்குழுவினரைப் படாதபாடுபடுத்துகின்றனவாம். வெற்றிமாறனுக்கும் அட்டைக்கடி கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனாலும், இரவு, பகல் என்று ஷூட்டிங்கில் தீவிரமாக இருக்கிறார் வெற்றி மாறன். 200 நாள்களைத் தாண்டி படப்பிடிப்பு நீண்டுகொண்டே போனதால், தயாரிப்பாளர் எல்ரெட் குமார் சொல்ல முடியாத வேதனையில் இருந்தார். “படத்தை இரண்டு பாகமாக வெளியிடலாம்” என வெற்றி மாறன் சொன்னதில், தயாரிப்பாளருக்கும் இப்போது உற்சாகமாகிவிட்டது.

உஷ்...

தேவையற்ற சர்ச்சைகள் வரும் என்பதால், முன்னணி ஹீரோக்கள் பெரும்பாலும் அரசியல் கதைகளைத் தவிர்த்துவிடுவார்கள். ஆனால், அசுர நடிகர் அரசியல் கதைகளைச் செய்யத்தான் அதிகம் விரும்புகிறாராம். பரபரப்பான அரசியல் கதை ஒன்றை அவரே எழுதிவைத்திருக்கிறாராம்.