Published:Updated:

மிஸ்டர் மியாவ்

ஷிவானி
பிரீமியம் ஸ்டோரி
ஷிவானி

ரஜினிகாந்த், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரை நட்புரீதியாகத்தான் தன் வீட்டுக்கு வரவழைத்துப் பேசியிருக்கிறார்.

மிஸ்டர் மியாவ்

ரஜினிகாந்த், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரை நட்புரீதியாகத்தான் தன் வீட்டுக்கு வரவழைத்துப் பேசியிருக்கிறார்.

Published:Updated:
ஷிவானி
பிரீமியம் ஸ்டோரி
ஷிவானி

* இயக்குநர் வெற்றிமாறனின் வேண்டுகோளுக்காக ‘விடுதலை’ படத்தில் ஒரு பாடலைப் பாடிக்கொடுத்திருக்கிறார் தனுஷ். முதன்முறையாக இளையராஜாவின் இசையில் பாட்டுப் பாடி அவரிடம் பாராட்டும் வாங்கியிருக்கிறார் தனுஷ்!

* விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தில், அரசியல்ரீதியான பகுதிகளை கம்ப்ளீட்டாக நீக்கச் சொல்லியிருக்கிறார் அஜித். அரசியல் சம்பந்தப்பட்ட வசனங்கள்கூட இடம்பெறக் கூடாது எனக் கறார் காட்டியிருக்கிறாராம்.

* இப்போதைக்கு நம்பர் ஒன் பரபரப்பு நடிகை சமந்தாதான். அவர் கதை கேட்டு ஓகே சொல்லியிருக்கும் படங்களின் எண்ணிக்கையே பத்தைத் தாண்டுகிறதாம். மூன்றிலிருந்து ஐந்து கோடிக்கு உயர்ந்திருக்கிறது அம்மணியின் சம்பளம்.

* வரிசையாகப் படங்கள் செய்யப் பலருக்கும் அட்வான்ஸ் கொடுத்துவரும் ஹாட் ஸ்டார் நிறுவனம், அடுத்த வருட ரிலீஸுக்கு 10 படங்களைத் தயாரிக்கவிருக்கிறது. யோகி பாபு, சூரி இருவருக்கும் தலா இரண்டு படங்களைப் பேசி வளைத்திருக்கிறது ஹாட் ஸ்டார்.

* எப்போது படப்பிடிப்பு தொடங்கும் என்பதுகூடத் தெரியாத நிலையிலிருக்கும் சூர்யாவின் ‘வாடிவாசல்’ படத்தின் ஆடியோ ரைட்ஸை ‘கலைப்புலி’ தாணு எத்தனை கோடிக்குப் பேசியிருக்கிறார் தெரியுமா... 20 கோடிக்கு!

* ‘கைதி 2’ படத்தை எடுக்கச் சொல்லி, லோகேஷ் கனகராஜைக் கிட்டத்தட்ட மிரட்டுகிறது டிரீம் வாரியர்ஸ் நிறுவனம். ‘சூர்யா வில்லன், கார்த்தி ஹீரோ என்றால் நான் நாளைக்கே ரெடி’ என, `பொளேர்’ பதில் சொல்லியிருக்கிறார் லோகேஷ்.

ஷிவானி
ஷிவானி
ஷிவானி
ஷிவானி
ஷிவானி
ஷிவானி

* போனி கபூர் கொடுக்கவேண்டிய கடனுக்காக, சென்னையில் அவருக்குச் சொந்தமாக இருந்த ஒரு பங்களாவைத் தனக்குக் கைமாற்றிக்கொண்டாராம் அன்புச் செழியன்.

* ரஜினிகாந்த், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரை நட்புரீதியாகத்தான் தன் வீட்டுக்கு வரவழைத்துப் பேசியிருக்கிறார். நெல்சன் கதையைத் திருத்துகிற பொறுப்பை ரஜினி கே.எஸ்.ரவிக்குமாருக்கு வழங்கியிருப்பதாக வரும் செய்திகளில் உண்மை இல்லையாம்.

* விஜய்யின் அடுத்த படத்தை இயக்கப்போவது லோகேஷ் கனகராஜ் எனக் கிட்டத்தட்ட உறுதியாகியிருக்கும் நிலையில், அட்லியும் தொடர்ந்து பேசிவருகிறார். ஷாருக் கான் படத்துக்கான ஷூட்டிங் இடைவெளியில் விஜய்யிடம் ஒரு கதை சொல்லி ஓகே வாங்கிவைத்திருக்கிறார் அட்லி.

* ‘கொரோனா குமார்’ படத்தின் கதையை முழுவதுமாக மாற்றச் சொல்லியிருக்கிறார் சிம்பு. ‘மாநாடு’ வெற்றிக்கு முன்பு சொன்ன கதை என்பதால், ‘இனி என் படங்கள் இப்படித்தான் இருக்க வேண்டும்’ என டிமாண்ட் காட்டி கதையைப் பெரிதாக்கச் சொல்லியிருக்கிறார் சிம்பு!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism