Published:Updated:

மிஸ்டர் மியாவ்

மது ஷாலினி
பிரீமியம் ஸ்டோரி
மது ஷாலினி

அஜித்குமார், ஹைதராபாத்தில் 50 நாள்கள் நடந்த படப்பிடிப்பை முடித்துக்கொண்டு சென்னைக்கு வந்திருக்கிறார்

மிஸ்டர் மியாவ்

அஜித்குமார், ஹைதராபாத்தில் 50 நாள்கள் நடந்த படப்பிடிப்பை முடித்துக்கொண்டு சென்னைக்கு வந்திருக்கிறார்

Published:Updated:
மது ஷாலினி
பிரீமியம் ஸ்டோரி
மது ஷாலினி

விஜய்யின் அடுத்த படத்தில் அவரோடு ஜோடி போட ரொம்பவே ஆர்வமாக இருக்கிறார் சமந்தா. லோகேஷ் கனகராஜ் இயக்கம், தயாரிப்பு லலித் - ஜெகதீஷ் என முடிவாகியிருக்கும் நிலையில், அம்மணியின் கனவு பலிக்க வாய்ப்பிருப்பதாகச் சொல்கிறார்கள். காரணம், ஜெகதீஷ்தான் சமந்தாவுக்கு மேனேஜராகப் பல காலமாகப் பணியாற்றிவருகிறார். சமந்தாவின் மார்க்கெட் இப்போது பல மொழிகளில் கொடிகட்டிப் பறப்பதால், பிசினஸுக்குப் பேருதவியாக இருக்கும் என விஜய்யும் நினைக்கிறாராம்.

மிஸ்டர் மியாவ்
மிஸ்டர் மியாவ்
மிஸ்டர் மியாவ்

அஜித்குமார், ஹைதராபாத்தில் 50 நாள்கள் நடந்த படப்பிடிப்பை முடித்துக்கொண்டு சென்னைக்கு வந்திருக்கிறார். இன்னும் 20 நாள்கள் ஹெச்.வினோத் தேதி கேட்டிருக்கும் நிலையில், ஜூலை மாதத்திலிருந்து தொடங்கலாம் எனச் சொல்லியிருக்கிறார் அஜித். இரண்டே ஷெட்யூல், மொத்தமாக 70 நாள்கள் என கனகச்சிதமாகத் திட்டமிட்டு ஜெட் வேகத்தில் இயங்குகிறாராம் ஹெச்.வினோத். வங்கிக்கும் வாடிக்கையாளர்களுக்கும் இடையிலான தொடர்பைத்தான் கதைக்களமாக வைத்திருக்கிறார்களாம்.

இயக்குநர் பாலாவுக்கும் சூர்யாவுக்கும் இடையே மோதல் எனச் செய்திகள் பறந்த நிலையில், சீக்கிரமே ஷூட்டிங்கை மறுபடியும் தொடங்கி, ‘முட்டலும் இல்லை, மோதலும் இல்லை’ என நிரூபிக்க நினைத்தார்கள். சூர்யா தயாராக இருந்தும், பாலா அடுத்தகட்ட ஷூட்டிங்குக்கு இன்னமும் ஆயத்தமாக வில்லையாம். ‘சிறுத்தை’ சிவா, வெற்றிமாறன், சுதா கொங்கரா, லோகேஷ் கனகராஜ் என அடுத்தடுத்து செம லைன்அப் வைத்திருக்கும் சூர்யா, பாலா படத்தை முடிக்காமல் அடுத்த படத்தைத் தொடங்கச் சாத்தியமில்லை. இரு தரப்புக்கும் நெருக்கமானவர்கள் பேச்சுவார்த்தை நடத்திவருகிறார்கள்.

‘கோப்ரா’ படத்தின் ரிலீஸுக்குக் காத்திருக்கும் விக்ரம், அடுத்து பா.ரஞ்சித்துடன் கூட்டணி போடுகிறார். கோலார் தங்க வயலில் பல காலமாகக் கஷ்டப்படும் தமிழ்த் தொழிலாளர்கள் குறித்த கதை என்பதால், படத்துக்குப் பெரிய பட்ஜெட் தேவைப்படும் சூழல். தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா எதற்கும் தயார் மனநிலையில் இருந்தாலும், ஸ்கிரிப்டிலேயே முடிந்த மட்டுமான செலவுகளைக் குறைத்துவருகிறாராம் ரஞ்சித். தன் முதல் படமான ‘அட்டக்கத்தி’யை ரிலீஸ் செய்து தனக்கு அடையாளம் கொடுத்தவர் ஞானவேல் ராஜா என்பதால் ரஞ்சித்துக்கு இவ்வளவு விசுவாசமாம்!

உஷ்...

‘காமெடி கதையே வேணாம்’ எனப் பெரிய நடிகர் சொன்னதால்தான், கத்தியும் ரத்தமுமாக இறங்கிவிட்டாராம் ட்ரீட்மென்ட் டைரக்டர். எல்லாமும் சேர்த்து ‘150 சி’க்குள் படத்தை முடிக்கச் சொல்லியிருக்கிறதாம் பிரகாச தயாரிப்பு நிறுவனம். “கதையும் பெரிசா இருக்கணும்; காசும் செலவாகக் கூடாதுன்னா எப்படி?” என்கிறதாம் இயக்குநர் தரப்பு!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism