Published:Updated:

மிஸ்டர் மியாவ்

ஐஸ்வர்யா மேனன்
பிரீமியம் ஸ்டோரி
ஐஸ்வர்யா மேனன்

ஆர்யாவின் ‘கேப்டன்’ படத்தின் பிசினஸ், தமிழ் சினிமாப்புள்ளிகளை மிரளவைத்திருக்கிறது

மிஸ்டர் மியாவ்

ஆர்யாவின் ‘கேப்டன்’ படத்தின் பிசினஸ், தமிழ் சினிமாப்புள்ளிகளை மிரளவைத்திருக்கிறது

Published:Updated:
ஐஸ்வர்யா மேனன்
பிரீமியம் ஸ்டோரி
ஐஸ்வர்யா மேனன்

விஜய்யின் 66-வது படத்துக்குப் பலவிதமான தலைப்புகளைப் பரிசீலித்து, இறுதியாக ‘வாரிசு’ எனப் பெயர் சூட்டியிருக்கிறார்கள். ஃபர்ஸ்ட் லுக் செம ஸ்டைலிஷ்ஷாக இருந்தாலும், படம் பக்கா ஃபேமிலி சென்டிமென்ட்டாம். இந்தக் காலகட்ட இளைய தலைமுறை இதையெல்லாம் கிரிஞ்ச்சாகக் கலாய்க்கும் எனத் தெரிந்தும், இந்தக் குடும்பப் பாங்கான கதைக்குத் தைரியமாக ஓகே சொன்னாராம் விஜய். தலைப்பையாவது மாடர்னாக வைக்கலாம் எனச் சிலர் ஆலோசனை சொல்ல, ‘கதைக்கு ஏற்ற தலைப்பு எதுவோ அதையே வையுங்கள்’ என்றாராம் விஜய். அதன் பிறகுதான் ‘வாரிசு’ ஓகே ஆகியிருக்கிறது!

ஹாட் ஸ்டாரில் ரிலீஸான ‘O2’ படத்தைப் பெரிய அளவில் எதிர்பார்த்தார் நயன்தாரா. காரணம், கதைத் தேர்வில் டிரீம் வாரியர்ஸ் நிறுவனத்தின்மீது அவர் வைத்த நம்பிக்கை. முதலில் கதை கேட்டபோது, “இது ‘அறம்’ படத்தை நினைவூட்டுவதுபோல் இருக்கிறதே…” எனச் சொல்லியிருக்கிறார் நயன்தாரா. “இது முற்றிலும் மாறுபட்ட உலகளாவிய கதை…” என டிரீம் வாரியர்ஸ் நிறுவனம் நம்பிக்கையூட்ட, அர்ப்பணிப்பாக நடித்துக் கொடுத்தார். படம் கலவையான விமர்சனங்களைப் பெற, ஹனிமூன் நேரத்திலும் கவலையாக இருக்கிறாராம் நயன்!

மிஸ்டர் மியாவ்
மிஸ்டர் மியாவ்
மிஸ்டர் மியாவ்
மிஸ்டர் மியாவ்
மிஸ்டர் மியாவ்

ஆர்யாவின் ‘கேப்டன்’ படத்தின் பிசினஸ், தமிழ் சினிமாப்புள்ளிகளை மிரளவைத்திருக்கிறது. தியேட்டரிக்கல் ரைட்ஸ் ரெட் ஜெயன்ட் நிறுவனம், ஓ.டி.டி மற்றும் சாட்டிலைட் ரைட்ஸ் ஜீ நிறுவனம் எனக் கையெழுத்தாகி, மொத்தமாக 60 கோடிக்கு பிசினஸ் ஆகியிருக்கிறது. அதர் லாங்க்வேஜ் இன்னமும் விற்கப்படாத நிலையில், ஆர்யா படத்துக்கு இந்த அளவுக்கு பிசினஸ் எகிற, போட்டி போட்டு அவரை புக் பண்ண தயாரிப்பாளர்கள் முன்வந்திருக்கிறார்கள். பந்தா பண்ணாமல், தலையீடுகள் ஏதும் செய்யாமல், தான் உண்டு தன் வேலை உண்டு என்றிருக்கும் ஆர்யாவின் நல்ல குணத்தையும் கொண்டாடுகிறது கோடம்பாக்கம்!

கமலின் `விக்ரம்’ பரபரப்பு, சகட்டுமேனிக்கு எகிறிய நிலையில் திடீரென ரஜினி தரப்பு #SIVAJI15YEARS என ஹேஷ்டேக் போட்டு சிவாஜி படத்தின் 15 வருடங்களைக் கொண்டாடியது. ஆனால், அதற்குப் பெரிய அளவில் ரெஸ்பான்ஸ் இல்லை என்றதும், உடனே நெல்சனுடன் இணையும் ‘ஜெயிலர்’ படத்தின் டைட்டிலை வெளியிடச் சொல்லி சன் நிறுவனத்திடம் பேசியிருக்கிறார் ரஜினி. இத்தனைக்கும் படத்தின் ஷூட்டிங் ஆகஸ்ட் மாதம்தான் தொடங்கவிருக்கிறதாம். இதைவைத்து, ‘இன்றைக்கும் ரஜினிக்கும் கமலுக்குமான போட்டி தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது’ என்கிறார்கள் விஷயப்புள்ளிகள்!

உஷ்...

குடும்பப் படங்களை இயக்கும் ‘எதற்கும் துணிந்த’ இயக்குநர், தன் உதவியாளர்கள் குழுவை அடியோடு மாற்றிவிட்டாராம். ‘புத்தம் புது சிந்தனையோடு புது ரத்தம் பாய்ந்தவர்களாக வேண்டும்’ எனச் சொல்லி, உதவியாளர்கள் தேர்வு நடக்கிறதாம். இன்றைய டிரெண்டுக்கு ஏற்ற அதிரடி ஆக்‌ஷன் கதைக்காக இந்த ஏற்பாடாம்!