அரசியல்
அலசல்
சமூகம்
Published:Updated:

மிஸ்டர் மியாவ்

தர்ஷா குப்தா
பிரீமியம் ஸ்டோரி
News
தர்ஷா குப்தா

ஆர்.ஜே.பாலாஜியின் ‘வீட்ல விசேஷம்’ படம் வசூல்ரீதியாகப் பெரிதாகக் கைகொடுக்கவில்லை. ஆனாலும், தயாரிப்பாளர் போனி கபூர் பூரிப்பாகத்தான் இருக்கிறார்

விஜய்யின் ‘மாஸ்டர்’ பட ரிலீஸின்போதே பிரபாஸுக்கு ஒரு கதை சொல்லி அட்வான்ஸ் வாங்கியிருந்தார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். ‘விக்ரம்’ அதிரிபுதிரி வெற்றிக்குப் பிறகு பிரபாஸ் தரப்பிலிருந்து பிரஷர் வரத் தொடங்கியிருக்கிறதாம். அடுத்து விஜய், மீண்டும் கமல், `கைதி 2’ என லோகேஷ் லைன்அப் பெரிதாக இருப்பதால், பிரபாஸுக்கு பதில் சொல்ல முடியாத நிலையாம். கமல் படத்தைத் தள்ளிவைத்துவிட்டு பிரபாஸ் படத்தை முடிக்கும் ஐடியாவில் இருக்கிறாராம் லோகேஷ்.

திருமண உடையில் கீர்த்தி சுரேஷ் சில புகைப்படங்களைப் பதிவிட அவர் திருமணத்துக்குத் தயாராகிவிட்டார் என மீண்டும் பரபரப்பு கிளம்பிவிட்டது. ‘துபாய் தொழிலதிபருடன் திருமணம்’, ‘அனிருத்துடன் காதல்’ என கீர்த்தியை மையப்படுத்தி அடிக்கடி சூறாவளிகள் கிளம்பிவரும் நிலையில், திருமண உடையில் பதிவேற்றிய புகைப்படங்களும் பரபரப்பை எகிற வைத்துவிட்டன. இந்நிலையில், “விஜய்யுடன் ஒரு படம் ஜோடி சேர்ந்து நடித்த பிறகுதான் திருமணம் பற்றி யோசிப்பேன்” என நெருக்கமானவர்களிடம் மனம் திறந்திருக்கிறார் கீர்த்தி.

மிஸ்டர் மியாவ்
மிஸ்டர் மியாவ்
மிஸ்டர் மியாவ்

ஆர்.ஜே.பாலாஜியின் ‘வீட்ல விசேஷம்’ படம் வசூல்ரீதியாகப் பெரிதாகக் கைகொடுக்கவில்லை. ஆனாலும், தயாரிப்பாளர் போனி கபூர் பூரிப்பாகத்தான் இருக்கிறார். காரணம், படத்தை 36 நாளில் செம சிக்கனமாக எடுத்துக் கொடுத்ததுதானாம். “ `விக்ரம்’ படப் பரபரப்பு ஓய்ந்த பிறகு ரிலீஸ் செய்திருந்தால் படம் பெரிதாக கவனம் பெற்றிருக்கும்” எனச் சொல்லும் போனி கபூர் ஆர்.ஜே.பாலாஜிக்கு அடுத்த அட்வான்ஸ் கொடுக்கவும் ரெடியாம்!

ஹரியின் ‘யானை’ கலவையான விமர்சனங்களைப் பெற்றிருக்கிறது. முதலில் இதே கதையைத்தான் சூர்யாவிடம் சொல்லியிருக்கிறார் ஹரி. சூர்யா நிறைய திருத்தங்களைச் சொல்ல, வெறுத்துப்போன ஹரி தன் மைத்துனரான அருண் விஜய்யை வைத்துப் படத்தை முடித்தார். ரிலீஸுக்குப் பிறகு வந்த விமர்சனங்களில் பலவும் டிஸ்கஷன் நேரத்திலேயே சூர்யா சுட்டிக் காட்டியவையாம். அதேநேரம் படத்தின் மேக்கிங் சூர்யாவுக்கு ரொம்பவே பிடித்துப்போனதாம். ஹரியுடன் சீக்கிரமே சூர்யா கைகோத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை என்கிறார்கள்.

உஷ்...

சமீபத்திய படம் வசூல், விமர்சனம் என எல்லாவிதத்திலும் சறுக்கியதால் ரொம்பவே துவண்டுபோனாராம் அந்த நடிகர். “நான் வில்லனாக நடிக்கும் படங்கள் மட்டும் எப்படி ஹிட் அடிக்கின்றன?” என அப்பாவியாகக் கேட்டாராம். #கவலப்படாதீங்க பாஸ்... ‘நீங்களும் ரௌடிதான்’..!