Published:Updated:

மிஸ்டர் மியாவ்

பிரியங்கா ஜவல்கர்
பிரீமியம் ஸ்டோரி
பிரியங்கா ஜவல்கர்

மாதவனின் ‘ராக்கெட்ரி’ படம், விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்வில் நடந்த உண்மைச் சம்பவங்களை உலகறியப் பதிவுசெய்திருக்கிறது

மிஸ்டர் மியாவ்

மாதவனின் ‘ராக்கெட்ரி’ படம், விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்வில் நடந்த உண்மைச் சம்பவங்களை உலகறியப் பதிவுசெய்திருக்கிறது

Published:Updated:
பிரியங்கா ஜவல்கர்
பிரீமியம் ஸ்டோரி
பிரியங்கா ஜவல்கர்

‘சுப்ரமணியபுரம்’ படம் வெளிவந்து 14 வருடங்கள் ஆகியிருக்கும் நிலையில், ஆன்லைனில் படம் குறித்த நினைவுகளைப் பதிவிட்டுப் பெரிதாகக் கொண்டாடி யிருக்கிறார்கள். ‘எப்போ சார் மறுபடியும் படம் இயக்குவீங்க?’ என ரசிகர்கள் பலரும் கேள்வி கேட்க, ‘மிக விரைவில் ஓர் இயக்குநராக அடுத்த அறிவிப்பை வெளியிடுகிறேன்’ எனச் சொன்னார் சசிகுமார். ‘குற்றப் பரம்பரை’ வெப் சீரீஸை இயக்கப்போகிற அறிவிப்புதான் அது என்கிறார்கள் விஷயப்புள்ளிகள். 12 வருடங்களுக்குப் பிறகு இயக்குநராக ரீ என்ட்ரியாகப் போகும் சசிகுமாருக்கு, மூன்று படங்களுக்கான சம்பளத்தை ‘குற்றப் பரம்பரை’ வெப் சீரிஸுக்குக் கொடுக்கவிருக்கிறதாம் ஹாட் ஸ்டார் நிறுவனம்!

பாரம்பர்ய நெல் ரகங்களை மீட்ட நெல் ஜெயராமன், புற்றுநோயால் பாதிக்கப்பட்டபோது அப்போலோ மருத்துவச் செலவை முழுவதுமாக ஏற்றார் நடிகர் சிவகார்த்திகேயன். நெல் ஜெயராமன் மகனின் கல்விச் செலவையும் தொடர்ந்து செலுத்திவந்தார். இந்த வருடம் புதிய பள்ளிக்கு மாற நெல் ஜெயராமனின் மகன் விரும்ப, அதற்கான செலவுத் தொகையையும் கட்டியிருக்கிறார் சிவகார்த்திகேயன். “நீ எங்கு படித்தாலும், என்ன படித்தாலும் அதற்கான முழுப் பொறுப்பு நான்…” என நெல் ஜெயராமனின் மகனிடம் சிவகார்த்திகேயன் சொல்ல, குடும்பமே நெகிழ்ந்துபோயிருக்கிறது!

பிரியங்கா ஜவல்கர்
பிரியங்கா ஜவல்கர்
மிஸ்டர் மியாவ்
மிஸ்டர் மியாவ்
மிஸ்டர் மியாவ்
மிஸ்டர் மியாவ்

மாதவனின் ‘ராக்கெட்ரி’ படம், விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்வில் நடந்த உண்மைச் சம்பவங்களை உலகறியப் பதிவுசெய்திருக்கிறது. க்ளைமாக்ஸ் காட்சியில் நம்பி நாராயணனையே நடிக்கவைத்து உண்மைக்கு வலு கூட்டியிருக்கிறார் மாதவன். படத்தைக் காட்டிலும் இன்னும் அதிரவைக்கும் பல சம்பவங்கள் புத்தக வடிவில் தமிழில் விரைவில் வெளிவரவிருக்கின்றனவாம். இந்தப் புத்தகம், நம்பி நாராயணன் வழக்கில் ஜோடிக்கப்பட்ட பல மர்மங்களை அம்பலப்படுத்தும் என்கிறார்கள்!

நல்ல லாபத்தில் இயங்கிய லிங்குசாமியின் ‘திருப்பதி பிரதர்ஸ்’ நிறுவனம், கமலின் ‘உத்தம வில்லன்’ படத்தின் கடனால்தான் பெரும் திண்டாட்டத்துக்கு ஆளானது. இன்றுவரை அந்த நிறுவனத்தால் படத் தயாரிப்பில் இறங்க முடியாத நிலை. ‘உத்தம வில்லன்’ பட ரிலீஸ் பஞ்சாயத்தின்போது, ‘திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்துக்கு கமல் இன்னொரு படம் செய்துகொடுக்க வேண்டும்’ என அக்ரிமென்ட் போடப்பட்டதாம். கமலின் ‘விக்ரம்’ மிகப்பெரிதாக ஹிட் அடித்திருக்கும் நிலையில், அதைத் தூசுதட்ட வாய்ப் பிருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால், லிங்குசாமி தரப்பினரோ ‘எங்களால் கமல் சாருக்கு எந்த தர்மசங்கடமும் எப்போதும் ஏற்படாது’ என்கிறார்களாம்!

உஷ்...

விவாகரத்துக்குப் பிறகு, நட்பு வட்டத்தை அநியாயத்துக்குக் குறைத்துக்கொண்டாராம் அசுர நடிகர். மிக நெருங்கிய நண்பர்களைக்கூட சமீபத்தில் விலகியிருக்கச் சொல்லிவிட்டாராம். முழு நேரமும் உடற்பயிற்சி, கதை யோசனை என்றே கழிக்கிறாராம். அடுத்த வருடம், தான் இயக்கப்போகும் படம் தமிழ்நாட்டையே அதகளம் செய்யும் எனச் சபதம் போட்டிருக்கிறாராம்!