அரசியல்
அலசல்
Published:Updated:

மிஸ்டர் மியாவ்

மிருணாள் தாகூர்
பிரீமியம் ஸ்டோரி
News
மிருணாள் தாகூர்

கமலின் ‘விக்ரம்’ படத்தை ஆன்லைன் அலப்பறைகள் மூலமாகப் பெரும் பரபரப்பாக்கியதில், விஜய் மேனேஜர் ஜெகதீஸுக்கு முக்கியப் பங்கு இருப்பதாகச் சொல்கிறார்கள்

புது இயக்குநர், பிரபல இயக்குநர் என்றெல்லாம் பாகுபாடு பார்க்காமல், நல்ல கதையை யார் வைத்திருந்தாலும் ஓகே என்கிறார் சாய் பல்லவி. ஒன்லைன் பிடித்திருந்தால், “ஸ்கிரிப்ட் புக் கொடுங்கள்…” எனக் கேட்டு வாங்குகிறார். தனக்குப் பிடித்த தனிமையான இடத்தில் அமர்ந்து முழுவதுமாகப் படிக்கிறார். மனதில் தோன்றும் கேள்விகளை ஒன்றுவிடாமல் நோட் செய்து, இயக்குநரிடம் கேட்கிறார். பதில்கள் திருப்தியாக அமைந்தால், அடுத்த கணமே ஷூட்டிங்குக்கு ரெடி சொல்லிவிடுகிறார் சாய் பல்லவி.

சூர்யா - பாலா இணைந்து ஆரம்பித்த படத்தின் ஷூட்டிங் பாதியில் நிற்கிறது. ‘கதையில் திருத்தம் தேவைப்படுகிறது’ எனச் சொல்லி மறுபடியும் விவாதத்தில் உட்கார்ந்துவிட்டார் பாலா. ஆகஸ்ட் மாதத்துக்குள் பாலா படத்தை முடித்துவிட்டு, வெற்றிமாறனின் ‘வாடிவாசல்’ படத்துக்குப் போக நினைத்தார் சூர்யா. பாலாவின் இழுத்தடிப்பால், செப்டம்பர் மாதம் வெற்றிமாறனுக்குத் தேதி தருவதாகச் சொல்லியிருக்கிறாராம் சூர்யா. ‘ஆகஸ்ட்டுக்குள் படத்தை முடித்தால் சரி, இல்லையென்றால் அடுத்த இரண்டு மாதங்கள் காத்திருங்கள்…’ என பாலா தரப்புக்குச் சொல்லப்பட்டிருக்கிறதாம்.

மிருணாள் தாகூர்
மிருணாள் தாகூர்
மிருணாள் தாகூர்
மிருணாள் தாகூர்
மிருணாள் தாகூர்
மிருணாள் தாகூர்

‘தி வாரியர்’ படத்தின் ஆடியோ வெளியீட்டில் இயக்குநர் லிங்குசாமி கண்கலங்கியது திரையுலகையே கலங்கடித்திருக்கிறது. மீண்டும் ராம், அடுத்து விஷால் என செம லைன்அப் வைத்திருக்கிறார் லிங்குசாமி. இந்தப் படம் ஹிட் அடித்தால், தெலுங்கில் லிங்குசாமிக்குப் பெரிய பிரேக் கிடைக்கவும் வாய்ப்பிருக்கிறது. ஏற்கெனவே அல்லு அர்ஜுனுக்குக் கதை சொல்லி சம்மதம் வாங்கிவைத்திருக்கிறார் லிங்குசாமி. இதற்கிடையில் ஆடியோ லாஞ்ச்சில் ஃபைனான்ஸியர் அன்புச்செழியன், ‘இப்போதும் உதவத் தயார்…’ எனச் சொன்ன வார்த்தைகளை வைத்து, மீண்டும் லிங்குசாமி தயாரிப்பில் இறங்கவும் வாய்ப்பிருப்பதாகச் சொல்கிறார்கள்.

கமலின் ‘விக்ரம்’ படத்தை ஆன்லைன் அலப்பறைகள் மூலமாகப் பெரும் பரபரப்பாக்கியதில், விஜய் மேனேஜர் ஜெகதீஸுக்கு முக்கியப் பங்கு இருப்பதாகச் சொல்கிறார்கள். காரணம், இதே ஜெகதீஸ்தான் இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கும் மேனேஜர். விஜய்யின் அடுத்த படத்தை பேன் இந்தியா படமாகப் பெரிதாக்கி, வியக்கத்தக்க பிசினஸை உருவாக்க இப்போதிருந்தே திட்டமிடுகிறார் ஜெகதீஸ். விஜய்யும் இதற்கு ஒப்புதல் கொடுக்க அதற்கேற்ற கதைக்களம், கதாநாயகர்கள் வரிசை என ‘விக்ரம்’ பாணியிலேயே ஸ்கெட்ச் போடப்படுகிறது!

உஷ்...

வாங்கிப்போட்ட நிலங்களை விற்கத் தொடங்கியிருக்கிறார் ஒருகாலத்தில் ஆட்டம்போட்ட ஸ்லிம் நடிகை. ‘நிலத்தை விற்கிற அளவுக்குக் கஷ்டமா?’ எனச் சிலர் கேட்க, “ஜாம் ஜாம்னு இருக்கேன்… எந்தக் கஷ்டமும் இல்லை. நிலத்தை கவனிக்க நேரம் இல்லை. அதனால்தான் விற்கிறேன்” என்றாராம் அம்மணி!