Published:Updated:

மிஸ்டர் மியாவ்

கெட்டிகா ஷர்மா
பிரீமியம் ஸ்டோரி
கெட்டிகா ஷர்மா

ஜெயம் ரவியை வைத்து ‘அடங்க மறு’ படத்தை இயக்கிய கார்த்தி தங்கவேல், தமிழ் சினிமாவின் நம்பிக்கைக்குரிய இயக்குநர்களில் ஒருவராக எதிர்பார்க்கப்படுபவர்.

மிஸ்டர் மியாவ்

ஜெயம் ரவியை வைத்து ‘அடங்க மறு’ படத்தை இயக்கிய கார்த்தி தங்கவேல், தமிழ் சினிமாவின் நம்பிக்கைக்குரிய இயக்குநர்களில் ஒருவராக எதிர்பார்க்கப்படுபவர்.

Published:Updated:
கெட்டிகா ஷர்மா
பிரீமியம் ஸ்டோரி
கெட்டிகா ஷர்மா

வெற்றிமாறன் இயக்கும் ‘விடுதலை’ படம் இரண்டு பாகங்களாக வெளிவருவது உறுதியாகிவிட்டது. இப்போதுவரை நான்கரை மணி நேர ஃபுட்டேஜ் ரெடியாகியிருக்கும் நிலையில், இன்னும் 40 நாள்கள் ஷூட்டிங் நடத்தத் திட்டமிட்டிருக்கிறார் வெற்றிமாறன். இரண்டு பாகங்களையும் சேர்த்து 100 கோடிக்கு பிசினஸ் செய்ய வாய்ப்பிருப்பதால், தயாரிப்பாளர் எல்ரெட் குமாரும் செம ஹேப்பி.

ரஜினி - ஷங்கர் கூட்டணியில் உருவான ‘சிவாஜி’ படத்திலேயே வில்லனாக நடிக்க மறுத்த சத்யராஜ், இப்போது மனம் மாறியிருக்கிறார். ‘நல்ல வில்லன் பாத்திரம் அமைந்தால் நான் ரெடி’ எனச் சொல்லி, கதை கேட்கத் தொடங்கியிருக்கிறார். பல இயக்குநர்கள் படையெடுத்துப் போய் சொன்னாலும், சத்யராஜ் நடிப்புக்குத் தீனிபோடும் வகையில் எந்தப் பாத்திரமும் அமையவில்லையாம். “அமைதிப்படை அமாவாசையை மிஞ்சுகிற அளவுக்கு ஒரு வில்லனைத் தேடுகிறேன்” என்கிறார் சத்யராஜ்.

கெட்டிகா ஷர்மா
கெட்டிகா ஷர்மா
கெட்டிகா ஷர்மா
கெட்டிகா ஷர்மா
கெட்டிகா ஷர்மா
கெட்டிகா ஷர்மா

ஜெயம் ரவியை வைத்து ‘அடங்க மறு’ படத்தை இயக்கிய கார்த்தி தங்கவேல், தமிழ் சினிமாவின் நம்பிக்கைக்குரிய இயக்குநர்களில் ஒருவராக எதிர்பார்க்கப்படுபவர். ஆனாலும், அடுத்த படத்துக்கான அறிவிப்பை வெளியிடாமல் மௌனம் காத்துவந்தார். இடைப்பட்ட காலத்தில் விஷால், ஆர்யா இருவருக்கும் கதை சொல்லி ஓகே செய்திருக்கிறவர், இந்தியில் ஒரு படத்தை முடித்துவிட்டு வருகிற திட்டத்தில் இருக்கிறாராம்.

‘சார்பட்டா பரம்பரை’, ‘டெடி’ படங்களுக்குப் பிறகு, ஆர்யாவின் சம்பளம் 4 கோடியிலிருந்து 15 கோடியாக உயர்ந்திருக்கிறது. ஆர்யாவின் ‘கேப்டன்’ படம் 60 கோடிக்கு பிசினஸ் ஆகியிருப்பதால், அவர் கேட்கும் சம்பளத்தைக் கொடுக்க பல தயாரிப்பு நிறுவனங்கள் க்யூ கட்டி நிற்கின்றன. இதற்கிடையில் முத்தையா இயக்கும் படத்தைத் தன் சொந்தத் தயாரிப்பில் செய்யத் திட்டமிட்டிருக்கிறார் ஆர்யா.

உஷ்...

ஆனந்த இயக்குநருக்கும், அண்ணன் தலைவருக்கும் போனிலேயே பெரும் தகராறாம். ஆனந்த இயக்குநரின் சமீபத்திய படம் அப்படியே தன் கதை என்கிறாராம் அண்ணன் தலைவர். பாசத்துக்குரிய மூத்த இயக்குநர் மூலமாகப் பஞ்சாயத்து நடக்கிறது!