Published:Updated:

மிஸ்டர் மியாவ்

ஜான்வி கபூர்
பிரீமியம் ஸ்டோரி
ஜான்வி கபூர்

அசுர நடிகரின் கைவசமிருக்கும் ஐந்து படங்களில், நான்கு படங்களை அவர்தான் நிழல் இயக்குநராக இருந்து வழிநடத்துகிறாராம்

மிஸ்டர் மியாவ்

அசுர நடிகரின் கைவசமிருக்கும் ஐந்து படங்களில், நான்கு படங்களை அவர்தான் நிழல் இயக்குநராக இருந்து வழிநடத்துகிறாராம்

Published:Updated:
ஜான்வி கபூர்
பிரீமியம் ஸ்டோரி
ஜான்வி கபூர்

மில்க் இயக்குநருக்கும், பிரகாச ஹீரோவுக்கும் இன்னமும் பனிப்போர் ஓயவில்லை. இதற்கிடையில் கதையில் நிறைய திருத்தங்கள் தேவை என ஹீரோ சொன்னதால், மறைந்த தலைவி குறித்துப் படம் எடுத்த இன்னோர் இயக்குநரை இருவருக்குமான சமாதானத் தூதராக நியமித்தார்களாம். தலையீடுகள் அதிகமான நிலையில், “அவரைவெச்சே படத்தை எடுத்துக்கங்க” எனச் சொல்லிவிட்டாராம் மில்க் இயக்குநர். இதற்கிடையில் முருகப்புகழ் ஒளிப்பதிவாளரும் புதிதாக இணைய, குளறுபடிகள் கும்மியடிக்கின்றன.

வெற்றிகரமான இயக்குநர், காமெடி நடிகரைக் கதாநாயகனாக்கி எடுக்கிற படத்தின் ஷூட்டிங் இழுத்துக்கொண்டே போகிறது. சமீபத்தில், படத்துக்காக சென்னைக்கு அருகில் ரயில்வே ட்ராக்கை செட் போடச் சொன்னாராம் வெற்றிகரமான இயக்குநர். அதற்கான பட்ஜெட் மட்டும் ஐந்து கோடியாம். ‘வெற்றிகரமான 200-வது நாள்’ எனச் சொல்கிற அளவுக்கு ஷூட்டிங் நாள்களும் எகிறிக்கொண்டே இருக்கின்றனவாம்.

பிரபல இயக்குநர்கள் தவிர, வேறு யார் கதை சொல்ல வந்தாலும், “அஞ்சு நிமிஷம் மட்டும் சொல்லுங்க...” எனக் கறார் காட்டுகிறாராம் டைமண்ட் கவிஞர். “அஞ்சு நிமிஷத்தில் பாட்டுக்கான சூழலைக்கூடச் சொல்ல முடியாதே...” எனப் புதிய இயக்குநர்கள் பலரும் புலம்பியபடியே செல்கிறார்களாம். “சினிமாவை நோக்கி வரும் பலருக்கும் டைமண்ட் கவிஞரைச் சந்திப்பது பெரிய கனவாக இருக்கும். காசு விஷயத்தில் காட்டும் கறாரை நேர ஒதுக்கீட்டிலும் கவிஞர் காட்டலாமா?” என்கிறார்கள் ஆதங்கத்தோடு.

மிஸ்டர் மியாவ்
மிஸ்டர் மியாவ்
மிஸ்டர் மியாவ்

அசுர நடிகரின் கைவசமிருக்கும் ஐந்து படங்களில், நான்கு படங்களை அவர்தான் நிழல் இயக்குநராக இருந்து வழிநடத்துகிறாராம். ‘எனக்கு எல்லாம் தெரியும்’ என்கிற மனநிலையில் மற்ற இயக்குநர்களை நோகடிக்கும் இவர், தன் வீட்டு இயக்குநரிடமும் அதே பாணியில்தான் நடந்துகொள்கிறாராம். ‘கடைசிப் படம் கவிழ்ந்ததற்கு அசுர நடிகரின் தலையீடுதான் காரணம்’ என அவருக்கு நெருக்கமானவர்களே வருத்தப்படுகிறார்கள்.

திலக நடிகைக்குப் பண்ணை வீடுகளை வாங்கிக் கொடுத்துப் பரவசப்படுத்துகிறாராம் அவரழகில் மயங்கிக்கிடக்கும் பிரசித்தி நடிகர். மணிக்கணக்கில் போன் பேச்சு, அவ்வப்போது சந்திப்பு, திடீர் பரிசளிப்பு என இருவருக்கும் இடையே பேரன்பு பெருகி ஓடுகிறது. ‘வாரிசு அளவுக்கு வளராமல் இருந்தால் சரி’ என்கிறார்கள் உடனிருப்பவர்கள்.