Published:Updated:

மிஸ்டர் மியாவ்

சாக்‌ஷி அகர்வால்
பிரீமியம் ஸ்டோரி
சாக்‌ஷி அகர்வால்

ராஜ் கமல் நிறுவனத்துக்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அழைக்கப்படக் காரணமே, ரஜினியைவைத்துப் படம் இயக்கத்தான்.

மிஸ்டர் மியாவ்

ராஜ் கமல் நிறுவனத்துக்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அழைக்கப்படக் காரணமே, ரஜினியைவைத்துப் படம் இயக்கத்தான்.

Published:Updated:
சாக்‌ஷி அகர்வால்
பிரீமியம் ஸ்டோரி
சாக்‌ஷி அகர்வால்

நடிகர் யோகி பாபு தீவிர முருக பக்தர். தற்போது முருக பக்தராகவே ஒரு படத்தில் நடிக்கிறார். முருகனின் அருளால் அவருக்குக் கிடைக்கும் பரிசு, அவர் வாழ்வை எப்படி மாற்றுகிறது என்பதுதான் கதை. முருகன் சம்பந்தப்பட்ட வார்த்தைகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து, அதையே தலைப்பாக வைக்கச் சொல்லியிருக்கிறாராம் யோகி பாபு. முருகன் படங்களை அடிக்கடி சமூக வலைதளங்களில் பதிவிடுவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார் யோகி.

‘அடுத்த இரண்டு வருடங்களுக்கு கால்ஷீட் ஃபுல்’ என்கிறார் சமந்தா. நாக சைதன்யா விவகாரத்துக்குப் பிறகு, சமந்தாவுக்கான மார்க்கெட் கிடுகிடுவென உயர்ந்துவிட்டது. விவகாரத்துக்கு முன்பு ஒன்றரைக் கோடி வரை சம்பளம் வாங்கிய சமந்தா, இப்போது நான்கு கோடிக்கு உயர்ந்திருக்கிறார். இந்த அளவு சம்பளத்தைக் கொடுக்க நம்மூர் தயாரிப்பாளர்கள் முன்வந்தும், இந்தி மற்றும் தெலுங்குப் படங்கள் கைவசம் இருப்பதால், அவற்றை முடித்துவிட்டு வர சமந்தாவுக்கு இரண்டு வருடங்கள் ஆகுமாம். அஜித், விஜய், சிவகார்த்திகேயன் ஆகியோருக்கு ஜோடி என்றால், தேதியில் சமரசம் செய்து ஒதுக்கிக்கொடுக்கலாம் என்கிறாராம் சமந்தா.

10 தேசிய விருதுகளை அள்ளியிருக்கிறது தமிழ் சினிமா. விருதுக்கான தேர்வு கமிட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த தங்கதுரை இடம்பெற்றிருந்ததால், பல படங்களுக்கான அங்கீகாரத்துக்காக அவர் குரல் ஓங்கி ஒலித்திருக்கிறது. சூர்யா, ஜோதிகா உள்ளிட்டவர்களுக்கு மேனேஜராகப் பணியாற்றும் தங்கதுரை, பத்திரிகைத் துறையிலும் அனுபவம் பெற்றவர். `சூரரைப் போற்று’, `மண்டேலா’, `சிவரஞ்சனியும் சில பெண்களும்’ உள்ளிட்ட படங்கள் மட்டுமல்லாமல், இன்னும் சில படங்களுக்காகவும் தேர்வு கமிட்டியிடம் தன் தரப்பு கருத்துகளை அழுத்தமாகப் பதித்தாராம்.

சாக்‌ஷி அகர்வால்
சாக்‌ஷி அகர்வால்
சாக்‌ஷி அகர்வால்
சாக்‌ஷி அகர்வால்
சாக்‌ஷி அகர்வால்
சாக்‌ஷி அகர்வால்

ராஜ் கமல் நிறுவனத்துக்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அழைக்கப்படக் காரணமே, ரஜினியைவைத்துப் படம் இயக்கத்தான். ரஜினியும் தேதி தருவதாகச் சொன்ன நிலையில், ஏனோ அந்தப் படம் தொடங்கப்படவில்லை. பிறகுதான் கமலை வைத்து ‘விக்ரம்’ படத்தைத் தொடங்கினார் லோகேஷ். ‘விக்ரம்’ பெருவெற்றி அடைந்திருக்கும் நிலையில், ரஜினி - கமல் இணைந்து நடிக்கக் கதை செய்யும்படி லோகேஷைப் பணித்திருக்கிறதாம் ராஜ் கமல் நிறுவனம். ‘ `விக்ரம்’ வெற்றியை மிஞ்ச இந்த காம்பினேஷன் தேவை’ என நினைக்கிறாராம் கமல்!

உஷ்…

தூள் நடிகரின் சமீபத்திய பாம்பு படம் தள்ளிப்போனதற்குக் காரணம், அறிவான இயக்குநர்தானாம். தயாரிப்பாளருடனான மனவருத்தத்தில் போனை அணைத்துவிட்டு வாரக்கணக்கில் காணாமல்போய்விட்டாராம் இயக்குநர். அதனால்தான் கிராபிக்ஸ் உள்ளிட்ட இறுதிகட்டப் பணிகள் இழுபறியாகி, பட ரிலீஸ் தாமதமாகிறதாம்.