அரசியல்
அலசல்
சமூகம்
Published:Updated:

மிஸ்டர் மியாவ்

ரம்யா பாண்டியன்
பிரீமியம் ஸ்டோரி
News
ரம்யா பாண்டியன்

வில்லன், காமெடியன் எனப் பலவிதங்களில் பரபரப்பாக இருந்த மொட்டை ராஜேந்திரன், தற்போது வாய்ப்பில்லாமல் வீட்டில் இருப்பதாகச் செய்திகள் கிளம்பின.

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்தின் இரண்டாவது ஷெட்யூல் சென்னையில் தொடங்கியிருக்கிறது. அஜித் இல்லாத காட்சிகளை ஜெட் வேகத்தில் ஷூட் பண்ணத் தொடங்கிவிட்டார் வினோத். படத்தில் அஜித்துடன் முதன்முறையாக சமுத்திரக்கனி இணைகிறார். தெலுங்கில் பவன் கல்யாணை வைத்துப் படம் இயக்க கமிட்டாகியிருக்கும் சமுத்திரக்கனி, அஜித்திடமும் ஒன்லைன் சொல்லியிருக் கிறாராம். “உங்களைவைத்து ஒரு படமாவது டைரக்‌ஷன் பண்ணிடணும்கிறதுதான் சார் என் வாழ்நாள் ஆசை” என சமுத்திரக்கனி உருக, அஜித் ஓகே சொல்லவும் வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள்.

பலவிதமான எதிர்மறை விமர்சனங்களையும் கடந்து, வணிக வெற்றியை நெருங்கியிருக்கிறது பார்த்திபனின் ‘இரவின் நிழல்’ படம். தமிழ்நாடு முழுக்கப் பயணம், புளு சட்டை மாறனோடு கருத்து மோதல், பயில்வான் ரங்கநாதன் விவகாரம் என ஏதோவொரு வகையில் படத்துக்கான பப்ளிசிட்டியை செய்துகொண்டேயிருந்தார் பார்த்திபன். அதனால், ஓடிடி தளங்கள் ‘இரவின் நிழல்’ படத்தை வாங்க போட்டி போடுகின்றன. தியேட்டர் தரப்பிலிருந்து எதிர்பார்த்த லாபத்தை அப்படியே ஓடிடி-யில் வாங்க நினைக்கிறாராம் பார்த்திபன். அதனால்தான் இன்னமும் கையெழுத்தாகாமல் இழுத்துக்கொண்டே போகிறதாம். ஓடிடி நிறுவனங்களின் கவனத்தைத் திருப்பிய வகையில் பார்த்திபனுக்கு இது வெற்றிப் படம்தான் என்கிறார்கள் விவரப்புள்ளிகள்.

ரம்யா பாண்டியன்
ரம்யா பாண்டியன்

வில்லன், காமெடியன் எனப் பலவிதங்களில் பரபரப்பாக இருந்த மொட்டை ராஜேந்திரன், தற்போது வாய்ப்பில்லாமல் வீட்டில் இருப்பதாகச் செய்திகள் கிளம்பின. உண்மையில் தெலுங்கில் சிரஞ்சீவி படம், தனுஷுடன் ‘வாத்தியார்’ படம் என இப்போதும் மொட்டை ராஜேந்திரன் செம பிஸிதானாம். நாள் ஒன்றுக்கு இரண்டு லட்ச ரூபாய் எனத் தெலுங்கு மார்க்கெட்டில் ராஜேந்திரனுக்கு அள்ளிக்கொடுக்கிறார்களாம். கூடுதல் தகவல்: தான் நடிக்கும் எந்தப் படத்தையும் தியேட்டரில் போய்ப் பார்க்கும் வழக்கம் இல்லாதவர் மொட்டை ராஜேந்திரன்.

திரையுலகில் 13 ஆண்டுகளை நிறைவுசெய்திருக்கிறார் கமல் மகள் ஸ்ருதி ஹாசன். ‘சினிமாதான் என் வாழ்வுக்கான பயிற்சியைக் கொடுத்தது’ என ஸ்ருதி சமீபத்தில் நெகிழ்ந்தாலும், பெயர் சொல்லும் அளவில் ஒரு கதாபாத்திரத்தை இதுநாள் வரை செய்ய முடியவில்லை என்கிற வருத்தம் அவருக்கு இருக்கிறதாம். அத்தகைய ஒரு கதாபாத்திரத்துக்காக, தான் எத்தனை வருடங்கள் வேண்டுமானாலும் காத்திருக்கவும் தயார் என நெருக்கமானவர்களிடம் சொன்னாராம் ஸ்ருதி. இதற்கிடையில் அவரே ஒரு கதையை எழுதி, இயக்கவும் முடிவெடுத்திருக்கிறார்.

ரம்யா பாண்டியன்
ரம்யா பாண்டியன்

உஷ்...

சூப்பர் நடிகர், அடுத்த படத்தை வெற்றிப்படமாகக் கொடுத்தே தீரவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறாராம். அதனால், காமெடி புகழ் இயக்குநரை அனுதினமும் வரவைத்து டிஸ்கஷன் நடத்துகிறாராம். “வாழ்க்கையில் சாரை ஒரு முறையாவது பார்க்க முடியாதான்னு நான் ஏங்கியிருக்கேன். ஆனா, இப்போ என் நிலைமை…” என நொந்து நூலாகிப்போகிறாராம் இயக்குநர்!