அரசியல்
அலசல்
Published:Updated:

மிஸ்டர் மியாவ்

ஷிரின் காஞ்ச்வாலா
பிரீமியம் ஸ்டோரி
News
ஷிரின் காஞ்ச்வாலா

கன்னடத்தில் அறிமுகமாகி, ‘வால்டர்’ படத்தில் ஹீரோயினாக நடித்த ஷிரின் காஞ்ச்வாலா செம ஹேப்பி மூடில் இருக்கிறார்.

‘அண்ணாத்த’ படத்தில் ரஜினியோடு நயன்தாரா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ், மீனா என நால்வர் கூட்டணி. இவர்களில் கீர்த்தி சுரேஷ் ரஜினிக்குத் தங்கையாக நடிக்கிறார். சமீபத்தில் படத்தைப் பார்த்த கீர்த்தி சுரேஷ், பாசமான காட்சிகளில் நெகிழ்ந்துபோய், ``நான் மறுபடி டப்பிங் பேசுறேன். இவ்வளவு சிறப்பான படத்துக்கு என் டப்பிங் இன்னும் நல்லா இருக்கணும்” எனச் சொல்லி சிரத்தையெடுத்துப் பேசினாராம். நன்கு தமிழ் பேசத் தெரிந்த பல நடிகைகள் சொந்தக் குரலில் டப்பிங் பேசுவதைத் தவிர்த்துவரும் சூழலில், படத்தின் காட்சி சிறப்பாக வர ஆர்வத்தோடு டப்பிங் பேசிய கீர்த்தி சுரேஷை ‘அண்ணாத்த’ படக்குழு பாராட்டித்தள்ளுகிறது.

‘நாய் சேகர்’ படத்தில் வடிவேலுவுக்கு யார் ஜோடி என்பதுதான் இப்போதைய பரபரப்புக் கேள்வி. கதையில் வடிவேலுவுக்கு ஜோடியாக கதாநாயகி பாத்திரமே எழுதப்படவில்லையாம். ஆனால், ஜோடி என ஒருவர் இருந்தால்தான் சிறப்பாக இருக்கும் என லைக்கா நிறுவனத்தின் நிர்வாகி தமிழ்க்குமரன் அடம்பிடிக்க, இப்போது பிரியா பவானி சங்கரிடம் பேச்சுவார்த்தை நடத்திவருகிறார்கள். பல படங்களைக் கைவசம் வைத்திருக்கும் பிரியா பவானி சங்கர், வடிவேலுவின் தீவிர ரசிகை என்பதால், இந்தக் கூட்டணி அமைந்தால் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை என்கிறார்கள்.

கன்னடத்தில் அறிமுகமாகி, ‘வால்டர்’ படத்தில் ஹீரோயினாக நடித்த ஷிரின் காஞ்ச்வாலா செம ஹேப்பி மூடில் இருக்கிறார். சந்தானத்துடன் இவர் நடித்த ‘டிக்கிலோனா’ படம் கடந்த வாரம் வெளியாகி ஹிட்டடித்திருப்பதுதான் இவரது குஷிக்குக் காரணம். அடுத்து விமல் ஜோடியாக இன்னும் பெயரிடப்படாத படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் ஷிரினுக்கு, பிக் பாஸிலிருந்தும் அழைப்பு வந்திருப்பதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கிறார்கள்.

மிஸ்டர் மியாவ்

சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ படம் தியேட்டரில்தான் ரிலீஸ் என்பதால், அவருடைய ரசிகர்கள் ரொம்பவே உற்சாகமாகிவிட்டார்கள். இத்தனைக்கும் ஓடிடி தளங்கள் படத்தின் பட்ஜெட்டைக் காட்டிலும் இரண்டு மடங்கு தொகையைப் படத்துக்கு விலையாகப் பேசிவந்தன. ‘எந்த நேரத்திலும் பேரம் படிந்து கையெழுத்தாகலாம்’ என்கிற நிலையில், தியேட்டர் திறப்பு அமைந்ததால், ஓடிடி ஐடியாவைத் தவிர்த்துவிட்டார்களாம். இதனால் சிவகார்த்திகேயனின் கைவசம் ரெடியாக இருக்கும் ‘அயலான்’, ‘டான்’ உள்ளிட்ட படங்களும் தியேட்டரில் ரிலீஸாகவே வாய்ப்பு அதிகம்.

த.செ.ஞானவேல் இயக்கத்தில் ‘ஜெய் பீம்’, பாண்டிராஜ் இயக்கத்தில் ‘எதற்கும் துணிந்தவன்’ படங்களை முடித்துவிட்டு வெற்றிமாறனின் ‘வாடிவாசல்’, சிறுத்தை சிவா உடனான படம் என சூர்யாவுக்குப் பல படங்கள் கைவசம் இருக்கின்றன. இதற்கிடையில் ‘சூரரைப் போற்று’ படத்தை இயக்கிய சுதா மீண்டும் சூர்யாவுடன் இணைய பேச்சுவார்த்தை நடக்கிறதாம். இதில் சூர்யாவுக்கு ஆக்‌ஷனுக்குக் குறைவில்லாத தாதாயிசப் பாத்திரமாம். சுதா சொன்ன ஒன்லைன் கேட்டதுமே சூர்யாவுக்கு ரொம்பவே பிடித்துப்போய்விட்டதாம். ஜோதிகா நடிப்பில் ‘சூரரைப் போற்று’ படத்தின் இந்திப் பதிப்பை முடித்துவிட்டு சூர்யா படத்தை சுதா ஆரம்பிப்பார் என்கிறார்கள்.

உஷ்…

அடுத்தடுத்து வந்த இரண்டு படங்களும் மண்ணைக் கவ்வியதில் விஜயமான நடிகருக்கு எவ்வித வருத்தமும் இல்லையாம். ‘படத்தின் வெற்றி தோல்வியை நம்பி நான் இல்லை’ என வெளிப்படையாகவே பேசுகிறாராம். அதே கறாருடன் அடுத்த படங்களுக்கான சம்பள விஷயத்திலும் உறுதியாக இருக்கிறாராம். #குமுதா ஹேப்பியா இருந்தா சரி!