அரசியல்
அலசல்
Published:Updated:

மிஸ்டர் மியாவ்

ஈஷா ரெப்பா
பிரீமியம் ஸ்டோரி
News
ஈஷா ரெப்பா

தமிழிலிருந்து யார் கதை சொன்னாலும் தட்டாமல் கேட்கிறார் மோகன் லால். வில்லன் பாத்திரங்கள் வந்தாலும் அவர் மறுப்பது கிடையாது

டி.ராஜேந்தரின் சிகிச்சைக்காக வெளிநாடு பயணமான சிம்பு, இப்போதைக்குப் படப்பிடிப்பில் கலந்துகொள்வது இல்லை என முடிவெடுத்திருக்கிறாராம். அதனால், அவரை வைத்துத் தொடங்கப்பட்ட ‘கொரோனா குமார்’ படத்தில் சந்தானத்தை நடிக்கவைக்கப் பேசினார்கள். சிம்புவுடன் மன வருத்தம் ஏற்பட்டுவிடக் கூடாது எனச் சொல்லி சந்தானம் விலக, ஒருவழியாக ஆர்.ஜே.பாலாஜியை ஹீரோவாக்கி னார்கள். இந்நிலையில் படத்தின் ஹீரோயின் அதிதி, ‘நான் சிம்புவுடன் ஜோடியாக நடிக்கத்தான் சம்மதித்தேன்’ எனச் சொல்லி, விலகும் முடிவில் இருக்கிறாராம். ‘படம் தொடங்குவதற்குள்ளேயே இத்தனை பஞ்சாயத்தா?’ எனத் திண்டாடுகிறார் இயக்குநர் கோகுல்.

அருள்நிதி ‘தேஜாவு’ படத்தை மிகப்பெரிய அளவுக்கு எதிர்பார்த்தார். ‘சினிமாவில் என் அடுத்தகட்ட உயரமாக இந்தப் படம் அமையும்’ என நெருங்கிய வட்டாரத்தில் உறுதியாகச் சொன்னார். ஆனாலும் படம் சறுக்க, தன் கணிப்பு எப்படித் தவறியது என ரொம்பவே யோசிக்கத் தொடங்கிவிட்டாராம். “அரசியல் குடும்பத்தின் வாரிசாக இருந்தாலும், சினிமாவில் எவ்வித அலட்டலும் காட்டிக்கொள்ளாதவர். தன் நிறைகுறை குறித்துச் சுயபரிசோதனை செய்துகொள்வதற்கும் தயங்காதவர். இனி இப்படி நடக்கக் கூடாது என கதைத் தேர்வில் கவனம் காட்டத் தொடங்கியிருக்கிறார்” என்கிறது அவருக்கு நெருக்கமான வட்டாரம்.

தமிழிலிருந்து யார் கதை சொன்னாலும் தட்டாமல் கேட்கிறார் மோகன் லால். வில்லன் பாத்திரங்கள் வந்தாலும் அவர் மறுப்பது கிடையாது. “கேரக்டர் பிடித்திருந்தால் ஓகே. பிடிக்காத கேரக்டர்னா சம்பளம் அதிகம் கொடுத்தால் ஓகே” என வெளிப்படையாகப் பேசுகிறார் மோகன் லால். சமீபத்தில் தமிழ் இயக்குநர் ஒருவர் சொன்ன கதைக்கு, படத்தின் பட்ஜெட் அளவுக்குச் சம்பளம் கேட்டாராம் மோகன் லால். “இது நியாயமா?” என நண்பர்கள் கேட்க, “அந்த அளவுக்கு எனக்கு அந்தக் கதை பிடிக்கலையேப்பா…” எனச் சொல்லிச் சிரித்தாராம்.

ஈஷா ரெப்பா
ஈஷா ரெப்பா
ஈஷா ரெப்பா
ஈஷா ரெப்பா
ஈஷா ரெப்பா
ஈஷா ரெப்பா

தனது 50-வது படமான ‘மகா’ சரியாகப் போகாததால், ரொம்பவே மன வருத்தத்தில் இருக்கிறார் ஹன்சிகா மோத்வானி. படத்தை ரிலீஸ் செய்வதற்குள்ளேயே படாதபாடுபட்ட ஹன்சிகா, பணரீதியான நெருக்கடிகளையும் ரொம்பவே எதிர்கொண்டாராம். அவருக்காகப் பணம் வேண்டாம் என விட்டுக்கொடுத்த ஒரே நபர் சிம்புதானாம். ரிலீஸ் இழுபறியான நிலையில், தன் நெட்வொர்க் மூலமாக முடிந்த உதவிகளையும் செய்துகொடுத்தாராம். அதனால், படம் தோற்றாலும் எதிர்ப்படும் எல்லோரிடமும் சிம்பு புகழ் பாடுகிறார் ஹன்சிகா.

உஷ்...

பாயும் இயக்குநரின் உதவியாளர் ஒருவர், சமீபத்தில் ஒரு நிறுவனத்தில் கதை சொல்லி ஓகே ஆனதாம். கதை மிகவும் பிடித்துப்போன நிலையில், ‘உங்க உதவியாளர் எப்படி?’ என இயக்குநரிடம் கேட்டார்களாம். நல்லவர், வல்லவர் என்றெல்லாம் உதவியாளரைப் பற்றி சிலாகித்த இயக்குநர், ‘என்னோட அடுத்தடுத்த படங்களுக்கு அவர் தேவை. அதனால் அவரை மறந்துடுங்க’ என்றாராம்!