Published:Updated:

மிஸ்டர் மியாவ்

வேதிகா
பிரீமியம் ஸ்டோரி
வேதிகா

சிவகார்த்திகேயனின் ‘பிரின்ஸ்’ படம், பிசினஸ்ரீதியாக அடுத்தகட்ட பாய்ச்சலைக் காட்டும் எனக் கணிக்கிறது கோடம்பாக்கம்

மிஸ்டர் மியாவ்

சிவகார்த்திகேயனின் ‘பிரின்ஸ்’ படம், பிசினஸ்ரீதியாக அடுத்தகட்ட பாய்ச்சலைக் காட்டும் எனக் கணிக்கிறது கோடம்பாக்கம்

Published:Updated:
வேதிகா
பிரீமியம் ஸ்டோரி
வேதிகா

கமல்ஹாசன் - ஹெச்.வினோத் இணையப்போகிறார்கள் என்பதுதான் கோடம்பாக்கத்தின் ஹாட் டாபிக். அஜித்தின் ஆஸ்தான இயக்குநராகிவிட்ட வினோத், எப்படி கமலின் விருப்பப் பட்டியலில் இடம்பிடித்தார் என்றால், இயக்குநர் லோகேஷ் கனகராஜைக் கைகாட்டுகிறார்கள். வினோத்தும் லோகேஷும் நல்ல நண்பர்கள். வினோத் எழுதிய அரசியல் கதை ஒன்றை லோகேஷ்தான் கமல் கவனத்துக்குக் கொண்டுபோயிருக்கிறார். ‘விக்ரம்’ ரிலீஸுக்கு முன்னரே ஸ்கிரிப்ட் புக் கமலுக்குக் கொடுக்கப்பட்டுவிட்டதாம். கமலுக்கு இப்போது ஆல் இன் ஆலாக இருக்கும் மகேந்திரன், அந்த அரசியல் கதையை செய்தே ஆக வேண்டும் என அடம்பிடிக்க, கமல் ஓகே சொன்னாராம்.

வேதிகா
வேதிகா

சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ படம் தேசிய விருதுகளைக் குவித்திருக்கும் நிலையில், மலையாள இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன், “தேசிய விருது என்பது இப்போது கொடுமையான பொழுதுபோக்காக மாறிவிட்டது. யார் யாருக்கெல்லாமோ விருதுகளை வாரி இறைத்திருக்கிறார்கள்…” என ஆவேசம்காட்டியிருக்கிறார். சூர்யாவை நேரடியாகத் தாக்கும்விதமாக இந்தக் கருத்து பரபரப்பாக, “தேர்வுக்குழுவைத்தான் கோபாலகிருஷ்ணன் விமர்சித்தார். சூர்யாவை அல்ல…” எனச் சமாளித்தார்கள். ஆனால், சூர்யாவின் மேனேஜர் தங்கதுரை தேர்வுக்குழுவில் இருந்த விவகாரத்தைக் குறிப்பிட்டு, சர்ச்சை சூடுபிடிக்கிறது.

வேதிகா
வேதிகா

இந்திப் பக்கம் போக நினைத்த இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், இப்போது சிம்பு பக்கம் திரும்பியிருக்கிறார். எவருக்கும் பிடிகொடுக்காத சிம்பு நேரம் ஒதுக்கிக் கதை கேட்க, ஒரு மணி நேரத்தில் மிரளவைத்தாராம் முருகதாஸ். விரைவில் முருகதாஸ் - சிம்பு கூட்டணியில் புதிய பட அறிவிப்பு வரலாம். முருகதாஸ் சன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் நல்ல நெருக்கத்தில் இருப்பதால், அவர்களே தயாரிக்க வாய்ப்பிருப்பதாகச் சொல்கிறார்கள்.

வேதிகா
வேதிகா

சிவகார்த்திகேயனின் ‘பிரின்ஸ்’ படம், பிசினஸ்ரீதியாக அடுத்தகட்ட பாய்ச்சலைக் காட்டும் எனக் கணிக்கிறது கோடம்பாக்கம். ‘டாக்டர்’, ‘டான்’ வரிசையில் ஹாட்ரிக் வெற்றிப் படமாக ‘பிரின்ஸ்’ அமையும் என விநியோக உரிமையைக் கைப்பற்ற பலத்த போட்டி நடக்கிறது. படத்தில், விடுதலைப் போராட்ட வீரரான சத்யராஜ் ஆங்கிலேயர்களை அறவே வெறுக்கக் கூடியவராம். அவருடைய மகனான சிவகார்த்திகேயன் ஆங்கிலேயப் பெண்ணை விரும்ப, குடும்பத்துக்குள் நடக்கும் காமெடி கச்சேரிதான் கதையாம். “சமீபத்தில் நான் நடித்த படங்களில் மனதுக்கு மிக நெருக்கமான கதை ‘பிரின்ஸ்’ படம்தான்” என சத்யராஜ் கொடுத்த சர்ட்டிஃபிகேட்டும் படத்தின் பிசினஸை எகிறவைத்திருக்கிறது.

உஷ்...

அசுர நடிகரின் சமீபத்திய ஆடியோ வெளியீட்டுவிழாவில், கதையின் நாயகியால் கலந்துகொள்ள முடியாத நிலையாம். ஆனாலும், அசுர நடிகர் வந்தே ஆக வேண்டும் என முதல்நாள் வலியுறுத்த, வீல் சேரில் வந்தார் நாயகி. “இவ்வளவு கஷ்டமான நிலைன்னு தெரியாம வற்புறுத்திட்டேன்…” என மணிக்கணக்கில் பேசி சாரி கேட்டாராம் அசுர நடிகர்.