அரசியல்
அலசல்
Published:Updated:

மிஸ்டர் மியாவ்

பூஜா ஹெக்டே
பிரீமியம் ஸ்டோரி
News
பூஜா ஹெக்டே

பல கமர்ஷியல் படங்களை இயக்கிய ஏ.வெங்கடேஷ், அவ்வப்போது அமையும் நல்ல பாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்துவருகிறார்.

‘சூரரைப் போற்று’ படம் தேசிய விருதுகளைக் குவித்ததால், பார்ட் 2 எடுக்க நினைக்கிறார் சூர்யா. தற்போது அக்‌ஷய் குமாரை வைத்து, ‘சூரரைப் போற்று’ படத்தின் இந்தி ரீமேக்கை எடுத்துவரும் இயக்குநர் சுதா கொங்கரா, பார்ட் 2-வுக்கான கதையை இன்னமும் யோசிக்கக்கூட இல்லையாம். சூர்யாவுக்காக அவர் ரெடி செய்துவைத்திருப்பது தாதாக்கள் சம்பந்தப்பட்ட கதையாம். தேசிய விருதுகளுக்குப் பிறகு, படத்தின் மீதான கவனம் பெரிதாகியிருப்பதால், பிசினஸ் விஷயங்களும் சாதகமாகும் என்றெண்ணி பார்ட்-2-வுக்கான கதையைச் செய்யும்படிச் சொல்கிறார்களாம்.

`பிக் பாஸி’ல் கவனம் பெற்ற ஸ்ருதி பெரியசாமி, சீக்கிரமே சினிமாவில் கால்வைக்கிறார். பலர் சினிமாவுக்கு அழைத்தபோதும், நல்ல கதைக்காகக் காத்திருந்த ஸ்ருதி, சமீபத்தில் கேட்ட அரசியல் கதை ஒன்றை ஓகே செய்திருக்கிறார். ‘ஹீரோயின் ஒரியன்டட் படமா?’ எனக் கேட்டால், “நல்ல கதை. நல்ல கதாபாத்திரம். ஹீரோவின் மனைவியாகத்தான் நடிக்கிறேன். சினிமா என்பது மிக வலிமையான ஊடகம். அதில் நல்ல கதாபாத்திரமாக நான் நின்றால் போதும். அதற்காகத் தேர்ந்தெடுத்த கதை இது” என்கிறார். ஹீரோ பெயர் கேட்டால், “அது சஸ்பென்ஸ்…” எனச் சிரிக்கிறார்.

மிஸ்டர் மியாவ்
பூஜா ஹெக்டே
பூஜா ஹெக்டே

பல கமர்ஷியல் படங்களை இயக்கிய ஏ.வெங்கடேஷ், அவ்வப்போது அமையும் நல்ல பாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்துவருகிறார். ‘Clap Ready’ என்கிற யூடியூப் சேனல் ஒன்றைத் தொடங்கியிருக்கும் அவர், சினிமாவில் நுழைவது தொடங்கி எத்தகைய முயற்சிகளால் ஜெயிக்க முடியும் என்கிற விவரங்கள் வரை தன் அனுபவங்களுடன் விளக்கிவருகிறார். ரஜினி தொடங்கி விஜய் வரையிலான பலருடனான அனுபவங்களையும் இந்தத் தளத்தில் சொல்லி, சினிமாவை நோக்கி வருபவர்களுக்குத் தன்னம்பிக்கை ஊட்டுகிறார் ஏ.வெங்கடேஷ்.

ஷாருக் கான் நடிப்பில், அட்லி இயக்கத்தில் உருவாகும் ‘ஜவான்’ படத்தை, நயன்தாராவின் 75-வது படமாக புரொமோட் செய்ய நினைத்தார்கள். ஆனால், ஷங்கரின் உதவியாளர் நிலேஷ் கிருஷ்ணாவின் கதையைக் கேட்டு ஓகே செய்திருக்கும் நயன்தாரா, அதையே தனது 75-வது படமாக அறிவிக்கப்போகிறார். அந்த அளவுக்கு அம்மணிக்கு அந்தக் கதை பிடித்துப்போனதாம். “இதுவரை நான் செய்திராத கேரக்டர்…” என நெருங்கியவர்களிடம் கதை குறித்துச் சிலாகிக்கிறார் நயன்தாரா. இந்தப் படத்தில் இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணாவுக்கு பக்கபலமாகத் தன் கணவர் விக்னேஷ் சிவனை ஸ்பாட்டிலேயே இருக்கும்படி வேண்டியிருக்கிறாராம் நயன்.

உஷ்...

அடுத்தடுத்து முன்னணி ஹீரோக்களை வைத்து வரிசையாகப் படங்களைத் தயாரிக்க நினைத்த மதுரைக்கார ஃபைனான்ஸியர், சமீபத்திய ரெய்டோற்சவத்தால் தயாரிப்புப் பணிகளைத் தள்ளிப்போட முடிவெடுத்திருக்கிறாராம். ‘அடுத்த வருடம்தான் தயாரிப்பு’ என அவர் சொல்ல, அவரிடம் கடன் பெற்ற ஹீரோக்கள் துள்ளிக் குதிக்காத குறையாகக் கொண்டாடினார்களாம்!