Published:Updated:

மிஸ்டர் மியாவ்

ராஷ்மிகா மந்தனா
பிரீமியம் ஸ்டோரி
ராஷ்மிகா மந்தனா

`ரஜினி - நெல்சன் கூட்டணி நிச்சயம் பட்டையைக் கிளப்பும்’ என உறுதியாக நம்புகிறது சன் பிக்சர்ஸ் நிறுவனம்

மிஸ்டர் மியாவ்

`ரஜினி - நெல்சன் கூட்டணி நிச்சயம் பட்டையைக் கிளப்பும்’ என உறுதியாக நம்புகிறது சன் பிக்சர்ஸ் நிறுவனம்

Published:Updated:
ராஷ்மிகா மந்தனா
பிரீமியம் ஸ்டோரி
ராஷ்மிகா மந்தனா

அடுத்து விஜய் - அட்லி கூட்டணி மீண்டும் அமைந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை என்கிறார்கள். ஷாருக் கானை வைத்து அட்லி இயக்கும் இந்திப் படம் இழுத்துக் கொண்டே போகும் நிலையில், விஜய்க்காக அட்டகாச மாஸ் மசாலா கதை ரெடி செய்திருக்கிறாராம் அட்லி. கடந்த வாரம் விஜய்யை நேரில் சந்தித்து முழுக் கதையையும் சொன்னாராம். “எனக்குன்னு கதை பண்ற ஒரே ஆள் நீதான்டா…” என விஜய் சொன்ன வார்த்தைகளை வெகுமதியாக எல்லோரிடமும் சொல்லிச் சிலிர்க்கிறார் அட்லி.

‘உடன்பிறப்பே’ படம் முடித்து ஒன்றரை வருடங்கள் ஆகிவிட்டன. இன்னும் எந்தப் படத்திலும் கமிட் ஆகவில்லை ஜோதிகா. லோகேஷ் கனகராஜ் டீமில் ஆஸ்தான வசனகர்த்தாவாகப் பணியாற்றிய பொன்.பார்த்திபன், ‘பொன்மகள் வந்தாள்’ பட இயக்குநர் ஃபிரெட்ரிக், ‘ராட்சசி’ பட இயக்குநர் கௌதம் ராஜ் மூவரும் கதை சொல்லி ஓகே வாங்கிவைத்திருக்கிறார்கள். ஆனால், `குழந்தைகளின் படிப்பு தான் முக்கியம்’ என முடிவெடுத் திருக்கும் ஜோதிகா, இன்னும் சில மாதங்கள் கழித்துத்தான் படம் குறித்து யோசிக்கும் ஐடியாவில் இருக்கிறாராம்!

மிஸ்டர் மியாவ்
மிஸ்டர் மியாவ்

பக்கா வில்லேஜ் படம் ஒன்றில் நடிக்க விரும்புகிறார் உதயநிதி. மாரி செல்வராஜ் இயக்கும் ‘மாமன்னன்’ வில்லேஜ் படமாக இருந்தாலும், உரத்த அரசியலைப் பேசுகிற போர்க் குரல் படம். ஆனால், உதயநிதி விரும்புவதோ, காமெடியும் கலகலப்புமாக நகர்கிற கிராமத்துக் திரைக்கதையை. இது தெரிந்து ஏற்கெனவே உதயநிதியை வைத்துப் படம் இயக்கிய சீனு ராமசாமி, எழில், தளபதி பிரபு உள்ளிட்டோர் வில்லேஜ் கதைகளுடன் தயாராகிவருகிறார் களாம். பி & சி ஆடியன்ஸ் மனதில் நங்கூரமாக இடம்பிடிக்கத்தான் வில்லேஜ் கதைகளை விரும்பத் தொடங்கியிருக்கிறாராம் உதய்.

`ரஜினி - நெல்சன் கூட்டணி நிச்சயம் பட்டையைக் கிளப்பும்’ என உறுதியாக நம்புகிறது சன் பிக்சர்ஸ் நிறுவனம். ஆரம்பத்தில் சிக்கனம், கெடுபிடி காட்டியவர்கள், இப்போது இயக்குநர் நெல்சனுக்கு எல்லாவிதச் சலுகைகளையும் வாரி வழங்குகிறார்களாம். காரணம், ரஜினி. “நல்லா கதை பண்ணியிருக்கார். காமெடி தொடங்கி ஹீரோயிசம் வரை பின்னியெடுக்கிறார். ஒரு படத்தின் சறுக்கலைவைத்து அவரை எடைபோடக் கூடாது” என ரஜினி கொடுத்த சர்டிஃபிகேட்தான் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தை நெல்சன்மீது பாசம் காட்டவைத்திருக்கிறதாம்!