அரசியல்
அலசல்
Published:Updated:

மிஸ்டர் மியாவ்

மிருணாளினி ரவி
பிரீமியம் ஸ்டோரி
News
மிருணாளினி ரவி

எப்போதுமே நடிகர் சூர்யாவுக்கு எதிரான ஒரு கூட்டம் கோடம்பாக்கத்தில் வேலை பார்த்துக் கொண்டேயிருக்கும். சூர்யாவுக்கு எதிரான கலக வேலைகளைக் கிளப்பிக்கொண்டேயிருக்கும்.

மதுரை அன்புச்செழியன் வட்டாரத்தில் நடந்த ரெய்டு, அஜித் படத்தை இழுத்தடிக்க வைத்திருக்கிறது. தயாரிப்பாளர் போனி கபூருக்கு உரிய தொகையை ஷூட்டிங் நேரத்தில் தருவதாகச் சொல்லியிருந்தாராம் அன்புச்செழியன். பாதி ஷூட்டிங் முடிந்த நேரத்தில் ரெய்டு நடந்ததால், பணமுடக்கம் ஏற்பட்டு அன்புச் செழியனால் பட்டுவாடா செய்ய முடியவில்லையாம். அதனால், வெளிநாடு போய் லொகேஷன் பார்த்து விட்டு வந்த இயக்குநர் ஹெச்.வினோத்தும், படக்குழுவும் ஷூட்டிங் போக முடியாமல் காத்துக் கிடக்கிறார்கள். பணத்தால் ஷூட்டிங் நடக்கவில்லை என வெளியே தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக, அஜித் இல்லாத போர்ஷனை சென்னையில் நடத்தி வருகிறார்கள். போனி கபூரால் அன்புச்செழியனை போனிலோ, நேரிலோ அணுகவே முடியாத நிலையாம். அன்புச்செழியனின் கிரீன் சிக்னலுக்காக அஜித் படம் வெயிட்டிங்கில் இருப்பதுதான் இப்போதைய ஹாட் நியூஸ்!

எப்போதுமே நடிகர் சூர்யாவுக்கு எதிரான ஒரு கூட்டம் கோடம்பாக்கத்தில் வேலை பார்த்துக் கொண்டேயிருக்கும். சூர்யாவுக்கு எதிரான கலக வேலைகளைக் கிளப்பிக்கொண்டேயிருக்கும். அந்த வகையில் ‘சூர்யாவுக்குக் கொடுக்கப்பட்ட தேசிய விருதைத் திரும்பப் பெற வேண்டும்’ எனச் சொல்லி டெல்லிக்குக் கடிதம் எழுதியிருக்கிறார்கள் தமிழ் நாட்டுப் புண்ணியவான்கள் சிலர். “விருதுக்குழுவில் இருப்பவர்கள், தேர்வாகும் ஆட்களுடன் எந்தவிதத் திலும் சம்பந்தப்பட்டவர்களாக இருக்கக் கூடாது என்பது விதி. ஆனால், சூர்யாவின் மேனேஜராக இருக்கும் தங்கதுரை எப்படி விருதுக் குழுவில் இடம் பிடித்தார்?” எனக் கேட்டிருக்கிறார்கள் புகார் புள்ளிகள். உண்மையில், தங்கதுரை சூர்யாவுக்கு மேனேஜராகப் பணியாற்றியது பல காலத்துக்கு முன்னரே முடிந்துவிட்டது. இப்போது ஜோதிகாவுக்கு மட்டுமே மேனேஜராகப் பணியாற்றி வருகிறார் தங்கதுரை. ‘வரட்டும், பார்த்துக்கொள்ளலாம்’ என தைரியமாகச் சொல்லியிருக்கிறாராம் சூர்யா!

மிருணாளினி ரவி
மிருணாளினி ரவி
மிருணாளினி ரவி
மிருணாளினி ரவி
மிருணாளினி ரவி
மிருணாளினி ரவி

சன் டி.வி-யின் வெயிட்டான புரொமோஷனில், செம கலெக்‌ஷனை அள்ளியிருக்கிறது தனுஷின் ‘திருச்சிற்றம்பலம்’ படம். பல காலமாக வீழ்ந்துகிடந்த தனுஷ் மார்க்கெட், இதில் சட்டென எழுந்து நிற்கிறது. ஓடிடி தளங்களும் தனுஷின் அடுத்தடுத்த படங் களுக்கு நல்ல விலைவைக்கக் காத்திருக்கின்றன. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனுஷைவைத்து இரண்டு படங்களைத் தயாரிக்கப் பேசிவருகிறது. ‘திருச்சிற்றம் பலம்’ பட டீமுக்கு அடுத்த அட்வான்ஸ் கொடுத்திருக் கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம், தனுஷை பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்கவைக்கவும் பேச்சுவார்த்தை நடத்திவருகிறது!

உஷ்...

வருத்தப்படாத நடிகரின் வீரமான படப்பிடிப்பில் பணரீதியான சிக்கலாம். அதனால், ஷூட்டிங்கை நிறுத்த வேண்டிய நிலை ஆனதாம். மாற்று ஏற்பாடுகளைச் செய்துகொடுத்து சட்டெனத் தீர்வுகண்ட வருத்தப்படாத நடிகர், ‘இனி இப்படி நிகழக் கூடாது’ எனக் கறாராகச் சொல்லி, அதன் பிறகுதான் அரிதாரம் பூசப்போனாராம்!