Published:Updated:

மிஸ்டர் மியாவ்

தர்ஷா குப்தா
பிரீமியம் ஸ்டோரி
தர்ஷா குப்தா

தர்ஷா குப்தாஇயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி திரைத்துறைக்கு வர முடிவெடுத்தவுடனேயே அவரின் குடும்பம் டிக் அடித்த பெயர் சிவகார்த்திகேயன்.

மிஸ்டர் மியாவ்

தர்ஷா குப்தாஇயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி திரைத்துறைக்கு வர முடிவெடுத்தவுடனேயே அவரின் குடும்பம் டிக் அடித்த பெயர் சிவகார்த்திகேயன்.

Published:Updated:
தர்ஷா குப்தா
பிரீமியம் ஸ்டோரி
தர்ஷா குப்தா

இயக்குநர் பா.இரஞ்சித்தின் ‘நட்சத்திரம் நகர்கிறது’ படம் வசூல்ரீதியான வரவேற்பைப் பெறாவிட்டாலும், கடுமையான விவாதத்தையும் அதிர்வலைகளையும் உருவாக்கியிருக்கிறது. “நான் எதிர்பார்த்ததும் இதைத்தான்…” என அலட்டிக்கொள்ளாமல் சொல்லும் இரஞ்சித், அடுத்தகட்டமாக விக்ரமை வைத்து இயக்கும் படத்துக்குப் போய்விட்டார். கோலார் தங்க வயலில் தமிழர்கள் எத்தகைய துயரங்களை எதிர்கொள்கிறார்கள் என்பதுதான் கதைக்களம். இதே மாதிரியான ஒரு கதையை இயக்குநர் வெற்றிமாறனும் உருவாக்கிவைத்திருந்தாராம். ஆனாலும், இரஞ்சித் முந்திக்கொள்ள, ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பில் சீக்கிரமே தொடங்கவிருக்கிறது இந்த பான் இந்தியா படம்!

இயக்குநர் பாலாவுக்கும், நடிகர் சூர்யாவுக்குமான மோதல் இன்னமும் முடிவுக்கு வரவில்லை. அதனால், பாதியில் நிற்கும் அந்த ஷூட்டிங்கை முடிக்காமலேயே சிறுத்தை சிவா இயக்கத்தில் அடுத்த படத்தைத் தொடங்கவிருக்கிறார் சூர்யா. ‘அண்ணாத்த’ படத்துக்கு முன்னரே சூர்யாவிடம் ஒன்லைன் சொல்லி, ஓகே வாங்கி வைத்திருந்தாராம் சிறுத்தை சிவா. ‘அண்ணாத்த’ படம் கடும் விமர்சனத்தை எதிர்கொண்ட நிலையில், சூர்யா தன்னை மீண்டும் அழைக்க வாய்ப்பில்லை என நினைத்தாராம் சிவா. ஆனால், கொடுத்த வாக்கைக் காப்பாற்றும்விதமாக முழுக் கதையையும் கேட்டு ஷூட்டிங் கிளம்ப ரெடியாகிவிட்டார் சூர்யா. இதில் பாலிவுட் நடிகை திஷா பதானியை சூர்யாவுக்கு ஜோடியாகக் களமிறக்குகிறார்கள்.

தர்ஷா குப்தா
தர்ஷா குப்தா
தர்ஷா குப்தா
தர்ஷா குப்தா
தர்ஷா குப்தா
தர்ஷா குப்தா

தர்ஷா குப்தாஇயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி திரைத்துறைக்கு வர முடிவெடுத்தவுடனேயே அவரின் குடும்பம் டிக் அடித்த பெயர் சிவகார்த்திகேயன். சிவாவுக்கு ஜோடியாக நடித்தால்தான் ஒரே படத்தில் பெரிய கவனம் பெறலாம் என நினைத்து, அவரை அணுகினார்களாம். ஆனால், சிவகார்த்திகேயன் அப்போது செம பிஸி. ‘விருமன்’ படம் விமர்சனரீதியாகக் கழுவி ஊற்றப்பட்டாலும், அதிதியின் நடிப்பு பாஸ் மார்க் வாங்கியது. பட ரிலீஸுக்கு முன்னரே அதிதியின் நடிப்பையும், நற்பெயரையும் விசாரித்துத் தெரிந்துகொண்ட சிவகார்த்திகேயன் ‘மாவீரன்’ படத்தில் அவரையே ஜோடியாக்கினார். ‘பொண்ணு பின்னுது…’ என சர்டிஃபிகேட் கொடுத்து ஷங்கர் குடும்பத்தை நெகிழவைத்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.

இயக்குநர் விக்னேஷ் சிவனைக் கரம்பிடித்த நாளிலிருந்து, `நயன்தாரா நடிப்புக்கு முழுக்குப்போடப் போகிறார்’ என்கிற செய்தி பரபரப்பாகிவருகிறது. ஆனால், இரண்டு கதைகள் கேட்டு சமீபத்தில் ஓகே செய்து வைத்திருக்கிறாராம் நயன்தாரா. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் மீண்டும் ஒரு படம் பண்ண வேண்டும் என்கிற ஆசையும் அம்மணிக்கு இருக்கிறதாம். அதனால், ‘நடிப்புக்கு முழுக்கு’ என்பதெல்லாம் வதந்தி என்கிறார்கள் உறுதியாக.

உஷ்...

மணக்கும் காமெடி நடிகரின் ஆன்மிக ஆர்வம் நாளுக்கு நாள் பெரிதாகி, நட்பு வட்டாரத்தையே திகைக்க வைத்திருக்கிறதாம். ‘சுத்த சைவம்’ என்கிற பெயரில் சுற்றியிருப்பவர்களின் வாயையும் கட்டிப்போட்டு விடுகிறாராம். வாரத்தில் இரண்டு நாள்கள் விரதம் வேறாம். ‘சீக்கிரமே மடம் ஒன்றை ஆரம்பித்து சாமியாராகவே ஆகிவிடுவார்போலிருக்கிறது’ என்கிறார்கள் ஆதங்கமாக!