Published:Updated:

மிஸ்டர் மியாவ் - கரு.பழனியப்பன் ஹீரோ

ராஷ்மிகா மந்தனா
பிரீமியம் ஸ்டோரி
ராஷ்மிகா மந்தனா

பத்திரிகையாளர், எழுத்தாளர் எனப் பன்முகம்கொண்ட சந்திரா தங்கராஜ், கரு.பழனியப்பனை ஹீரோவாக்கி ‘கள்ளன்’ என்கிற படத்தை இயக்கி முடித்திருக்கிறார்.

மிஸ்டர் மியாவ் - கரு.பழனியப்பன் ஹீரோ

பத்திரிகையாளர், எழுத்தாளர் எனப் பன்முகம்கொண்ட சந்திரா தங்கராஜ், கரு.பழனியப்பனை ஹீரோவாக்கி ‘கள்ளன்’ என்கிற படத்தை இயக்கி முடித்திருக்கிறார்.

Published:Updated:
ராஷ்மிகா மந்தனா
பிரீமியம் ஸ்டோரி
ராஷ்மிகா மந்தனா

‘பகிரி’, ‘பெட்டிக்கடை’ ஆகிய படங்களை இயக்கிய இசக்கி கார்வண்ணன் நல்ல தமிழார்வலர். சமீபத்தில் இவர் சொன்ன கதை இயக்குநர் சேரனுக்கு மிகவும் பிடித்துப்போக, “தாமதமின்றி தயாரிப்பாளரைப் பிடியுங்கள்… நான் ஹீரோவாக நடிக்கிறேன்” எனச் சொல்லியிருக்கிறார். இதில் பரவசமான இசக்கி கார்வண்ணன், தன்னுடைய தயாரிப்பிலேயே படத்தைத் தொடங்கியிருக்கிறார். ‘தமிழ்க்குடிமகன்’ எனத் தலைப்பிட்டு, புயல் வேகத்தில் ஷூட்டிங்குக்குக் கிளம்பிவிட்டார்கள்.

இயக்குநர் ஹரி, நடிகர் அருண்குமாரை வைத்து ‘யானை’ படத்தை முடித்திருக்கிறார். இந்தக் கதையை ஹரி முதலில் சூர்யாவுக்குத்தான் சொன்னார். ‘அருவா’ என்கிற தலைப்பில் அறிவிப்பும் வெளியான நிலையில், சூர்யா சில திருத்தங்களைச் சொல்ல, ஹரி மறுக்க, பாண்டிராஜ் இயக்கத்தில் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தில் நடிக்கப்போய்விட்டார் சூர்யா. இந்த நிலையில் ‘யானை’ படத்தைப் பேய் வேகத்தில் எடுத்து முடித்த ஹரி, சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ படம் ரிலீஸாகும் பிப்ரவரி 4-ம் தேதியே தன் படத்தையும் ரிலீஸ் செய்ய நினைக்கிறார். நேரடி மோதல் தூள் கிளப்பினால் ஆச்சர்யத்துக்கு இல்லை.

மிஸ்டர் மியாவ் - கரு.பழனியப்பன் ஹீரோ
மிஸ்டர் மியாவ் - கரு.பழனியப்பன் ஹீரோ
மிஸ்டர் மியாவ் - கரு.பழனியப்பன் ஹீரோ
மிஸ்டர் மியாவ் - கரு.பழனியப்பன் ஹீரோ

பத்திரிகையாளர், எழுத்தாளர் எனப் பன்முகம்கொண்ட சந்திரா தங்கராஜ், கரு.பழனியப்பனை ஹீரோவாக்கி ‘கள்ளன்’ என்கிற படத்தை இயக்கி முடித்திருக்கிறார். சமீபத்தில் ரிலீஸான படத்தின் முன்னோட்டத்துக்கு நல்ல வரவேற்பு. இயக்குநர் அமீர் பட்டறையிலிருந்து வந்திருக்கும் சந்திரா, திருட்டை வழக்கமாக வைத்திருக்கும் களவு வாழ்வியலைக் கதையாகப் பின்னியிருக்கிறார். தலைப்பைவைத்து, சாதிரீதியான படம் என நினைத்து சிலர் போலீஸில் புகார் கொடுக்க, ‘படத்துக்கான பப்ளிசிட்டியாக இருக்கட்டும்’ எனச் சொல்லி சந்திராவை சைலன்ட்டாக்கியிருக்கிறது படக்குழு.

அஜித்தின் ‘வலிமை’ படத்துக்காக இயக்குநர் விக்னேஷ் சிவன் எழுதிய ‘நான் பார்த்த முதல் முகம் நீ’ பாடல் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றிருக்கிறது. அம்மா - மகன் பாசத்துக்கான அடையாளமாகப் படத்தின் காட்சியமைப்பை இயக்குநர் ஹெச்.வினோத் போனில் சொல்ல, அடுத்த சில மணி நேரத்தில் இந்த அசத்தல் பாடலை எழுதி அனுப்பினாராம் விக்னேஷ் சிவன். காவல்துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற தன் தாய்க்கு இந்தப் பாடலைச் சமர்ப்பணம் செய்திருக்கிறார் விக்னேஷ் சிவன்.

“இப்படியொரு மொக்கைப் படத்தை எடுத்துவெச்சுக்கிட்டுத்தான் எல்லாப் படங்களையும் நீங்க கிண்டல் பண்ணுனீங்களா?” என ‘யூடியூப் சினிமா விமர்சகர்’ பிரசாந்த், புளூ சட்டை மாறனின் ‘ஆன்டி இண்டியன்’ படத்தைக் கழுவி ஊற்ற, அதைவைத்து ஆன்லைனில் ஏக ரகளை. கூடவே, ‘தேக் தமாஷா தேக்’ என்கிற இந்திப் படத்தின் கதையை உருவித்தான் மாறன் படம் செய்திருப்பதாகவும் விமர்சனங்கள் க்யூ கட்டின. இவற்றையெல்லாம் கொஞ்சமும் சட்டை செய்யாமல், இயக்குநர் வேலு பிரபாகரனுடன் இணைந்து அடுத்த படத்துக்கான கதையைத் தீவிரமாக ரெடி செய்துவருகிறார் மாறன்.

உஷ்…

நீண்ட இடைவெளிக்குப் பிறகு, விலங்கொன்றின் பெயரை அடைமொழியாகக்கொண்ட படத்தைத் தொடங்கியிருக்கும் காமெடி ஹீரோ, டிஸ்கஷன் என்கிற பெயரில் கடற்கரையோர பிரமாண்ட ஹோட்டலை வீடாகவே மாற்றிவிட்டாராம். லட்சக்கணக்கில் பில் எகிறியும் அறையைக் காலி செய்யாமல் அடம்பிடிக்கிறாராம். #சூதுன்னா என்னன்னு எங்களுக்கும் தெரியும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism