Published:Updated:

மிஸ்டர் மியாவ்

ஆஷிகா ரங்கநாத்
பிரீமியம் ஸ்டோரி
ஆஷிகா ரங்கநாத்

ஆஷிகா ரங்கநாத்

மிஸ்டர் மியாவ்

ஆஷிகா ரங்கநாத்

Published:Updated:
ஆஷிகா ரங்கநாத்
பிரீமியம் ஸ்டோரி
ஆஷிகா ரங்கநாத்

‘நடிகர்கள் தங்களின் உதவியாளர்களுக்கான பேட்டா, சம்பளம் உள்ளிட்டவற்றை அவர்களே வழங்க வேண்டும். உள்ளூரில் படப்பிடிப்பு நடக்கிறபோது தங்குமிடம், போக்குவரத்துச் செலவை அவர்களே ஏற்க வேண்டும்’ என்று தெலுங்கு திரைப்பட வர்த்தக சபை பிறப்பித்திருக்கும் உத்தரவு, தமிழ்த் திரையுலக நடிகர்களைத் திகைக்கவைத்திருக்கிறது. அடுத்தபடியாக, தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்களும் இந்த அறிவிப்பை வெளியிட வாய்ப்பிருப்பதாக நினைக்கிறார்கள் நம்மூர் நடிகர்கள். ஆனால், தமிழகத்தில் பெயரளவுக்கு மட்டுமே இயங்கிவரும் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், அத்தகைய அறிவிப்பை வெளியிட்டு நடிகர்களின் பொல்லாப்பைச் சம்பாதிக்க விரும்பாது என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

ஆஷிகா ரங்கநாத்
ஆஷிகா ரங்கநாத்
ஆஷிகா ரங்கநாத்
ஆஷிகா ரங்கநாத்

‘ஆர்யாவுடன் இணைந்து நடிக்க நான் எப்போதும் ரெடி’ என விழா மரியாதைக்காகப் பேசினாராம் நடிகர் சந்தானம். ஆனால், இருவரையும் வைத்துப் படம் செய்ய ரெடியாகிவிட்டார்கள் இயக்குநர்கள். சமீபத்தில் ஆர்யாவுக்குக் கதை சொன்ன மூன்று இயக்குநர்கள் சந்தானம் காம்பினேஷனில் கதையை விவரித்தார்களாம். ‘மச்சான், நாம நிஜமாவே சேர்ந்து நடிப்போமா?’ என ஆர்யா கேட்க, சந்தானமும் ஓகே சொல்லிவிட்டாராம். விரைவில் இருவரும் ரகளை கிளப்பும்விதமான கதை படமாக வாய்ப்பிருக்கிறது.

ஆஷிகா ரங்கநாத்
ஆஷிகா ரங்கநாத்

ரஜினியுடன் ஜோடி சேர்ந்த நேரமோ என்னவோ… தமன்னாவுக்கு நல்ல வாய்ப்புகள் கைகூடி வரத் தொடங்கியிருக்கின்றனவாம். இத்தனை காலமாக இண்டஸ்ட்ரியில் இருந்தும், மலையாளப் பக்கம் போகாமலே இருந்தார் தமன்னா. இப்போது, திலீப் ஜோடியாக மலையாளத்தில் கால் பதிக்கிறார். அடுத்தடுத்தும் மலையாளத்தில் வலம்வர, தீவிரமாகக் கதை கேட்டுவருகிறார் தமன்னா.

நடிகர் தனுஷுக்கு மிக நெருக்கமான நண்பராகத் தற்போது வலம்வருபவர் யார் தெரியுமா... கருணாஸ் மகன் கென். தெலுங்கில் `வாத்தி’ படத்தில் நடிக்கும் தனுஷ், கென்னுக்கும் ஒரு முக்கிய பாத்திரத்தை ஒதுக்கிக் கொடுக்கச் சொன்னாராம். ஷூட்டிங்கில் மட்டும் அல்லாமல் வீட்டிலிருக்கும்போதும் இசை, பாடல் என கென்னுடனேயே நேரம் கழிக்கிறாராம் தனுஷ். கென்னும் தனுஷின் அறிவிக்கப்படாத ரசிகர் மன்றத் தலைவராக அவர் புகழ் பாடிக்கொண்டிருக்கிறாராம்.

உஷ்...

வெற்றிகரமான இயக்குநரின் படம் அனுமார் வாலாக நீண்டுகொண்டே போனதால், வேறு வழியில்லாமல் ஆளும் தரப்பின் வாரிசிடம் பிசினஸ் பேசி முடித்துவிட்டாராம் தயாரிப்பாளர். படத்தை முடித்து அதன் பிறகு விற்றிருந்தால், இதைவிட நல்ல ரேட்டுக்குக் கைமாற்றியிருக்கலாமாம்!